Saturday, August 19, 2006

அரோவானா மீனாக்ஷி

மீனாட்சி என்று பெயர் சூட்டிக்கொண்ட இந்த அரோவானா வகை fஃரண்ட் எங்க வீட்டுக்கு வந்து 4 வருடம் ஆகிறது. 4 இன்ச் அளவில் அவள்/அவன் வந்த போது
எனக்கு கொஞ்சம் சந்தேகம் தான்.எவ்வளவு நாள் வாழ்வோ என்று.


ஏனெனில் அப்போது எங்கள் வீட்டுக்கு திடீர் மீனயோகம் அடிக்கும் வருடம்.
மீன்கள் வரும்,
நீந்துவதற்குப் பதிலாக மிதக்கும்.
பிறகு பக்கத்து வீட்டுப் பூனைக்கு உணவாக ஆகிவிடும்.
இதே போல் வாள மீன் விலாங்கு மீன் தவிர மத்த மீன் வகையறாக்கள் வருவதும்
''பெல்லி அப் ''செய்வதும்
நாங்கள் வருத்தப் படுவதும் நடந்து வந்தது.

அக்கம்பக்கம் பசங்க எல்லாம் "யேய்!! மீன் வரப்போரது " 'என்று வந்து பார்ப்பதும், 'அச்சச்சோ இதுவும் போயிடுத்தா '
எண்று உச்சுக் கொட்டுவதும் வழக்கமாகி விட்ட வேளையிலே.... எங்க வீட்டு எஜமானருடைய(நிஜமாகவே அவர்தான் எஜமானர்) உடற்பயிற்சியாளர்,

இந்த அரோவானா மீனை வளர்ப்பது பற்றீ ரொம்ப சிறப்பாக எடுத்து சொன்னார்.
'அடக் கடவுளே இன்னோரு ஜீவனா' என்று முதலில் தோன்றினாலும் அவர் சொன்ன அடுத்த நாளெ,
இந்த ஆசாமி (நம்ம மீனாடசி)ஒரு பாலிதீன் பையில் துள்ளிக்கொண்டு வந்து விட்டார்.

என்னுடைய (வேறு மாதிரிப் பார்த்த )கண்களுக்கு(ஜாண்டிஸ் eyes... சொல்லக் கூடாது) அது பரிதவிப்பதாகத் தோன்றியது.


இந்த மீனோடு வந்த உதவியாளர், அதற்கு உணவும் கொடுத்து விட்டுப் போவார் என்ற நினைப்பில் நாங்கள் பராமரிப்பு பற்ரிய விவரங்களைக் கேட்கும் போது தான், தெரியும், வந்திருப்பவர் பேரு.

அரோவானா வாம் .



live fish சாப்பிடுகிறவர்.

சகலசைவப் பழக்கங்களையும் பின்பற்றும் வீட்டில்
உயிரொடு வாங்கித் தொட்டியில் போட்டு அது சாப்பிடுவதை வேறு பார்க்கணுமா?,சரிப்படாதே' என்று நான் வாயைத் திறப்பதற்குள், எ-ர் சரிப்பா நான் பாத்துக்கிறேன் என்று சொல்லி வழிஅனுப்பி வைத்தார்.

அப்போது ஆரம்பித்தது மத்ஸ்யாவதாரப் பெருமை.
உண்மையாகவே இந்த வகை மீன் டிஸ்கவரி சானலில் வந்ததாம்.
அதன் விஸ்வரூபம் 6 அடியாம்.
வளர வளரத் தொட்டி பெரிசாக வேணுமாம்.
நான் நம்பவில்லை.
எல்லாம் சுத்தமான ஹம்பக்.
சும்மா மார்க்கெடிங் பேச்சு என்ற யோசனையில், முதலில் 50 பைசா மீன் இரையாகப் போடலாம்னு நினைத்து,

இன்னொரு மீன்கள் விற்கும் கடைக்கு( அதாவது மீன் சாப்பிடற மீன் விற்கும் கடை. நீங்கள் வேறு ஏதாவது கற்பனை செய்ய வேண்டாம்)
போனோம்.
அவனுக்கு ஒரே குஷி.
'என்ன சார் அரோனாவா. ??வீட்டுக்கு வாஸ்துப்படி நல்லது சார். !
இப்படியே தினம் 10 பொடுங்க. அப்பறம் வளந்தப்புறம்
பெரிசு போடலாம் என்று ஒரு 20 கறுப்பு கலர் மோல்லி எனும் மகிழ்ச்சியாகத் தங்களுக்கு நேரப்போவதைத் தெரியாமல் ஆடிக் கொண்டிருந்த ஒரு ''இன்ச்'' மீன்களைக் கொண்டுவந்தோம்.

வழி முழுவதும் இதென்னடா காலம். ஒரு வேளை இந்த அரோனா போன ஜன்மத்தில் நமக்கு விருந்தாளியோ,மாமியார்,மாமனாரோ இல்லாட்ட ஹாஸ்டலில் விடப்பட்டு சாப்பாட்டுக்கு நாம ஏங்க வைத்த பிள்ளையோ என்றெல்லாம் நாடி ஜோஸ்ய ரேஞ்சில் மனசு ஓடுகிறது.


இரண்டு வாரம் முன்னால் எங்கள் வீட்டுக்கு வந்த

(பொழுது போகாமல் எல்லாருடைய சர்வ நாடியையும் ஆருடம் பார்த்து ஒரு வழி பண்ணுகிறவர்) so called சினேகிதர்
என் கையைப் பார்த்து உங்களுக்கு 4 குழந்தைகள் பிறந்து இருக்கணுமே என்று கேட்டிருந்தார்.
சும்மா கேள்வி கேட்டாலே முழிக்கும் வகை நான்.
இந்த மாதிரி வாழ்க்கையே கேள்விக்குறி மாதிரி ஒரு குண்டு போட்டார்னால்?
வெலவெலத்து விட்டது.
அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லையே.
எங்களூக்கு இந்த 3 குழந்தைகள் தான்.

வேற ஒண்ணூம் தெரியாதே என்று நான் அவஸ்தைப்பட
இவர் உள்ளுக்குள் சிரிப்பு.
வெளில சீரியஸாக வைத்துக் கொண்டு(ஜாதக ஜோசியமெல்லாம் நான் தான்) கவனிக்கிறார்.
என்னவெல்லாமொ நினைப்பு வருகிறது. ஒரு வேளை ' பழைய சினிமாக்கள் மாதிரி ஏடாகூடமாக ஏதாவது நடந்து
இருக்குமோ?
குழந்தைகள் அத்துவானக் காட்டில் பிறக்கவில்லையே.
அப்படி 'பார் மகளே பார்'
ஸ்டைலில் நடக்கச் சான்ஸே இல்லை.

எல்லோரும் வரப் போகத்தானே இருந்தார்கள்.? இப்படி நான்
மாயமோஹினி trailer மாதிரி ரீவைண்ட் பண்ண,
அவர் என் கையை இப்படித் திருப்பிப் பார்த்து ஆமாம்மா உங்களுக்கு மூன்று தான் என்று அசடு வழிந்தது,
இப்போது நினைவுக்கு வருகிறது. அதாவது feed fish வாங்கி வரும்போது.
எப்படியோ மீனும் வளர்ந்து மீனாக்ஷி என்று நாமமும் சூட்டி
நாளிரு மேனி பொழுதிரு வண்ணம் வளர்ந்து இப்போது 3 அடி நீளத்தில இருக்காங்க.
விட்டா வளருவாங்க.
எங்கே போறது அவ்வள்வு பெரிய தொட்டிக்கு.?
அப்புறம் நாங்கள் இடம் மாற வேண்டியதுதான்.
அதாவது சுவரோரம் உட்கார வேண்டி வரும்.
அவருக்கு தனி வாட்டர் purifier, air cleaner ,லைட் தனி.
அவரு தொட்டிக்கு உள்ள இருந்தே நம்மளை சர்வே பண்ணுவாரு.
வர சைவ ஆளுங்களுக்கு எல்லாம், 'சுத்தி வரும் குட்டி மீன்கள் பெரிசோட கூட விளையாடும் .just company'என்று சொல்லுவோம்
இப்போது எல்லோருக்கும் தெரியும். big eats small,
என்ன செய்வது!

பக்கத்தில போனா அம்மா என்கிறது.
என்னது மீனாவது குரல் கொடுப்பதாவதுனு ஒரு மாதிரி என்னைப் பார்க்க வேண்டாம்.
மீனாட்சிக்கு வேற யாரையும் தெரியாதே.
அதனாலே தன் மொழியில் என்னைக் கூப்பிடுகிறது.
அவ்வாளவுதான்.


// posted by manu @ 6:52 PM
Comments:


மீனாக்ஷிக்கு இன்னும் கொஞ்சம் பெரிய படமா போட்டிருக்கலாம்ல? :)
# posted by பொன்ஸ் : 9:52 PM
மீனாட்சி !!! யாரு வந்துஇருக்காங்க பாரு.!!பொன்ஸ்!வாங்கப்பா.மினாட்சியோட புதுப் படங்கள் பசங்களோட செல் போனில் இருக்கின்றன. அடுத்த போஸ்டில் போடறேன்.நல்லா இருக்கிங்களா? காபி சரியாப் போட்டு ரசிக்க முடிகிறதா?இப்போது இந்த வெறும் மீனாக்ஷியா,,இல்லை மீனாட்சிசுந்தரமா தெரியலை.
# posted by manu : 6:23 AM
மூணடி நீளமா? என்னப்பா முத்துமுத்தா மக்காச்சோளம் மாதிரி இருக்கான்?

அவனுக்குத் துணை வேணாமாமா?

ஒண்டியா போரடிக்காதா?
# posted by துளசி கோபால் : 8:52 AM
வேணூம்ப்பா. இப்போ வாங்கிப் போட்டா சண்டை வருமாம்.
ஏன்னா இது சைசுக்கு அது இருந்தால் இரண்டுமே சண்டைக்கோழியாகுமாம்.
அநேகமா அடுத்த பிறவிக்கு இப்பவே அடி போட்டுவிட்டேன்னு நினைக்கிறேன்.
அப்பவும் இதே மாதிரி 2 வந்து நிக்கப் போறது.:-)))
# posted by manu : 12:36 PM
Post a Comment



<< Home

அம்மாவும் மாமியாரும்

மலைகளுக்கும் மாமியாருக்கும் என்ன சம்பந்தம்? உண்டு.
அசைக்க முடியாத குணம், . ,
கனிவு மழையும் உண்டு, கல் சரிவுகளும் உண்டு.ஒத்துக்கிறோம்,
அது என்ன அம்மாவையும் கூட இழுக்கணும் என்று பெண்கள் யோசிக்கலாம். எப்படி இது உண்மையாகும்?உண்டும்மா உண்டு. கருத்து என்னவோ ஆதாரமாக இருந்த என் மாமியாரைப் பற்றீத்தான்.
நல்ல படிப்பாளி. அழகு, அடக்கம் என்று நிறைவான மனுஷி .

திருமணம் முடிந்து அவர்கள் வீட்டுக்கு என்னை வரவேற்று அழைத்த அந்த நிமிடத்திலிருந்து
தன் சிகித்சைக்காக ஆம்புலன்சில் மாற்றப்பட்ட அந்த நிமிடம் வரை எங்களுக்கு நிழல் கொடுத்தவர் எங்கள் கமலம்மா தான்.

மாண்பு மிகுந்த மாமியார்கள் எனக்கு மிகப் பழக்கம். ...எனக்கு இரண்டு மாமியார்கள்.
அடடா நீங்கள் நினைப்பது போலில்லை..
இது என் உண்மையான ,என் வீட்டுக்காரரைப் பெற்றவர். இன்னொருவர் என் மாமனாரைப் பெற்றவர்.
ஒஹோ. பாலச்சந்தர் படம் போல் தோன்றுகிறதோ?
அதுவும் இல்லை. இவர்கள் இருவருடனும்தான் என் இல்வாழ்க்கை (கணவரும் கூட) ஒரு மங்களகரமான நாளில் ஆரம்பித்தது.

ஏன் கணவர் கூட என்று தானேசொல்ல வேண்டும்/ அவர்தானே முதலில்? அதுதான் எல்லோருக்கும் தெரியுமே.
திருமணமான புதிதில் எங்களுக்கு (அந்த காலத்தில்)
கணவர் எல்லாம் ஜுஜஜூபி. ஏனென்றால் அவர்கள் பக்கம் நாம் போவது காப்பி வேணுமா?
சாப்பிடக் கூப்பிடறங்க.
சொல்லத்தான்.

நான் சொல்வது கற்காலம் இல்லை. ஒரு 40 வருடங்கள் முன்னால்.
அவர்கள் மலை மாதிரி திடமாக இருந்து எங்களுக்கு ஆதரவு தந்தார்கள். ஒரு மொஃfஅசில் பெண்ணுக்கு என்ன தெரியுமொ அதைவிட ரொம்ப குறைவான அறிவுள்ள ஜீவன் நான்.


திருமணத்தன்னிக்கே " ஓ, இந்தப் பொண்ணு இவ்வளவு சிரிச்சுப் பேசறதே "என்று சொன்ன விருந்தினர் நடுவில் எனக்கு ஆதரவாகப் பக்கத்தில் நின்று கொண்டு எனக்கு பலம் கொடுதது என் அம்மாமியார் தான்.

எனக்கு அவரை அம்மா என்று கூப்பிடுவதில் தயக்கம் துளியும் வரவில்லை.
நீ எப்போ வேணும்னாலும் எங்கே வேணும்னாலும் போகலாம். ஒரே ஒரு வார்த்தை பாட்டி(அவங்களொட மாமியார்) கிட்டே சொல்லிட்டு போ.//
//அது அவர்களுக்குப் பழக்கமாகிப் போன வார்த்தை.

அவ்வளவு மரியாதையும் தானும் அந்தப் பாட்டியிடம் வைத்து இருந்ததால் எனக்கும் வேறு நினைப்பு வரவில்லை..
எப்போது நான் ஏதாவது உளறினாலும் (எப்போது என்று கேட்க வேண்டாம்.that was a full time occupation for me.)இப்போதும் அந்தப் பழக்கம் தொடருவதால்தான் ப்ளொக்கிங் ஆரம்பித்தது!!!)
பக்கத்தில் வந்து இப்படி பண்ண வேண்டாம்பா. நான் பார்த்துக்கிறென், என்று காப்பாத்துவார். ஏன் அந்த வார்த்தை?
அவருக்கும் மருமகளாக வந்த போது இருந்த சூழ்நிலை நினைவு வந்ததோ?
திருமதி எம்.எல்.வி பாடிய பாடலோடு 60 களில் ஒரு படம் வந்தது. மாமியாரும் ஒரு வீட்டு மருமகளே என்ற படம்.
அதைப் பார்த்து மனம் திருந்தியவர்கள் எத்தனையோ பேர்கள்.
அதாவது இந்த மாதிரியும் நாம் இருக்கலாமே என்று நினைத்தவர்கள் இருந்தார்கள்
எங்க அம்மா ,
எங்கள் வீட்டில் எதுவுமே (personal management) பயிற்சி எடுக்காமல் தன் நல்ல குணத்தினாலேயெ எல்லோரையும் அரவணைத்து சென்றவர் எங்கள் கமலம்மா.
எந்த வித டென்ஷனாக இருந்தாலும் முகத்தில் காண்பிக்காமல் தீர்வு கண்டுபிடிப்பதில் அசாத்திய திறமை.

ஒரு பெரிய குடும்பத்தின் ஊடல்கள் கூடல்கள் எல்லாவற்றையும் சமாளிப்பதைப் பார்த்து நான் அதிசயப்படுவேன்.
இவ்வளவையும் எனக்கு இப்போது நினைவுக்கு வர வேண்டிய அவசியம்?
நானும் ஒரு மாமியாராக ப்ரொமோட் ஆகிவிட்டதால்.
குற்றம் காணாமல் குணம் மட்டும் கண்டு சிரிப்போடு வாழ்வு வாழக் கற்றுக் கொடுத்த என் அம்மாமியாரை இன்றும் என்றும் வணங்குகிறென் .

அவர் அவ்வளவு இல்லாவிட்டாலும் பத்து சதவிகிதம் இருந்தால் கூட போதும்.

மென்மைப் பூகள்-பொருனைக்கரையிலெ

பெண்மையும் மென்மையும் ஒன்றா/?
பெண்களைக் கடினமாக்குவது எது? வாக்குவாதம் செய்யும்,எதிர்த்துப் பேசும், சண்டைபோடக் காத்திருக்கும்
ஜீவன்களாக மாறுவது எப்போது?
நல்லது சொல்ல வருபவர்களைக்கூட
அடையாளம் கண்டுகொள்ள முடியாமல் சிந்தையை மறைப்பது எது?
யோசிக்கும்போது வாழ்க்கையில் அவர்கள் தொடர்ந்து பெறும் அனுபவங்களே அவர்களை மாற்றுப் பாதையில் மனம் போக வைக்கின்றன என்றுதான்
எண்ணம் வருகிறது.
யாருமே பிறக்கும்போது மனசில் கறுவிக் கொண்டு பிறப்பதில்லை.


இதமான தென்றலாகத்தான், பூவாகத்தான் பிறக்கிறாள் பெண்.
இதெல்லாம் என் மனசில் எழுந்த எண்ணங்கள் ,எங்க வீட்டு குப்பு அம்மா(உதவிக்கு இருப்பவர்) ஒரு புது செய்தி சொல்லும் வரை.

;அம்மா, மினிம்மாவை மருமவ அடிச்சுப் புட்டாம்மா!'

'அட, என்னாச்சு, ஏதாவது பண விவகாரமா? அந்தப் பொண்ணு முழிச்சுக்கூடப் பாக்காதேனு" நான் சொல்ல
குப்பு இன்னும் அதிர்ச்சியில் இருந்தாள்.
அவளே தொடருவாள் என்று தெரியும்.
காப்பியை மட்டும் பக்கத்தில் வைத்துவிட்டு
உள்ளே வந்துவிட்டேன்.

எனக்குத் தெரிந்தவரை குப்புவின் தோழி மினிம்மாவும் வம்பு செய்யாத பழைய காலத்து மனுஷி.

அவளுக்கு வந்த மருமவளும் அதே வந்தவாசிக்
கூப்பிடு தூரக் கிராமத்திலிருந்து 15 வயசில் வந்தவள் தான். பேரு வனமல்லி.
புருஷன் தாமோதரன் மனசு அறிந்து, 2இரண்டு பெண் குழந்தைகளும் இரண்டு ஆண் பசங்களும் பிறந்து, பிறகு
கணவனுக்கு சங்கடம் வரவேண்டாம் என்று தானே குடும்பக் கட்டுப்பாடு (ஆபெரஷன்) செய்து கொண்டாள்.
நல்ல குடும்பமாக நடந்து வந்தது, தான்.

புது விருந்தாளி சிங்கப்பூரிலிருந்து வரும் வரை.
அவன்நம்ம குப்புவோட மச்சினன். கிட்டி என்கிற கிட்டிணசாமி .
நாலு வருஷம் முன்னால் எதோ ஏஜண்டுக்குப் பணம் கொடுத்து சிங்கப்பூர் போனவன்.
போகும்போது இருந்த பதவிசு இல்லை.

எனக்கு என்னமோ அவனைப் பார்த்தால் சிவாஜி பாகப்பிரிவினை படத்தில் எம்.ஆர்.ராதாவை கூப்பிடுவது போல் டேய், சிங்கப் பூரான் என்று கூப்பிடத் தோணியது.
அவன் வருவதற்கு முன்னாலே சென்ட் மணம் தூக்கியது.

எங்க பசங்க வெளில வரும்போது அவனை uneasy ஆகப் பார்த்துவிட்டு ஓடிவிட்டார்கள்

நான் பார்க்கும்போது அவன் உள்ளே வந்து சோfஃஆவிலும் உட்கார்ந்து விட்டான்,.


எனக்குக் கொஞசம் தயக்கமாக இருந்தாலும், என்னப்பா விஷயம் என்று ஆரம்பித்தேன்
சும்மதான்மா பாத்துட்டு கிப்ஃட் கொடுக்கலாமுனு வந்தேன். ''
என்றான்.
இவன? கிப்ஃடா// என்று நினைக்க
இரண்டு மூன்று பென்சில்,கலர் பென்சில் சாக்கலேட் என்றூ கொடுத்தான்.
பிறகு தன் வேலை, தன் வீடு எல்லாவற்றையும் வானளாவப் புகழ்ந்தான்.
அத்தோடு போயிருந்தால் சேதியே இல்லை.
நம்ம அய்யாவுக்குக் கூட இதை விட நல்ல வேலை கிடைக்குங்க,.
நான் டிரை செய்யரென்" என்று சொன்னதும்

எனக்கு சுரு சுரு என்று குடைய ஆரம்பித்தது.
அது கோபமாக மாறுவதற்கு முன்னால்

சமாளித்துக்க் கொண்டேன்.
"நாங்க ரொம்பவெ நல்லா இருக்கொம்பா
எங்களுக்கு அங்கெல்லாம் போக ஆசையில்லை.
நீங்க நல்லா இருங்கொனு சொல்லி அவனை ஒரு வழியாக அனுப்பினேன்.
//என்ன ஆச்சு, இந்தப் பையனுக்கு 4 வருஷம் இப்படி மாத்துமா ஒருத்தனை?? //
மாமியார் உள்ளேயிருந்து
'இடுப்பிலே நாலு காசு சேர்ந்தா வாயிலே நாலு வார்த்தை வரும்னு சொல்லிக் கொண்டே வந்தார்
.இது நடந்து நாலு நாட்களில் குப்பு வந்து சொன்ன சேதிதான், மினிம்மா
அடி வாங்கிய சேதி.

இந்த கிட்டி, மினியம்மா மகனையும் ஆசை
காட்டி நல்லபடியாக வேலைக்குப் போனவனை அழைத்துப்போய்ப்

பணம் பிடுங்கிக் கொண்டு சோமபானக் கடையிலே அம்போனு விட்டுப்போய் விட்டான்.
வீட்டிலே ஒன்றும் தெரியாது.

குப்புவுக்கும் மினிம்மாவுக்கும் இந்த விஷயம்அரசல் புரசலாகத் தெரியும். மல்லிக்குத் தெரியாது.

வேலைக்குப் போன புருஷனைக் காணொமேனு படாத பாடு பட்டுத் தேடி இருக்கிறாள்
அவளுக்குத் தெரிந்து(அந்த) தாமுக்குப் பழக்கம் ஏதும் கிடையாது.

ஏதோ நடந்தூவிட்டது என்று ஊருக்குச் சொல்லி அனுப்பி எல்லோரும் ஓடி வந்து
மினிம்மாவையும் குப்புவையும் விசாரித்ததில் உண்மை வெளிவர,
அதற்குள் போதையும் தெளிந்து, பசி காதை அடைக்க, கையில் பணமும் இல்லாமல் நடந்தே வீட்டுக்கு வந்து சேர்ந்தான் தாமு..

முதலில் அவனைப் பார்த்துவிட்டு அழுது ஓய்ந்த மல்லி,
விஷயம் தெரிந்ததும் எடுத்தாள் காளி வேஷம்.
ஆற்றாமையும், கோபமும் பசியும்
அந்தப் பசுவைப் புலியாக்கி விட்டது.

'எனக்கே தெரியாமல் என் புருஷனை இப்படி செய்து விட்டியே' என்று ஆத்திரம் தாங்காமல்
போட்டாள் ஒரு போடு மினிம்மாவின் முதுகில்.

கூட்டமே வெல வெலத்துவிட்டது.
பாய்ந்து வந்து அவளை விலக்கித் ,திட்டி கடுமையான வார்த்தைகளைப் போட ஆரம்பிக்கவும்தான் ,

அவளது ஆத்திரம் அடங்கி அழுகையோடு தன்னோட தருமரை (புருஷனை)க் கெடுக்க ஒருத்தன் வந்து அதற்குத் துணையாகப் பணமும் கொடுத்த மாமியாரை என்ன சேஞ்சால் தகும் என்று பிரலாபித்து, ஒய்ந்தாள்.

மணவாளனையும், அவனைப் பெற்றவளையும் ஒன்றாக்
உட்காரவைத்து வென்னீர் சுட வைத்து,
உடம்பு பிடித்துவிட்டு,
ஆகாரம் கொடுத்தாள்.

அப்படியே அவள் தூங்கவும் போய்விட்டாளாம்.
இவ்வளவையும் சொல்லி முடித்த குப்புவும் , பின்னால் போய் நிழலாகப் பார்த்து முந்தானைத் தரையில் விரித்து படுத்து விட்டாள் அசந்து.

எனக்கு இந்தப் புது நரசிம்ம அவதாரத்தை யோசிக்கவே முடியவில்லை.
புருஷன் பேரே சொல்ல மாட்டாள்.
அவிங்கே வந்தாங்கதான்.
அப்படிப பட்டவளுக்குத் தன் சொத்தே பறி போக இருந்தது என்னும் செய்தி ஒரு பெரிய அதிர்ச்சி.
அதுவும் தனக்குத் தெரியாமல்;
நடந்தது. தன் புருஷனை இன்னோருத்தன் ஏமாற்றினானெ என்கிற கோபம் எல்லாம் அந்த க்ஷ்ண்த்தில் அவளை ஆட வைத்து விட்டன.
அதாற்கப்பறம் வனமல்லி படு ஜாக்கிரதையாகி விட்டாள்.

க்லொபல் டிடெக்டிவ் ஏஜென்சி தான்
கூப்பிடவில்லை.

அதற்கு பதில் மத்தப் பாதுகாப்பு ஏற்பாடு எல்லாம்
செய்து விட்டாள்.

இந்த நிகழ்ச்சிதான் என்னை இந்தப் பதிவு ஆரம்பத்தை எழுத வைத்தது. இப்போ கேட்டா கூட எல்லோரும் அசடு வழிய சிரிப்பார்கள்.

Friday, August 18, 2006

புது ப்ளாக் ஆரம்பிக்கக் காரணம்...

எந்தப் பெயர் ஆனாலும் எழுதப் போவது என்னவோ ஒரு நபர் தான்.

எண்ணங்கள் புதிதாகப் பதிய இன்னொரு இடம். என் முதல் மூன்று வலைப்பதிவுகளிலிருந்து இது வேறு பட ஆசை.

நான் படித்த, அதில் பிடித்த வரிகளை இங்கே பதியலாம் என்று
நினைத்து இருக்கிறேன்.
படிப்பவர்களுக்கு நன்றி.

இராமனும் ஈஸ்வரனும்...1

ஸ்ரீராமனாத ஸ்வாமி சரணம்.
இராமெஸ்வரம் ,ராமன் ஈஸ்வரனைப் பூஜித்த இடம்.ராவணவதம் முடிந்து சீதையுடன் மகிழ்வாகப் புஷ்பக விமானத்தில் ஏறும்போது,விபிஷணப் பட்டாபிஷேகம் முடிந்து அரசாட்சி ஆரம்பமான நிலையிலும் ,சீதை பல உயிர்க்ள் பலியானதை நினைத்து மனம் வருத்தம் கொண்டாளாம்.அப்போது இராமனுக்கும், என்னதான் லோக பாதுகாப்பு
என்றலும் உயிர் வதை தோஷம் பாதிக்கும் என்று அறிவுறுத்தப் பட்டது.சிவனாரைப் பூஜித்து நிவர்த்தி செய்ய வேண்டும் என்று.அங்கிருந்த முனிவர்கள் உணர்த்தினார்கள்.
உடனெ முன்வந்தது யாராக் இருக்க முடியும்?நம்ம ஹனுமான் ஜி தான்.உடனே காசிக்கு சென்று, விஸ்வநாத லிங்கத்தைக் கொண்டு வருவதாக விண்ணில் பாய்ந்து விட்டார்.
சீதையும் இராமனும் முறைப்படி சிவலிங்க அர்ச்சனைக்கு வேண்டிய (அங்கே கிடைக்கக் கூடிய)இலை, பழங்கள் எல்லாம் சேகரிக்க ஆரம்பித்துக் காத்திருக்கலானார்கள்.இந்த சம்பவம் நடப்பது இராமேஸ்வரம் என்று இப்போது அழைக்கப்படும் கடல் கரையில்.
அனுமனுக்கு எதனாலொ தாமதமாகிறது.முஹூர்த்த நேரம் நெருங்கியதால் ராமன் சீதையை நோக்கி, இந்த நேரத்தைத் தவிர்க்கக்கூடாது.நீயெ சிவரூபமான லிங்கத்தை மணலில் பிடித்து வை.பூஜையை ஆரம்பிக்கலாம் என்று சொல்லிவிட்டார்.


அவளும் அவ்வாறே மணலும் நீரும் கலந்து லிங்கம் செய்து வைக்க,இருவரும் ஈஸ்வரனை மனதார வேண்டிக்கொண்டனர்.அவர்கள் இஷ்டப்படியே பாப விமோசனமும் கிடைத்தது.சீதையும் ராமரும் வழிபட்டு முடிக்கும்போது அநுமன் காசிலிங்கத்தோடு வருகிறார்.இங்கோ பூஜை முடிந்துவிட்டது


.அனுமன் கொண்டு வந்த லிங்கத்தைக் கீழே வைத்தார்
விச்வரூபம் எடுத்து அசைத்துப் பார்த்தாலும்
ஸ்வாமி




மனம் வைக்க மாட்டென் என்கிறார்.காசிக்குத் திரும்ப மனமில்லை
அந்த ஸ்வாமி ராமனாதன் ஆகிவிட்டார்.
ராமன் பூஜித்த லிங்கம் ராமலிங்கம்
அனுமன் கொண்டு வந்த லிங்கம் காசிலிங்கம்.
இரண்டு பேருக்கும் கோவில் உண்டு.
அனும்ுக்கும் செந்தூரவர்ணத்தோடு ஒரு தனி சன்னிதி.
நல்ல ஆகிருதியோடு கோவில் வாசல் பக்கம் பாதி உருவம் நிலத்திலும் மீதி உருவம் கடலிலும் இருக்கும்படியான தோற்றம்.
அவ்ர சன்னிதி அருகே நிற்கும்போது காலுக்குக் கீழே கடல் ஓசையிடும் சத்தம் கேட்கும்.
ராமனாதர் கோவில் நந்தி பெரிய வடிவில் உள்ளது.
உள்ளே ஈச்வரனுடன் தாய் பர்வதவர்த்தினி.
ஆடி மாதம் தங்கத் தேரோட்டம், வெள்ளித் தேரொட்டம் உண்டு.
ராமேச்வரம் ஒரு magical place.
பாம்பன் பாலத்தைக் கடக்கும்போதே நம் உற்சாகம்
ஆரம்பம்.முன்னால் இந்த தார்ச் சாலை வருவதற்கு முன்
ராமெச்வரம் -போட் மெயில் ஒன்றுதான் அங்கே போகும்.
நாம் போகும் அந்த ரயிலில் தான் அந்த ஊருக்குப் பால்,தயிர்,காய்கறி,நியூஸ் பேபர் எல்லாம் போகும்.
எங்கள் தந்தை அங்கே தபால்தந்தி அலுவலக மேலாளராக இருந்த 2 வருடமும் ,தினந்தோறும் ஏதாவது நடந்துகொண்டே இருக்கும்.
நாட்டுத் தலைவ்ர வருவார். சென்னைப் பிரமுகர்கள், கவர்னர் ந்று யாராவது ப்ரார்த்தனை செலுத்த வருவார்கள்.
யாத்திரிகர்களால் வாழும் ஊராய் அது இருந்தது.
எனக்குத் தெரிந்து கழுதைகளும் மாடுகளும்
வெளியே உலர்த்தும் புடவைகளை சாப்பிடும் ஒரே ஊர் அதுதான்:-))
முதல் தடவை நாங்கள்(நாங்களும் எங்கள் முதல் புத்திரனும்) 4 நாட்கள் விடுமுறையில் போனபோது,
பாம்பன் பாலத்தின் மேல் ரயில் ஊர்ந்தது இன்னும் நினைவில் இருக்கிறது. கீழே சன்னலுக்கு வெளியே காற்றும் அலை ஓசையும் நம்மை
தாலாட்டும்.
1964 புயல் ஞாபகம் வந்தால் பயம் பற்றிக்கொள்ளும்.
அதில் தானே ஒரு ரயிலோடு பயணிகள் மறைந்தார்கள்.
மேலே இருக்கும் 4ஆவது படம் இரவில் தனுஷ்கோடியின் பிம்பம்.
பழகுவதற்கு இனிய மக்கள். அவ்வளவு வியாபாரம் எடுபடாத நாட்கள் அவை.
இதே பிரயாணம் 2003இல் செய்த போது நிலமை மாறி இருந்தது. (மீண்டும் பார்க்கலாம்

வில்லிபுத்தூர் பெருமை நாயகி

வில்லிபுத்தூர் வேதக் கோனூர்,
பெற்ற பாக்கியம் ஸ்ரீ ஆண்டாள் அவதாரம்.
அரங்கன் பெற்ற செல்வம்,
விட்டுணுசித்தர் தந்த செல்வம்,
அங்கே வசித்ததால்
உயிரில்
ஊறிய
பக்தி என்றும் வாழ அவனும் அவளும் அருளட்டும்.
வாழி கோதை நாமம்.அவள் நாதன் நாமம்.