![]() | |
வசந்தம் வரும் |
வெய்யில் நாட்களுக்குத் தனி மகிமை. ஆஹா பொறுக்க முடியாமல் அவதிப் படுவோம். வீட்டுக்குள் இருக்கும் எங்களைப் போன்ற மாந்தர்கள் பற்றி அவ்வளவாகக் கவலையில்லை வெளியே வேலை செய்யும்
வெய்யிலில் படும் அவஸ்தையைச் சொல்லி முடியாது.
இதே நிலைமையை வெளிநாடுகளிலும் பார்க்க முடிந்தது. அரபு நாடுகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.
ஐரோப்பிய நாடுகளிலும் இந்த தடவை கடும்குளிர்.
மகன்வீட்டு சாளரம் வழியாக எடுத்த படங்களையும் அனுப்பி இருந்தோம். ரத்த ஓட்டம் சுருங்கும்போதும் தினசரி வேலைகள் செய்யும் முறையும் மாற்றாமல் செய்யவேண்டி இருப்பதைப் பற்றிச் சொன்னான்.
''பாட்டி ஐ ஹேட் விண்டர்'' என்கிறாள் பேத்தி.
சிகாகோ வந்தால் காற்றின் கொடுமை. குளிரும் காற்றும் சேர்ந்து வாட்டும் அனுபவம்.
அதைச் சகித்துக் கொண்டு வாழ்க்கை நடத்துகிறார்கள். எல்லாம் எதற்காக. தனி மனித சுதந்திரத்திற்காகவா, 8 மாதங்கள் குளிரும் நான்கு மாதங்கள் கோடையும், பொறுத்துக் கொள்வது அங்கே கிடைக்கும் இன்ன பிற சௌகரியங்களுக்காகவா. புரியத்தான் இல்லை.
இது என் அபிப்பிராயம் மட்டும் இல்லை. என்னைப் போல இன்னும் இரண்டு மூன்று பெற்றோர்களின் மனக் கசிவும் கூட.
எனக்கு இங்கே தொலைக்காட்சியில் பார்க்கும் அந்த ஊர்களின் செழுமைக் காட்சிகளே போதும் என்றும் அவ்வப் போது அங்க ஒரு சுற்றுலாப் பயணியாகப் போய் வருவதே போதும் என்றே தோன்றுகிறது:)
புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.