Showing posts with label அனுபவம் பயணம் அருமை. Show all posts
Showing posts with label அனுபவம் பயணம் அருமை. Show all posts

Tuesday, August 30, 2011

வெற்றிக் கொடி கட்டு


மரங்களும் சொன்ன பேச்சைக் கேட்கும் பாரீஸ்

புதிய பாரீஸ்
போரின் அவலம்
புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.
இந்தப் படங்களுக்கான விளக்கங்கள் கூகிலாரைப் பார்த்துத்தான் தெரிந்து கொள்ள
வேண்டும்.
ஒரு தரமான ஆங்கிலம் பேசும் வழிகாட்டி கிடைக்கவில்லை.
நேரமும் கொஞ்சம்.
 கிராமத்தான் உயிர் காலேஜ், செத்த காலேஜ்

.பார்த்த  கதைதான்.:(
இருந்தாலும் கலையை ரசிக்க நமக்குக் கதை வேண்டாமே.

அதைத்தான் இங்கே படங்களாகப் பகிர்ந்து கொள்கிறேன்.
இந்த லிங்கில் வெற்றி வளைவின்    விளக்கங்கள் இருக்கின்றன.
பேரரசன்

    நெப்போலியன் ஆஸ்திரியாவை வென்று அந்த ஊர்  இளவரசியை மனம் புரிந்து வந்தபோது  இந்த  வெற்றி
 வளைவைக் கட்டத் தீர்மானம் செய்யப் பட்டது. 
அவர்   செயின்ட்  ஹெலினா தீவில் இறந்த பிறகு
 அவரது சாம்பலும் இறுதி ஊர்வலமாக இந்த
மண்டபம் வழியாக எடுத்துச் செல்லப் பட்டதாகக் குறித்து   இருக்கிறார்கள்.
வளைவுக்கு வெளியே அணையா தீபம் ஒன்றும்  எரிந்து கொண்டிருக்கிறது.
 பிரெஞ்ச் வீரர்
இறந்ததை
கௌரவிக்கும் வண்ணம்.,  இங்கே நினைவுச் சின்னங்களும் சிற்பங்களும் எழுப்பப் பட்டிருக்கின்றன.




இங்கு இன்று ஈத்
 பிறை காணப்பட்ட செய்தி. இன்னும் நான்கு நாட்களுக்கு ரமதான் கொண்டாட்டங்களுக்கு  ஊடகங்கள் தயார் நிலையில் இருக்கின்றன.

அனைவருக்கும்   ரம்ஜான் திரு நாள் வாழ்த்துகள்.

Tuesday, August 16, 2011

பாரீசுக்குப் போ..............






நோடிறேடோம்
 சர்ச்








பாரீசுக்குப் போகலாமா என்று மகன் கேட்டதும் நினைவுக்கு வந்தது பல சமாசாரங்கள்.


ஜெயகாந்தன் ஐய்யாவின் "பாரீசுக்குப் போ" நாவல். இசைஆர்வத்தில், ஒரு பழமையான கலாசாரத்திலிருந்து

முரட்டுத்தனமாகத் தன்னை விடுவித்துக் கொண்டு பாரீஸ் செல்லும் ஒரு இளைஞனின்

கதை..

இரண்டாவது மறைந்த இந்தி நடிகர் ஷம்மிகபூரின் நடிப்பில் வெளிவந்த ஆன் ஈவனிங்க் இன் பாரீஸ்

மூன்றாவது,

சிவந்த மண் திரைப்படத்தில் இடம் பெற்ற "ஒரு ராஜா ராணி யிடம்" பாடல்

இடம் பெற்ற இடமாகப் பாரீஸை நான் நினைத்தது.:)

இன்னும் எத்தனையோ கதை,திரைப்படங்கள் வந்தாலும் எனக்கு உகந்தவை இந்த நினைவுகளே.




ஏதாவது ஐரோப்பிய நாட்டுக்குப் போகவேண்டுமென்ற எண்ணம். பாரீஸ் வென்றது.

மூன்றரை மணி நேரப் பயணம் குழந்தைகளுக்கும் எங்களுக்கும் நன்மை.



தங்கும் விடுதியெல்லாம் நான்கு மாதம் முன்னாலயே பதிவு செய்திருந்தார் மகன்.



சென்ற வியாழன் காலை எட்டு மணி டிஜிவி ரயிலில் கிளம்பத்தயாரானோம்.



இருக்கைகள் அனைத்தும் மிக வசதி. வேகமோ அதிகம்.



ஏறினதுதான் தெரியும்.

அலுங்காமல் குலுங்காமல் 500 கிலோமீட்டர் தூரம் கடந்து விட்டோம்.



இருக்கும் நேரத்தை வேணாக்காமல் ஊர் சுற்றிப் பார்க்கணும்.

சாப்பாடு, ரெஸ்ட் எடுக்கிறது இதெல்லாம் கொஞ்ச நேரம் தான் ஒதுக்கணும்.



இரவு நேர விளக்கு வெளிச்சத்தில் நகரைக் காணவேண்டும் என்றெல்லாம்

திட்டம்.

முடிந்தது கொஞ்சம் தான். அந்த ஊருக்கு மூன்று நாள் எல்லாம் போதாது.:)

புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.

Tuesday, August 02, 2011

குழந்தைகள் உலகம் விரிகிறது,சிகாகோ பயணம் முடிவுக்கு வருகிறது.

குழைந்தைகளுக்குத் தாத்தா பாட்டியின் பரிசுகளாகா இருக்கட்டும் என்று
லேர்னிங்க் எக்ஸ்ப்ரஸ் என்ற குழைந்தைகள் சம்பந்தப்பட்ட கடைக்குச் சென்றோம்.
பிறந்த குழந்தையிலிருந்து 10, 12  வயது வரை  இருக்கும் குழந்தைகளுக்குக் கற்றுக் கொள்ளவேண்டிய
அத்தனை விளையாட்டுப் பொருட்களும்,கல்வி சம்பந்தப் பட்ட பயிற்றுவிக்கும்
சாதனங்களும் நிறைந்து  இருந்தன.

குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் முன்னரீ
அம்மாவே கற்றுக் கொடுக்கக் கூடிய வகையிலும் பலவிதமான உபகரணங்கள்.
சோதனை  முறைகள்.,  அவைகளை உபயோகப் படுத்தும்போது எடுத்துக் கொள்ளவேண்டிய

எச்சரிக்கைகள்  எல்லாம் முறையாக வகைப் படுத்தப் பட்டு  வைக்கப் பட்டிருந்தன.
எனக்கு மிகவும் பிடித்த ரயில் வண்டி நிலையத்தில் பேரன் வெகு  நேரம் விளையாடிக் கொண்டிருந்தான்.

கடைக் காரர்கள் ஓன்றும் சொல்லவில்லை.
சரியான அணுகு முறைதான்.:)

அனுபவித்தால் தானே,
அடுத்த தடவைப் பிறந்த நாளுக்குள்   அம்மாவுக்கு  சிக்னல்  கொடுத்து
அதை வாங்க வைக்கலாம்:0)
நான்

எதிர்பார்த்தபடி   பேரன் அதைக் கேட்கவில்லை. சாதாரண பந்தும் அதைப் போட  ஒரு கூடையும் வாங்கிக் கொண்டான்;)
புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.

Saturday, July 30, 2011

நியூயார்க்கில் கடைசி நாள்

 கட்டிடத்தின் உச்ச்சியில் சந்திப்பதாக படத்தில் தீர்மானம் செய்பவர்கள்

ப்ரூக்ளின்  பிரிட்ஜ்



புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.
முதல் நாள்  பட்ட  வலி எல்லாம் அடுத்த நாள் காலையில்  தெரியவில்லை.
நல்ல காலையுணவை  முடித்துக் கொண்டு  ஹோட்டல்  ஊர்தியில்
ஏர்பொர்ட்  ரயில் நிலையத்தில் வந்து சேர்ந்தோம்.
அங்கிருந்து  நியூயார்க்கின் பென்ன்  ஸ்டேஷனுக்கு வந்து வெளியே
வருவதற்கு 11 மணி ஆகிவிட்டது.

இரட்டைக்கோபுரம்  இருந்த இடத்தைப் பார்வையிட்டவாறே,

எம்பயர் ஸ்டேட் கட்டிடம் வந்தோம்.அங்கெயும் ப்ரோக்கர்கள் சீக்கிரம்
உள்ளே அனுப்புவதாக 45  டால்லர் கேட்டார்.  மாப்பீள்ளை அதை மறுத்துவிட்டார்.

வெளியே வாயில் காப்போனோ அரைமணீயில் 126  மாடிக்குப் போய்விடலாம் என்று உறுதி அளித்தார்.
வயிறோ கிள்ளியது.
உள்ளே  நுழைந்தவர்கள்  நான்கு  மணிகள் கழித்தே  வெளியே வந்தோம்.

படத்தில்(ஆன் அப்பெயர்  டு ரிமம்பர்)
பார்த்த பழைய  காட்சிகளை மனதில்  இருத்தியபடி
கியூவில் நகர்ந்தோம்.

82  ஆவது தளத்தில் பளுதூக்கியை நிறுத்தி விட்டு மக்களைக்காலாற நடக்கச் சொன்னார்கள்..
மனமெல்லாம்   மேல் தளத்திலேயே   இருந்தததால் மக்களோடு மக்களாகக் காட்சிகளை ரசித்தபடி வலம் வந்தோம்.

வந்ததே ஒரு அறிவிப்பு. இஷ்டமிருப்பவர்கள் மேல் தளம் போகலாம் இல்லாதவர்கள் கீழே போக லிஃப்ட் ரெடி என்றார்கள்.
நான் மறுத்துவிட்டேன்.

கொடுத்த பணத்துக்கு மாடியைப் பார்க்காமல் பின்வாங்க மாட்டேன் என்று உறுதியாக நானும்
மகளும்  நின்றோம்.:)

கடைசியாக மேல்தளத்துக்கும் போனோம்.  நின்ற கடுப்பெல்லாம் மறந்தது. நல்ல காற்றைச் சுவாசிக்க  முடிந்தது.
Posted by Picasa