Monday, September 13, 2010

மந்திர ஜமக்காளம்

விமானப் பயணங்களைப் பற்றிய விவரங்களைப் படித்துக் கொண்டிருந்த
போது, டிஸ்கவரி சானலில் ஏ380 ஏர்பஸ் பற்றிய விவரங்களைக் காண்பித்துக்
கொண்டிருந்தார்கள். விமானத்தின் வெளிப்புறம்,கட்டுமானம், ரோல்ஸ்ராய்ஸ்
எந்திரங்கள், பறவையினால் சேதமுறாமல் இருப்பதற்கான அதற்காகவே
தயாரிக்கப்பட்ட ஃபைபர் க்ளாஸ் வெளிப்புற சுவர்கள், என்று ஏகப்பட்ட விவரங்கள்.
இறங்கும் போது விமானத்துக்கு ஏதும் பாதிப்பில்லாமல் அதிர்வில்லாமல்
இறங்கக் கூடிய ஷாக் அப்சார்பர்கள் கொண்ட சக்கிரங்கள். தொலைக்
காட்சியில் பார்க்கும்போது எனக்கு ஏற்பட்ட ஆச்சரியத்தைச் சொல்லி
முடியாது. பயணத்தின் ஒவ்வொரு நிமிடமும் கவனமாக இருக்கும் பைலட்கள்,
அந்த விமானத்தின் உட்புறம் அமைந்த விதம், எப்பவுமே எகானமியில் பயணிக்கும்
வாய்ப்பே கிடைக்கும்:) இந்த விமானத்தில் அந்த எகானமி வகுப்பே ப்ரமாத
சௌகர்யத்தோடு அமைந்திருக்கிறது. அப்புறம் மற்ற வகுப்புகளைப் பற்றிக்
கேட்கவே வேண்டாம்:) குளிக்க ஷவ்ர் கொண்ட டாய்லெட்கள். ஒருத்தருக்கு
ஒருத்தர் பேசிக்கொள்ள தனித்தனி இருக்கைகள். அக்கடாவென்று
சாய்ந்து படுத்தவாறு பார்க்க சாய்மானங்கள், படுக்கைகள். தனி டிவி .
எனக்கென்னவோ ராமாயணத்தில் வரும் புஷ்பக விமானத்தை இவர்கள்
காப்பி எடுத்து இந்த மாதிரி தயாரித்திருக்கிறார்களோ என்று சந்தேகமாக இருக்கிறது.;)<>
<>
கிளம்ப  தயார் !




புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.