![]() | ||
கட்டிடத்தின் உச்ச்சியில் சந்திப்பதாக | படத்தில் தீர்மானம் செய்பவர்கள் |
![]() | |
ப்ரூக்ளின் பிரிட்ஜ் |
புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.
முதல் நாள் பட்ட வலி எல்லாம் அடுத்த நாள் காலையில் தெரியவில்லை.
நல்ல காலையுணவை முடித்துக் கொண்டு ஹோட்டல் ஊர்தியில்
ஏர்பொர்ட் ரயில் நிலையத்தில் வந்து சேர்ந்தோம்.
அங்கிருந்து நியூயார்க்கின் பென்ன் ஸ்டேஷனுக்கு வந்து வெளியே
வருவதற்கு 11 மணி ஆகிவிட்டது.
இரட்டைக்கோபுரம் இருந்த இடத்தைப் பார்வையிட்டவாறே,
எம்பயர் ஸ்டேட் கட்டிடம் வந்தோம்.அங்கெயும் ப்ரோக்கர்கள் சீக்கிரம்
உள்ளே அனுப்புவதாக 45 டால்லர் கேட்டார். மாப்பீள்ளை அதை மறுத்துவிட்டார்.
வெளியே வாயில் காப்போனோ அரைமணீயில் 126 மாடிக்குப் போய்விடலாம் என்று உறுதி அளித்தார்.
வயிறோ கிள்ளியது.
உள்ளே நுழைந்தவர்கள் நான்கு மணிகள் கழித்தே வெளியே வந்தோம்.
படத்தில்(ஆன் அப்பெயர் டு ரிமம்பர்)
பார்த்த பழைய காட்சிகளை மனதில் இருத்தியபடி
கியூவில் நகர்ந்தோம்.
82 ஆவது தளத்தில் பளுதூக்கியை நிறுத்தி விட்டு மக்களைக்காலாற நடக்கச் சொன்னார்கள்..
மனமெல்லாம் மேல் தளத்திலேயே இருந்தததால் மக்களோடு மக்களாகக் காட்சிகளை ரசித்தபடி வலம் வந்தோம்.
வந்ததே ஒரு அறிவிப்பு. இஷ்டமிருப்பவர்கள் மேல் தளம் போகலாம் இல்லாதவர்கள் கீழே போக லிஃப்ட் ரெடி என்றார்கள்.
நான் மறுத்துவிட்டேன்.
கொடுத்த பணத்துக்கு மாடியைப் பார்க்காமல் பின்வாங்க மாட்டேன் என்று உறுதியாக நானும்
மகளும் நின்றோம்.:)
கடைசியாக மேல்தளத்துக்கும் போனோம். நின்ற கடுப்பெல்லாம் மறந்தது. நல்ல காற்றைச் சுவாசிக்க முடிந்தது.