Wednesday, April 21, 2010

பொழுது போனதோ?

cல் இன்ஸ்டிட்யுட்.
மூன்று மாடிகளும் பார்த்து, ஒரு கூடை, ஒரு பிள்ளயார், ஒரு சிப்பி(எல்லாம் சேர்ந்து 30ரூபாயில் அடங்கி விடும்.)

அடுத்த படையெடுப்பு ஸ்பென்சர் கட்டிடம். அங்கே போய் இருக்கும் கடைகளைப்
பார்த்துவிட்டு ஒன்றும் வாங்காமல்---எல்லாம் பட்ஜெட்டுக்கு மேல் இருக்கும்.
அடுத்து நடந்து ஹிக்கின்பாதம்ஸ் வருவோம்.
நடுவில் கொறிக்க ஏதாவது உண்டு.
ஹிக்கின்ஸில் குழந்தைகள் பக்கம் இப்போது போலவே நல்ல புத்தகங்கள் இருக்கும்.
ஒன்றொன்றாகப் படித்து விட்டு கடைசியில் ஒரு மனதாக
லேடிபேர்ட் புஸ்தகம் ஓன்றும் (5ரூ) டின்டின் புஸ்தகம்(18ரூ) ஒன்றும் வாங்கி வருவோம்.
ஸ்பெஷல் டிரீட் ஆட்டொவில் வீடு வருவதுதான்.
பிறகு வீடே கலகலப்பாகி விடும். முதலில் பெரிய பாட்டியிடம் வாங்கி வந்த பொருட்களைக் காண்பிக்க வேண்டும்.
பிறகு சின்னப் பாட்டியிடம்(ஆங்கிலம் படித்த பாட்டி) சொல்ல வேண்டும். அவர்கள்
இருவரும் அவசியமான கேள்விகளைக் கேட்டு
இவர்கள் மூவரும் பதில் சொன்ன பிறகுதான் படிக்கும் படலம்.
இதுபோல் சேர்ந்த புத்தகங்கள் பொக்கிஷங்கள்.
இவைகளைத் தவிர லெண்டிங் லைபிரரிப் புத்தகங்கள் திருப்பிக் கொடுக்கும் நாளுக்கு முன்னால்
காணாமல் போகும்.
டியூ டேட் முடிந்து பள்ளிக்ககூடம் திறந்த பிறகு, நான்தானே
இருப்பதை திருப்பி கொடுக்கப் போக வேண்டும்!

எங்க வீட்டு மூன்று தலை முறைக்கும் நான்தான் லைபிரரி உமன்.

பெரிய பாட்டியோட வடுவூர் துரைசாமி,

மாமியாருடைய லக்ஷ்மி,தேவன், கல்கி புத்தகங்கள்,
என்னுடைய சிவசங்கரி,சுஜாதா, பி வி ஆர், சாவி ,
வாசந்தி
இதற்குப்பிறகு பசங்களோட புக்ஸ்.
இப்பவும் சொல்லுவார் அந்த லைபிரரிசொந்தக்காரர்
105 ருபா புஸ்தகம் வரவே இல்லைம்மா என்று.
நான் என்ன சொல்லுவேன்?

புத்தகங்கள் பைண்டு செய்து ஸமத்தாக அலமாரியில் இருக்கிறது என்றா?
அதற்குப் பிறகு அவர் கடைக்கே நிறைய புத்தகங்களை
சும்மாவாகவே கொடுத்து சரி பண்ணி விட்டேன்.
அதுவும் இந்த புத்தகங்கள்,
லியான் யுரிஸ், அலிஸ்டர் மாக்லீன்
ஹாட்லி சேஸ்,
ஹரால்ட்ராபின்ஸ்,
மரியோ பூசோ,
இர்விங் வாலஸ்,
ஆர்தர் ஹெய்லி,
இயன் ஃப்ளெமிங்,
பீட்டர் பென்சிலி
மேலும் சிலருடைய புத்தகங்களை
இடம் பற்றாக் குறையால் கிலொ கணக்கில் கொடுக்க வேண்டி வந்தது!!. அறிவு தானம் நல்லதுதானே1
அதனாலே பரவாயில்லை என்று நாங்களே சமாதானப்படுத்திக் கொண்டோம்.
இன்னும் சேர்த்துப் பிரிந்த பழைய ஒலி
நாடாக்கள். ஹ்ம்ம்.

Tuesday, April 20, 2010

திருவாடிப்பூரத்து ஜகத்துதித்தாள் வாழியே.
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே.
ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயியின் துணவி, ஸ்ரீரங்கனை மணந்தவள் அவள் ஓரடி முன்வந்து வாழ்த்திய முனி, எதிராஜன்,நமது உடையவர், ஸ்ரீ ராமானுஜர் அவதரித்த சித்திரைத் திருநாள், திருவாதிரை நட்சத்திரம் இன்று.

இராம லக்க்ஷ்மணர்களில் லக்ஷ்மணரின் அவதாரம் தான் ஸ்ரீ ராமானுஜர்.மஹாவிஷ்ணுவின் , நின்றால் குடையாம், இருந்தால் சிங்காசனமாம் கிடந்தால் புல்கும் அணையாம் ஆதிசேஷனே லக்ஷ்மணன். சேவா நாயகன்.
அவனே ஸ்ரீராமானுஜராக வந்து மக்கள் உய்ய வந்த மாமுனி.
இந்த அவதார புருஷனின் தோற்ற முக்கியத்துவமே அனைவரையும் பகவான் வழிப்படுத்துதலே.
கடவுள் இருக்கிறார் அவரை அணுக எல்லோருக்கும் உரிமை உண்டு. சில நபர்களுக்கு மட்டும் சொந்தம் இல்லை அவன் நமம் என்பதைத் திருக்கோஷ்டியூர் கோபுரம் மேல் நின்று உரக்க அறிவித்தவர்.

ஜாதி பேதம் பகவானுக்கு இல்லை என்பதைத் தன் வாழ்நாள் முழுவதும் தானே அவ்வழியில் நடந்து நிரூபித்தவர்.
மேலும் சொல்ல எத்தனையோ உண்டு.
அதைச கற்றறிந்த   பெரியோர் சொல்லியும் இருக்கிறார்கள்.
இந்த நாளைப் பதிவு செய்யவே இந்த எழுத்து.
வாழி உடையவர் நாமம்.
நாராயணனையே வாராய் என் செல்லப் பிள்ளாய் என்றழைத்த பெருமான் .அவரை என்றும் மறவாமல் இருக்கும் மனதைக்  கொடுக்க அந்த ஸ்ரீமன் நாரயணனையே துதிக்கிறேன்.