Tuesday, April 20, 2010

திருவாடிப்பூரத்து ஜகத்துதித்தாள் வாழியே.
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே.
ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயியின் துணவி, ஸ்ரீரங்கனை மணந்தவள் அவள் ஓரடி முன்வந்து வாழ்த்திய முனி, எதிராஜன்,நமது உடையவர், ஸ்ரீ ராமானுஜர் அவதரித்த சித்திரைத் திருநாள், திருவாதிரை நட்சத்திரம் இன்று.

இராம லக்க்ஷ்மணர்களில் லக்ஷ்மணரின் அவதாரம் தான் ஸ்ரீ ராமானுஜர்.மஹாவிஷ்ணுவின் , நின்றால் குடையாம், இருந்தால் சிங்காசனமாம் கிடந்தால் புல்கும் அணையாம் ஆதிசேஷனே லக்ஷ்மணன். சேவா நாயகன்.
அவனே ஸ்ரீராமானுஜராக வந்து மக்கள் உய்ய வந்த மாமுனி.
இந்த அவதார புருஷனின் தோற்ற முக்கியத்துவமே அனைவரையும் பகவான் வழிப்படுத்துதலே.
கடவுள் இருக்கிறார் அவரை அணுக எல்லோருக்கும் உரிமை உண்டு. சில நபர்களுக்கு மட்டும் சொந்தம் இல்லை அவன் நமம் என்பதைத் திருக்கோஷ்டியூர் கோபுரம் மேல் நின்று உரக்க அறிவித்தவர்.

ஜாதி பேதம் பகவானுக்கு இல்லை என்பதைத் தன் வாழ்நாள் முழுவதும் தானே அவ்வழியில் நடந்து நிரூபித்தவர்.
மேலும் சொல்ல எத்தனையோ உண்டு.
அதைச கற்றறிந்த   பெரியோர் சொல்லியும் இருக்கிறார்கள்.
இந்த நாளைப் பதிவு செய்யவே இந்த எழுத்து.
வாழி உடையவர் நாமம்.
நாராயணனையே வாராய் என் செல்லப் பிள்ளாய் என்றழைத்த பெருமான் .அவரை என்றும் மறவாமல் இருக்கும் மனதைக்  கொடுக்க அந்த ஸ்ரீமன் நாரயணனையே துதிக்கிறேன்.

No comments: