Saturday, December 11, 2010

Saturday, December 04, 2010

புத்தம்புதுக்காலை

ஜயா டிவியில்    வந்த   சிவனார் 108 அடி உயரமாம்.
ஒருவர் நடைப் பயிற்சிக்கும், மற்றொருவர்  வேலைக்கும்   நடக்கிறார்கள். நல்ல நாளுக்கு வாழ்த்துகள் நண்பர்களே.
மழை வருது மழை வருது ஆனால்  வரலை;)
பால் பாக்கெட்டுக்கு விரையும் இன்னோரு அம்மா
பூஜைக்கு வரப்போகும் மலர்கள்
கற்பூர ஜோதியில் பெண் தெரிகிறாளோ.
காமிரா அடுத்த வருடத்திற்குப் போய்விட்டது:) மழை வரும் முன்  எடுத்த படம் ,இன்று காலை.

2008ஆம் வருடக் காலை
புல்லுக்கு வலிக்காமல் குப்பைகள் திரட்டும் மாணிக்கம்!! இன்று காலை4/11/2010


இவை எல்லாம் இன்று காலை எடுத்த படங்கள். உங்கள் அபிப்பிராயங்கள் தேவை.
என் காலையும் உங்கள் காலையும் வெவ்வேறாக   இருந்தாலும்  சிறப்பு என்று எது உங்களுக்குத் தோன்றுகிறதோ  அதைச் சொல்லுங்கள். இந்தத் தடவை அவசரப் படப் போவதில்லை.:)

புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.
Posted by Picasa

Wednesday, November 24, 2010

நிலவின் பிரயாணம்

நம் வீட்டு மரங்களுடன் விளையாடும்  நிலா.
moon  inside the temple
நிலவும் திருமலை கோபுரமும்
திருமலை போட்டொக்ராபருக்கு நிலவை கோவிலுக்குள் கொண்டு வருவதில் தனி ஆர்வம்!



புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.
Posted by Picasa

Tuesday, November 23, 2010

தீப மங்கள ஜோதி! வணக்கம்

அறுபது அகல்கள் இரண்டு உயர விளக்கு, வெள்ளி விளக்குகள் எல்லாவற்றையும் தேய்த்து,சந்தானம்,கும்குமம் வைத்து ,துளசி மாடத்தில் ஆரம்பித்து,காம்பவுண்டு சுவரெல்லாம்   வரிசையாக
தீபங்கள் வைத்தது  ஒரு ஐந்து  வருடங்களுக்கு முன்.
இப்போதெல்லாம் முப்பது அகல்கவிளக்கோடு  கார்த்திகை தீபங்கள் விழா இரண்டு நாட்களுடன்  பூர்த்தியாச்சு.:) 
புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.

Monday, November 22, 2010

அண்ணாமலைக்கு அரோகரா

சரியாக   நான்கு மணி அரைமணி நேரத்துக்கு   ஆரம்பித்த
நேரலை ஒளிபரப்பு
சரியாக   ஆறு மணிக்கு மலை மேல் தீபம்  ஏற்றியதும் பூர்த்தியானது. 
பஞ்ச மூர்த்திகளும் ஆடி வந்த வீக்கமும்
பூ அலங்காரக் காட்சிகளும் மனம் கொள்ளாத மகிழ்ச்சியைக் கொடுத்தன.
தீப மங்கள ஜோதியே
உனக்கு நமஸ்காரங்கள்.



புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.
Posted by Picasa

Friday, November 19, 2010

ஆப்ரஹாம் லின்கன்

லிங்கன்
பிறந்த இடம்  கெண்டகி .ஒரு நடுத்தரக் குடும்பப் பெற்றோருக்குப் பிறந்தவர்    ,மனிதர்களுக்குள்ள சம உரிமையைக் கற்றார்.
சாதாரணக் குடும்பத்தில் பிறந்ததினாலையே
ஒரு வக்கீலாகப் பயிற்சி எடுக்கவும் மிகவும் சிரமப்பட்டார்.

அமெரிக்காவின் முதல் ரிபப்ளிகன் ஜனாதிபதி லிங்கன். இரண்டுதடவை அந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவரும் அவரே.
Spring Field Railwaystation.இங்கிருந்துதான் லின்கன்  தன் பதவி ஏற்பதற்காகப்  புறப்பட்டார்.
கடும் உழைப்புக்கு அஞ்சாத மனிதர் லின்கன்
அமெரிக்க ஜனாதிபதி ஆவதற்கு முன் லின்கன் வசித்த  வீடு.
ஆப்ரஹாம் லின்கன் எழுதிய புத்தகங்களும் மற்று அமெரிக்காவைப் பற்றிய சரித்திரப் புத்தகங்கள் இருக்கும் ஸ்ப்ரிங் ஃபீல்ட் நூலகம்
லின்கனும் மகனும்
Uncle Tom's காபின்
லிங்கன் ,அமெரிக்க ஜனாதிபதி ஆவதற்கும் முன் சந்தித்த கஷ்டங்கள் பலப்பல.
கறுப்பினத்தவருக்கு முடிந்தவரை உதவி செய்ய முன்வந்ததாலையே
அவர் தலைமையில் இயங்க மற்ற வெள்ளை இனத்தவர் மறுத்தனர்.
அத்தனை எதிர்ப்புகளையும் பொறுமையாக் வெற்றி கொண்ட
லிங்கனின்  வளர்ச்சியைக் கண்ட  ஊருக்குப் போக வேண்டும் என்ற ஆசையைத் தெரிவித்தபோது
எங்களை அங்கு அழைத்துச் சென்ற
எங்கள் மகள் மருமகனுக்கு மிகவும் நன்றி.
ஒவ்வொரு இடமும் புனிதமாகப் பாதுகாக்கப் படுகின்றன அங்கே.
ஆப்ரஹாம் லிங்கனின் சொந்த வாழ்க்கை சந்தோஷமாக இல்லை.
ஒரு மகனை நோய்க்குப் பறி கொடுத்தார்.
இன்னும் நிறைய படங்கள்  இருந்தன.
பிகாசாவில்  இடம் இல்லை என்று சொன்னபோது
பல படங்களை டெலிட்  செய்ய வேண்டிவந்தது விட்டது.
அங்கே இருந்தா மியூசியத்தில் நிஜமாகவே
கட்டப் பட்டிருந்த அங்கிள் தாம்'ஸ் காபினையும் பார்த்தோம்.


நம் ஊருக்கு இதெல்லாம் புதிதில்லை.
அவங்க ஊரிலையும்  இது போல இருந்ததுதான்
வித்தியாசமாக இருந்தது.     
புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.

Tuesday, November 16, 2010

எங்கெங்கு காணிலும் ஒளி

கீதோபதேசம்


வர்த்தகக் கடல்கரை


 


 <><>
<>
<><>
Halloween lantern
   புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.