ஹுசைனம்மா
ரயில் பயணத்தைப் பற்றி எழுதும்படி கேட்டுக் கொண்டார்கள்.
பழைய ரயில் பயணம் என்றாலும் சோத்து மூட்டை உண்டு.
இந்தப் பயணத்துக்கும் அதே.:)
நமக்குத்தான் ஒரு கடைக்கார அம்மாவூட சண்டை போட்ட பழக்கம் இருக்கே.
ராத்திரி நேரக் குளிரில் திறந்திருந்த ஒரு சாப்பாட்டுக் கடைக்குப் போனோம். எட்டுமணிக்குக் கடையெல்லாம் அடைத்து விடுவார்கள். நாங்கள் இருந்த இடம் மலை உச்சி.
அந்த அம்மாவும் டயர்டு நாங்களும் டயர்டு.
சிங்கமும் மகனும் தங்களுக்கு வேனும்கிரதைத் தெளிவாகச் சொல்லிவிட்டார்கள்.
நானும் சான்ட்விச், வெஜ்ஜி என்று சைகையில் சொன்னேன்.
ஒஹ் வெஜிடபிள் சான்ட்விச் என்று நொடியில் கொண்டுவந்தார்.
மிகுந்த பசியுடன் அதைத் திறக்க ,உள்ளே வழ வழ என்று கைகளில் தட்டுப் பட்டது.
பையா எனக்கென்னவ்வோ இது சரியாகத் தெரியவில்லை. பச்சைக் கலரில் என்னமோ இருக்குப்பா
என்றேன். அவனும் எட்டிப் பார்த்துவிட்டு,"சாப்பிட்டுப் பார்த்தியாம்மா" என்றான்.
இல்லை.
சரி அந்தம்மாவையே கேட்கிறேன் என்று பாத்திரங்களை அடுக்கிக்
கொண்டிருந்த கடைக் கார அம்மாவைக் கூப்பிட்டு விளக்கம் கேட்டான். வழக்கமாகக் கொடுக்கும் வெஜ் சான்ம்ட்விச் தான் என்று சாதித்தால்.
குறிப்பிட்ட வஸ்துவைக் காண்பித்ததும். ஒஹ் தட்ஸ் பிஷ் " என்று சொல்லிவிட்டு.
உங்களுக்கு வேண்டாம் என்றால் அதை எடுத்துவிட்டுச் சாப்பிடுங்கள்.
மகனும் சிங்கமும் அவர்கள் சாப்பாட்டுக்கான விலை கொடுத்துவிட்டு,
எனக்கு ஒரு கோப்பை பாலை வாங்கிக் கொடுத்தார்கள்.
எனக்கு வந்த கோபத்தைச் சொல்லிமுடியாது.
என்னசெய்யலாம் அவளுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்.:(
இதற்குப் பிறகு நாங்கள் கொஞ்சம் கவனமாகக் கையோடு சாப்பாடு எடுத்துப் போவதே வழக்கம்.
இந்தத் தடவையும் இட்லிகளும் தயிர் சாதமும்
அலுமினியம் டிபன் பொட்டிகளில் அடைக்கப் பட்டன.
காலையில்நல்ல குளிராக இருந்ததால் ஸ்வெட்டர் இத்யாதிகளும் மகனோட பாக்பாக்கில் அடைக்கப் பட்டன.
பாசல் ரயில் நிலையத்தி
லியே அடுத்த பக்கம் பிரன்ச் ஸ்டேஷன்
ஒரு கதவை த தாண்டினால் அடுத்த பிளாட்பார்மில் ஸ்ட்ராஸ்பர்க் வண்டி இருந்தது.
எங்களோடு அந்த வண்டியைப் பிடிக்க ஒரு90 வயது மூதாட்டியும் விரைந்து (!)வந்து கொடிருந்தார்.
அவருக்குத் துணையாக ஐம்பது வயது மதிக்கத் தகுந்த இன்னொரு பெண்..
பக்கத்து சீட்டில் உட்கார்ந்த என்னை விநோதமாக ப பார்த்தபடி இருந்தார்.
நெற்றிப் பொட்டும் ,சங்கிலியும் ,சல்வார் உடையும் அவருக்கு ஒத்துக் கொள்ளவில்லை :)
நாங்கள் இரண்டு சீட் தள்ளிப் போய் உட்கார்ந்து கொண்டோம்.!
அவர்கள் பேசும் ஜெர்மன் ,மகனுக்குப் புரிந்தது. பாட்டியுடைய அக்கா கீழே
விழுந்து விட்டாராம்.
அவளை ஆஸ்பத்திரியில் சென்று பார்க்க பக்கத்து வீட்டு அம்மாவை அழைத்துக் கொண்டு பாட்டி இந்தப் பயணத்தை மேற்கொண்டார். மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கத்தான் பேசிக் கொண்டே வந்தார்.
மீண்டும் ஊர் சுற்றிப் பார்த்துவிட்டுத் திரும்புகையில் அவர்களும் வந்தார்கள்.
இந்தத் தடவை பாட்டிக்கு ஒரே தாகம்.
கூட வந்த பெண் பாட்டியை உட்கார வைத்துவிட்டுத் தண்ணீர் தேடி போனாள் .
பாட்டியின் நாக்கே வெளிவந்துவிட்டது.
பையனிடம் நம் தண்ணீரைத் தரலாமா என்றேன்.
அவர்கள் எடுத்துக் கொள்ள மாட்டார்கள்மா.
புதிய பாட்டில் கொடுத்தால் எடுத்துக் கொள்வார்கள் என்றான்.
என் மனம் பொறுக்காமல் கையிலிருந்த தண்ணீரை நீட்டினேன்
பாட்டியிடம்.
வெளியாட்களிடம் தண்ணீர் வாங்க மாட்டேன் என்று விட்டாள்.:(
தண்ணீர் வாங்கப் பüஉண பெண் வெறும் கையேடு வந்தும்
பாட்டி ஒன்றும் சொல்லவில்லை.
எங்களூர் வரும் வரை தண்ணீர் குடிக்காமலேயே வந்தாள்.!!!!!.
இந்த ஊர் ஆசாரம்:)
அதற்காகப் பேச்சையும் நிறுத்தவில்லை.:)
திடமான மனம் உடல். வாழ்க வளமுடன்:))