Wednesday, April 21, 2010

பொழுது போனதோ?

cல் இன்ஸ்டிட்யுட்.
மூன்று மாடிகளும் பார்த்து, ஒரு கூடை, ஒரு பிள்ளயார், ஒரு சிப்பி(எல்லாம் சேர்ந்து 30ரூபாயில் அடங்கி விடும்.)

அடுத்த படையெடுப்பு ஸ்பென்சர் கட்டிடம். அங்கே போய் இருக்கும் கடைகளைப்
பார்த்துவிட்டு ஒன்றும் வாங்காமல்---எல்லாம் பட்ஜெட்டுக்கு மேல் இருக்கும்.
அடுத்து நடந்து ஹிக்கின்பாதம்ஸ் வருவோம்.
நடுவில் கொறிக்க ஏதாவது உண்டு.
ஹிக்கின்ஸில் குழந்தைகள் பக்கம் இப்போது போலவே நல்ல புத்தகங்கள் இருக்கும்.
ஒன்றொன்றாகப் படித்து விட்டு கடைசியில் ஒரு மனதாக
லேடிபேர்ட் புஸ்தகம் ஓன்றும் (5ரூ) டின்டின் புஸ்தகம்(18ரூ) ஒன்றும் வாங்கி வருவோம்.
ஸ்பெஷல் டிரீட் ஆட்டொவில் வீடு வருவதுதான்.
பிறகு வீடே கலகலப்பாகி விடும். முதலில் பெரிய பாட்டியிடம் வாங்கி வந்த பொருட்களைக் காண்பிக்க வேண்டும்.
பிறகு சின்னப் பாட்டியிடம்(ஆங்கிலம் படித்த பாட்டி) சொல்ல வேண்டும். அவர்கள்
இருவரும் அவசியமான கேள்விகளைக் கேட்டு
இவர்கள் மூவரும் பதில் சொன்ன பிறகுதான் படிக்கும் படலம்.
இதுபோல் சேர்ந்த புத்தகங்கள் பொக்கிஷங்கள்.
இவைகளைத் தவிர லெண்டிங் லைபிரரிப் புத்தகங்கள் திருப்பிக் கொடுக்கும் நாளுக்கு முன்னால்
காணாமல் போகும்.
டியூ டேட் முடிந்து பள்ளிக்ககூடம் திறந்த பிறகு, நான்தானே
இருப்பதை திருப்பி கொடுக்கப் போக வேண்டும்!

எங்க வீட்டு மூன்று தலை முறைக்கும் நான்தான் லைபிரரி உமன்.

பெரிய பாட்டியோட வடுவூர் துரைசாமி,

மாமியாருடைய லக்ஷ்மி,தேவன், கல்கி புத்தகங்கள்,
என்னுடைய சிவசங்கரி,சுஜாதா, பி வி ஆர், சாவி ,
வாசந்தி
இதற்குப்பிறகு பசங்களோட புக்ஸ்.
இப்பவும் சொல்லுவார் அந்த லைபிரரிசொந்தக்காரர்
105 ருபா புஸ்தகம் வரவே இல்லைம்மா என்று.
நான் என்ன சொல்லுவேன்?

புத்தகங்கள் பைண்டு செய்து ஸமத்தாக அலமாரியில் இருக்கிறது என்றா?
அதற்குப் பிறகு அவர் கடைக்கே நிறைய புத்தகங்களை
சும்மாவாகவே கொடுத்து சரி பண்ணி விட்டேன்.
அதுவும் இந்த புத்தகங்கள்,
லியான் யுரிஸ், அலிஸ்டர் மாக்லீன்
ஹாட்லி சேஸ்,
ஹரால்ட்ராபின்ஸ்,
மரியோ பூசோ,
இர்விங் வாலஸ்,
ஆர்தர் ஹெய்லி,
இயன் ஃப்ளெமிங்,
பீட்டர் பென்சிலி
மேலும் சிலருடைய புத்தகங்களை
இடம் பற்றாக் குறையால் கிலொ கணக்கில் கொடுக்க வேண்டி வந்தது!!. அறிவு தானம் நல்லதுதானே1
அதனாலே பரவாயில்லை என்று நாங்களே சமாதானப்படுத்திக் கொண்டோம்.
இன்னும் சேர்த்துப் பிரிந்த பழைய ஒலி
நாடாக்கள். ஹ்ம்ம்.

7 comments:

ஜீவி said...

//முதலில் பெரிய பாட்டியிடம் வாங்கி வந்த பொருட்களைக் காண்பிக்க வேண்டும்.
பிறகு சின்னப் பாட்டியிடம்(ஆங்கிலம் படித்த பாட்டி) சொல்ல வேண்டும். அவர்கள்
இருவரும் அவசியமான கேள்விகளைக் கேட்டு
இவர்கள் மூவரும் பதில் சொன்ன பிறகுதான் படிக்கும் படலம்.//

காட்சி கண்முன் விரிந்து மனதிற்கு இசைவாய் ரசிக்க வைத்தது.
எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு,
எல்லாவற்றிலும் தன் கருத்தைச் சொல்லி, ('சொல்றதைச் சொல்லிட்டேன்; அப்புறம் உங்க பாடு')
அந்தந்த நேரத்தில் நாம் மறந்து தொலைப்பதையும் நினைவு படுத்தி,
('மழை வரும் போல இருக்கு; கொடை எடுத்திண்டையா'லிருந்து
இன்னிக்கு கடைசி நாள் ஆச்சே;
எலெக்டிரிக் பில் கட்டினையா வரைக்கும்) மொத்தத்தில் வீடு மொத்தமும் இருப்பவர்களுக்காக வாழ்ந்த அந்தக் காலத்துப் பெரியவர்களை நினைத்தால்,
பெருமூச்சு தான் வெளிப்படுகிறது..

வல்லிசிம்ஹன் said...

test comment

வல்லிசிம்ஹன் said...

மிகவும் நன்றி ஜீவி.
இவ்வளவு நாட்கள் கழித்து யாராவது இந்த வலைப் பதிவைப் படிப்பதே அதிசயமாக இருக்கிறது.
ஆமாம் இதே வீட்டில் எல்லோரும் இருந்தார்களா ,என்று நினைத்துப் பார்க்கையில், அந்த நாட்களை இன்னும் சந்தோஷமாக அனுபவித்து இருக்கலாமோ என்று தோன்றுகிறது.

sury siva said...

// இதுபோல் சேர்ந்த புத்தகங்கள் பொக்கிஷங்கள்.
இவைகளைத் தவிர லெண்டிங் லைபிரரிப் புத்தகங்கள்
திருப்பிக் கொடுக்கும் நாளுக்கு முன்னால்
காணாமல் போகும்.
டியூ டேட் முடிந்து பள்ளிக்ககூடம் திறந்த பிறகு, நான்தானே
இருப்பதை திருப்பி கொடுக்கப் போக வேண்டும்!

எங்க வீட்டு மூன்று தலை முறைக்கும் நான்தான் லைபிரரி உமன்.//

இதைப் படிக்கும்பொழுது காலேஜில் நான் என் பசங்களுக்கு ( ஸ்டூடன்ட்ஸ்) செல்லமான‌
அறிவுரை சொல்லுவேன். அது நினைவுக்கு வருகிறது.

Never lend books to others, because none returns to them.
The only books I have in my library are those
that others have lent me.

இதைத் தவிர ஸுபாஷிதானி என்று சொல்லப்படும் சம்ஸ்க்ருத நூலிலும்
புத்தகங்களை இரவல் கொடுப்பது பற்றி ஒரு வாசகம் இருக்கிறது.

புஸ்தகம் வனிதா விருத்தம் பர ஹஸ்தே கதம் கதம்
புனஹ ஆ கச்சேதி இதி
ஜீர்ணா; ப்ரஷ்டா; கண்டித;

அர்த்தம் சுலபமாக புரிந்துகொள்ளக்கூடியது தானே !!

சுப்பு ரத்தினம்.
http://pureaanmeekam.blogspot.com
http://movieraghas.blogspot.com

வல்லிசிம்ஹன் said...

வருகைக்கு நன்றி சுப்புரத்தினம் சார்.
வீட்டில் இருந்த புத்தகங்கள் வெளியில் சென்றனவை திரும்பி வந்த கதையே கிடையாது:)
நீங்கள் சொல்லுவது அத்தனையும் உண்மை. புத்தகம் பெண்ணும் பொக்கிஷமாக இருக்க வேண்டியவர்களே!

துளசி கோபால் said...

//வீட்டில் இருந்த புத்தகங்கள் வெளியில் சென்றனவை திரும்பி வந்த கதையே கிடையாது:)//

எப்படிச் சொல்லப்போச்சு?
நான் கடன் வாங்குனதையெல்லாம் திருப்பிக் கொடுத்துட்டேன்!!!

வல்லிசிம்ஹன் said...

Thulasi. romba naal munnaal ezhuthinathuppaa:)

ungalaich solluveenaa:))