புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.
oasis |
புதிதாகப் பார்த்த கட்டிடம் |
வளர்ந்து வரும் சிலிகான் ஓயாசிஸ். |
வெய்யில் சூடு,தாகம
நோன்பு மாதம்
இது எங்கள் பயணத்தின் அம்சங்கள் இந்தத் தடவை.
ஒரு மெட்ரோ பயணமும் பேத்தியுடன் போய் வந்தோம்.
ரொம்ப ஜாக்கிரதையாகப் பாட்டி கையைப் பிடித்துக் கொண்டு நடந்தது குழந்தை. பாட்டிக்குக் கால் தடுக்குமாம்.
பூனை பொம்மையையும் தூக்கிக்கொண்டு வரும்
அழகை
மழலை மாறாமல் பேசிக்கொண்டே வரும்
நேர்த்தியைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
இன்னும் இரண்டு நாளில் துபாயிலிருந்து கிளம்பிச் சென்னை போகிறோம்.
அமீரக நண்பர்கள் ஒருவரையும் சந்திக்க முடியாத சூழல்.
நேரில் பார்க்காமல் வளர்ந்த நட்பு இல்லையா. அப்படியே
வளரட்டும்.
ஹுசைனம்மா அருமையாகப் பேசி நமக்கு இந்தப் பதிவுலகத்தைத் தாண்டி உறவு இருக்கிறது என்று நிரூபித்தார்.
.
. பதிவர்கள் அனைவரின் தொலைபேசி எண்களும் இப்பொழுது என்னிடம் இல்லை .
சந்திக்கப் பேசமுடியாத வருத்தம் கொஞ்சம் இருக்கத்தான் செய்கிறது.பத்து நாட்களில் என்ன செய்ய முடியும்.:(
அமீரக நண்பர்களுக்கு வணக்கம் சொல்லி விடை பெறுகிறோம்.
