புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.

மிகவும் பிடிக்கும் .எதிர்மறையாகச் சிவப்பு
அடர் பச்சை ,அடர் நீலம்
என்று நான் புடவைகள் உடுத்தும் போது
உனக்கு ஆழ்ந்த வண்ணங்கள் ஒரு சோகமான முகபாவத்தைக் கொடுக்கின்றன.
இளஞ்சிவப்பு,இளநீலம் உடுத்திப் பார். மனம் லேசாகும் என்பார்.
கேட்டிருக்கலாம்.
கைகளில் பணம் நிறையச் சேரும்போது துணிமணிகள்
மற்றவர்களுக்குப் பரிசு என்று வாரி இறைக்காதே.
சேர்த்துவை.காண நேர சந்தோஷத்துக்கு ,
ஏன் இந்தப் பரபரப்பு.
எளிமையான பரிசு வாங்கிக் கொடுத்தால் உன் கௌரவம் குறைந்துவிடுமா.
என்றெல்லாம் சொல்லிப் பார்ப்பார்.
தெரிந்தவர்களுக்கே மீண்டும் மீண்டும் கொடுப்பதற்குப் பதில் தெரியாத ஏழைகளுக்கு
படிப்புக்கு,உடைகளுக்கு என்று செலவழித்தால் இன்னும் நல்லது."
கேட்டுத் திருந்தினேன்.
படபடப்பே இல்லாத,
அமைதியான, ஆரவாரம் செய்யாத, அறிவாளியான அம்மாவைப்போல்
நான் மாறுவேனோ?
. கடினம்தான்.
தேவதைகள் அம்மாவடிவத்தில் தான் வருகிறார்கள் அம்மா பெற்ற பெண்களிடம் தங்குவதில்லை.
உனக்கு என் வணக்கங்கள் அம்மா. 20 /5/2005
2 comments:
அம்மாவுக்கு என் வணக்கங்களும்.
எப்போதான் சொன்ன பேச்சைக் கேட்டுருக்கோம்..... இப்போ கேட்க?
எனக்குமே இளங்கலர்கள் விருப்பமில்லை. அணிந்தால் பொருந்துவதில்லை.
****காரி போல் இருப்பதாக ஒரு தோணல்.
பின்பற்ற நல்ல கருத்துக்கள் உள்ள பதிவு. அம்மாவுக்கு, வணக்கங்கள்.
Post a Comment