Tuesday, August 02, 2011

குழந்தைகள் உலகம் விரிகிறது,சிகாகோ பயணம் முடிவுக்கு வருகிறது.

குழைந்தைகளுக்குத் தாத்தா பாட்டியின் பரிசுகளாகா இருக்கட்டும் என்று
லேர்னிங்க் எக்ஸ்ப்ரஸ் என்ற குழைந்தைகள் சம்பந்தப்பட்ட கடைக்குச் சென்றோம்.
பிறந்த குழந்தையிலிருந்து 10, 12  வயது வரை  இருக்கும் குழந்தைகளுக்குக் கற்றுக் கொள்ளவேண்டிய
அத்தனை விளையாட்டுப் பொருட்களும்,கல்வி சம்பந்தப் பட்ட பயிற்றுவிக்கும்
சாதனங்களும் நிறைந்து  இருந்தன.

குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் முன்னரீ
அம்மாவே கற்றுக் கொடுக்கக் கூடிய வகையிலும் பலவிதமான உபகரணங்கள்.
சோதனை  முறைகள்.,  அவைகளை உபயோகப் படுத்தும்போது எடுத்துக் கொள்ளவேண்டிய

எச்சரிக்கைகள்  எல்லாம் முறையாக வகைப் படுத்தப் பட்டு  வைக்கப் பட்டிருந்தன.
எனக்கு மிகவும் பிடித்த ரயில் வண்டி நிலையத்தில் பேரன் வெகு  நேரம் விளையாடிக் கொண்டிருந்தான்.

கடைக் காரர்கள் ஓன்றும் சொல்லவில்லை.
சரியான அணுகு முறைதான்.:)

அனுபவித்தால் தானே,
அடுத்த தடவைப் பிறந்த நாளுக்குள்   அம்மாவுக்கு  சிக்னல்  கொடுத்து
அதை வாங்க வைக்கலாம்:0)
நான்

எதிர்பார்த்தபடி   பேரன் அதைக் கேட்கவில்லை. சாதாரண பந்தும் அதைப் போட  ஒரு கூடையும் வாங்கிக் கொண்டான்;)
புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.