மீனாட்சி 2000த்து டிசம்பர் 20 ஆம் தேதி 4 இன்ச் குட்டியாக ஒரு பையில் வந்தது. அதோடு வெள்ளைவெளேர் என்று சில்வர் அரொவானாவும் வந்தது.
மீனாட்சி சாதாரண அரோவானா இனம். வெகு சாது. சாது மிரண்டு ,கன்னா பின்னாவென்று சாப்பிட ஆரம்பித்து ஒரெ வருடத்தில் ஒரு அடிக்கு வளர்ந்தது.
இனம் புரியாத பாசம். அதன் கண்ணில் எப்பவும் ஒரு தேடல். என்னை தென் அமெரிக்காவில் கொண்டுபோய்விட்டுவிடேன். நிம்மதியாய்ப் போய்விடும்''என்று சொல்வது போல இருக்கும்.
சிலசமயம் அது அது செய்யும் அட்டகாசம் பயம் தரும் . மதம் பிடித்த யானை கதைதான்.
பழைய கதையாகிவிட்டது.
பலவிதமாகப் போஸ் கொடுத்த மீனாட்சியின் சில படங்கள்.
ஏதாவது ஒரு நல்லதை தேர்ந்தெடுங்களேன்.
புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.