Sunday, February 20, 2011

பெண்மை மென்மை மதுபாலா

இன்று காலை  பழைய  பாடல்கள் நிகழ்ச்சியில்   மதுபாலாவின்  வாழ்க்கைக் குறிப்புகளைக்  கொடுத்து அவரது மறைந்த தினம் , பிப்ரவரி 23  1969  என்பதையும்   குறிப்பிட்டு அவர்கள் நடித்த சினிமாக்களின் பாடல்களையும்  ஒளி பரப்பினார்கள்.
எனக்கு  நம்  பானுமதி, சாவித்திரி  இவர்களுடன் சேர்த்து இந்தி நடிகைகள் நூதனையும் மதுபாலாவையும் பிடிக்கும்.
முக்கிய காரணம் மொகலே  ஆசம்  படத்தில் வரும்'' ப்யார்  கியா தோ டர்னா  க்யா''
பாடல் தமிழில்   காதல் கொண்டாலே பயமென்ன என்று சுசிலாம்மா குரலில்  அழகாக ஒலிக்கும். அந்தக் கணத்திலிருந்து இவரைப் பிடித்துவிட்டது.
ரேடியோ சிலோனில்  கேட்கும் பாடல்களில் இதுவும் ஒன்று.
ஆற்றின் கரைதனிலே கண்ணன் என்னைக்  கேலி செய்தானே'
பாடலும் உண்டு.
பதின்ம  வயது   ஈர்ப்புகள்   இந்தப் பாடல்கள்.

இன்னும் நான் மொகலே ஆசம் பார்க்கவில்லை.
பிறகு திருமணம் செய்து  எங்கள் வீட்டாரின்  மும்பைப் பழக்க வழக்கங்கள், பிடித்தவைகள் என்ற    லிஸ்டில்  இந்திப் பாடல்களும் சேர்ந்து கொண்டன.
அவ்வப்பொழுது கசியும் வம்பு கிசுகிசுக்களில் திலிப் குமார் மதுபாலா   காதல்
வெகுவாகப் பேசப்பட்டது.


நடுவில் அவரது இருதய பாதிப்புப் பற்றியும்,  அவர் லண்டனில் சிகித்சைக்காகப் போய், பலனளிக்காமல் திரும்பியதையும்
பேசிக்கொள்வார்கள் எங்கள் வீட்டில். அந்த நோயையும் ,முறிந்த காதலையும் தாங்கிக் கொண்டு   ஒன்பது வருடங்கள் இருந்திருக்கிறார்.
முகம் ப்முழுவதும் ஒரு குறும்பு.கலீர் என்ற சிரிப்பு,
பாடல்களுக்கு அணு பிசகாமல் வாயசைப்பது  எல்லாமே பிந்நாட்களில் நான்  யூ  டியூப்  வழியாகத் தெரிந்து கொண்டது.


இப்பவும்  அலுக்காமல் கேட்கும் பாடல்கள் அவை ''அச்சாஜி  மை  ஹார்''  தேவ் ஆநந்துடன்.
மஹல்'' படப் பாடல்  ஆயகா...ஆயகா  ஆயாகா. ஆநே வாலா ஆயகா.


                                                                                                                            அசோக் குமாருடன்,,

சிந்தகி பர் நஹி பூலெகி   வோ பர்சாத் கி ராத் ''  பர்சாத் கி ராத்  பரத் பூஷனுடன்
கிஷோர் குமாருடன் '' எக் லடுகி பீகி பாகி தி''
கிஷோர் மதுபாலவைத் திருமணம் செய்து கொண்டார். அவரது   வீட்டு மக்கள்  மதுபாலாவை ஏற்றுக் கொள்ளவில்லை.

திலிப் குமாரையும்  மதுபாலா  மறக்கவில்லை. அவரது  தங்கையின்   சொல்படி மொகலே ஆசம் பார்த்தபடியே இறுதி மூச்சையும்   விட்டாராம்.
காதல்  ஜெயிக்கிறதாகப் படங்கள் தான் வருகின்றன.


காதலித்தவர்கள்    அந்தக் காலத்தில்   வெற்றிபெற்றதாகத் தெரியவில்லை.
















புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.