Monday, January 31, 2011

பயணம்,அனுபவம்,படங்கள் பாடங்கள்

 அண்மையில் ,போன வாரம்  ஒரு உறவினரின்  எண்பது  வயது பூர்த்திக்காகப்

 பெங்களூரு போக வேண்டிய   அழகான மகிழ்ச்சியான சந்தர்ப்பம் வாய்த்தது.

 ரயில் நிலையத்தில்   முன்கட்டணம் செலுத்திச் செல்லும்,  வாகனத்துக்கு நிற்கையிலியே  ,சாப்பாடு முடிந்த அடுத்த கணம் ,போய்ப் பார்க்க வேண்டிய இடம்  இந்தோ அமெரிக்கன் தாவரவியல் ஆராய்ச்சிக் கழகம் என்று உத்தரவாகியது:)

அதே மாதிரி செய்யவும் செய்தோம். எல்லோரும்  பயமுறுத்தியபடி பங்களூரு குளிரால் அடிக்கவில்லை. வெய்யில் தான் உறுத்தியது.

ஆனால் நாங்கள் சென்ற இடம்  கண்களுக்கு குளிர்ச்சியை அள்ளித்தந்தது.
எப்பொழுதும்போல் அங்கிருந்த மலர்களின் மௌன  மொழி
மனதுக்குச் சந்தோஷத்தை அள்ளிக்  கொடுத்தது.
சில பூக்களை உங்களுடன்   பகிர்ந்து கொள்கிறேன்.:)










புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.