Saturday, August 26, 2006

Saturday, June 03, 2006
குண்டாக இருப்பது தப்பா?




Pathivu Toolbar ©2005thamizmanam.com

இப்போது ஒல்லியாக,ஸ்லிம்மாக, தின்னாக,எதையுமே தின்னக்கூடாத உடம்பு வாகுதான் கொண்டாடப்படுகிறது.ஒரு மணியன், ஒரு சேவற்கொடியோன்,கொத்தமங்கலம் சுப்பு சார், சாவி சார் கதைகளில் வளர்ந்த எனக்கு அப்போது இருந்த வருத்தம் நாம் எப்போது அந்த மாதிரி இருப்போம் என்று ஒரே கவலை. எந்த மாதிரி? ஜயராஜ் சார் படம் போடுவாரே,, அதாவது வடிவோடு, அழகாக,பார்க்கிற மாதிரி!!அதுவும் கோபுலு சார் போடும் படங்கள் பார்த்துவிட்டு நானும் சூடு போட்டுக்கும் பூனை போல், வரைந்து பார்த்ததில்( கை வளைந்தால் உடம்பும் வளையும் என்று யாரவது சொல்லி இருப்பார்கள்) எங்க அம்மா அப்பாவுக்கு ஒரு மாதிரி சந்தேகம் வந்து விட்டது.ஓஹோ நம்ம பொண்ணுக்கு சின்னக் கண்ணாக இருப்பதால் இந்த வில் போன்ற புருவம் வரைந்து மனதைத் தேற்றிக் கொள்ளுகிறாளோ, ஒட்டடை குச்சி என்று அழைக்கப்படுவதால் இந்த மிஸ் நிம்புபானி ஓவியங்கள் நோட்டுபுக் தாள்களில் நிரம்புகிறதோ என்று சீக்ரெட்டாகக் கவலை.அப்பா அம்மாவிடம் கலந்து பேசி,ஒரு இரவு சாப்பாட்டுக்குப் பின்னர் எங்கள் மூன்று பேரையும் அழைத்துப் பொதுவாக உடல் ஆரோக்கியக் குறிப்புகளைக் கொடுக்க ஆரம்பித்தார்.சின்னதம்பிக்கு தூக்கம் வந்தாலும் ஏதோ கதை போல என்று தலையை ஆட்டினான்.பெரிய தம்பி அப்பாவிடம் நிறைய மரியாதை, அதனால் உன்னிப்பாக கேட்டுக்கொண்டான்.எனக்கு as usual புரியாததால் ஜெனெரலாக ஆமாம்பா சொல்லிக் கொண்டு இருந்தேன். "ஆகையினாலே மனசு ஹெல்தியாக இருக்கணும்னால் நிறையப் படிக்கணும்,பேசணும், இதோ நீ கூட படம் வரயறே.உனக்கு நல்ல ஓவியராக வர ஆசைனு தெரியரது. ஆனால் ஏன் கண் மாத்திரம் போடறே?" என்ற கேள்விக்குறியொடு நிறுத்தினார். ( அவரிடம் எனக்கு சொல்ல சாமர்த்தியம் போதவில்லை,, அப்பா எனக்கு கண் வரைக்கும் தான் ஒழுங்காக வரது அதுக்கு அப்புறம் கோணல் மாணலாப் போகிறதுனு)அம்மாவும் அன்னை படத்தில் வரும் சந்திரபாபு பாட்டுப்போல்,புக்கைக் கண்டா கண்,ஹிண்டு பேப்பரில கண்,ஆனந்தவிகடன்லெ கண்ணு,மளிகை சுத்தி வர பேப்பரில் கண்ணு கண்ணு என்று பாடாத குறையாகச் சொன்னார்.திடீரென முழித்துக் கொண்ட என் தம்பி, அப்பா அதே கண்கள் சினிமாப்பா என்றான்.பெரியவனும் ஆமாம் மா,எல்லா கண்களும் நம்மையே பாக்கிற மாதிரி இருக்கு, ஜேம்ஸ்பாண்ட் மூவி மாதிரி.எனக்கு வந்த கோபத்தில் ஏதாவது ரூமில் போய் விழுந்து அழலாம்னா தனி பெட் ரூம் கூட இல்லியே என்றுதான் தோன்றியது.அப்புறம் ஒரு மாதிரி எனக்கு ஒருவிதமான கோளாறும் இல்லை என்று சாதித்து கொஞ்ச காலம் பென்சில், ரெட் பென்சில் ஒன்றும் தொடவில்லை.(அப்போதெல்லாம் கலர் கலராகப் பென்சில் வாங்கித்தர மாட்டார்கள்.)அதனால் நான் வரையும் பெண்கள் எல்லாம் சிவப்புப் புடவையும் கருப்பு டிசைனும் போட்ட ப்ளௌசுமாகத் தான் இருப்பார்கள். இவ்வளவு ஸ்தூலமான பாடிலைனைத் தேடி நான் அலைந்து மேலும். இளைத்தேன்.இவ்வளவு கதை இப்போது எதற்கு/ தெரியுமா?
இரண்டு நாட்கள் முன்னால் நடந்த எங்க வீட்டு விழாவில் என்னைப் பார்த்த என் அத்தை ஏன் நீ இளைக்கவே இல்லை?வாக்கிங் போறியோ? சாப்பாடிலே கட்டுப்பாடு வேணும்மா.வயசாயிடுத்து பார்த்தியா.... என்றெல்லாம் அடுக்கவும், (அவங்களுக்கும் என் வயசுதான்.அது வேற கடுப்பு. அவங்க இன்னும் ஸ்லிம் ஜேன்.
அதுக்கு வித்தியாசமான காரணங்கள் உண்டு.)(அதற்காக நான் காலை எழுந்தவுடன் காப்பி, பின்பு கனிவுடன் ஆறு தோசை, மதியம் முழுதும் தூக்கம் ,இரவில் கலந்த சாதங்கள் என்று பூந்து வெள்ளாடலியே.

அடடா எப்படி இருக்கும் அந்த லைஃப்?)எனக்கு வந்த வெறியில் என் சுகர் கட்டுப்பாட்டையும் மீறி, அங்கே இருந்த மைசூர் பாகு, தட்டை, முறுக்கு ஜாங்கிரி எல்லாவற்றையும் கல்யாண சமையல் சாதம் பண்ண ஆசை வந்தது.பிறகு தான் என் உரிமையான இந்த ப்ளாக் பதிவில் போட்டு மனதை சமாதானப் படுத்திக்கொண்டேன்.

48 கேஜி இருந்தவங்க 74கேஜி ஆவதற்கு 40 வருடம் ஆச்சு. அதனாலே இங்க சொல்ல வரது எல்லாம்இப்படி இருந்தவங்க அப்படி ஆவதும் உண்டு. அப்படி இருந்தவங்க இப்படி ஆவதும் உண்டு. எல்லாம் காலம் செய்யும் கோலம். எனக்கு இப்பொ கூட ஆசை தான் கச்சேரி பண்ண,அதிர்ஷ்டம் என்னவோ டிரெட்மில் மேய்க்கறபடிதான் இருக்கு.பரவாயில்லை நான் வெகு சந்தோஷமாகக் குண்டாகவே இருக்கிறென். யாருக்கு என்ன நஷ்டம்?நீங்களெல்லாம் எப்படி?
// posted by manu @ 7:46 AM
Comments:
சில பேருக்கு உடல்வாகே அப்படிதான், அவங்க ஒன்னும் செய்யமுடியாது."ஊசி போல உடம்பு இருந்தா தேவையில்லை ஃபார்மசி" என்ற மருத்துவ கருத்துப்படி உடல் எடையை குறைத்துக்கொண்டோமானால் நலம். வயசாக ஆக உடல்பருமனால் தொல்லை அதிகமாகிடும், அதுக்கு பல காரணங்கள், முடிந்தவரை காலை, மாலை வேக நடை பயிலுங்கள் மிக நல்லது, சர்க்கரை நோயாளி பண்ணிக்கிட்டு தான் இருப்பீங்க இருந்தாலும் சும்மா சொல்லி வைத்தேன். :-) //அவங்க இன்னும் ஸ்லிம் ஜேன்// இந்தி & ஆங்கில படம் அதிகம் பார்ப்பீர்களோ?அப்புறம் ஊசி மாதிரி இருந்தா தமிழ்நாட்டு சனங்களுக்கு பிடிக்காது. கொஞ்சம் பூசுனாப்ல இருக்கனும். :-))
# posted by குறும்பன் : 6:08 PM
ஹெலோ குறும்பன், வாருங்கள். வந்ததுக்கு நன்றி. ஆமாம் ஆங்கிலப் புத்தகங்கள் நிறையப் படிக்கப் பிடிக்கும். அதோட பாதிப்பு தெரிகிறது என் பேச்சிலும் எழுத்திலும்.பூசினாப்பிலெ இருந்தால் நல்லதுதான். இப்பொ நான் இரண்டு மூணு தரம் பூசின மாதிரி இருக்கேன்:-)) நடையும் உண்டு. பசியும் அதை விட அதிகம். பார்க்கலாம் யார் விட்டா.நானாச்சு என்னோட ஃபாட் ஆச்சு. கைகலப்பு தான்.மறுபடியும் தான்க்ஸ்.
# posted by manu : 6:46 PM
சில வருடங்களுக்கு முன்னர் என்னுடைய அத்திம்பேர்: என்னிடம் “சந்துரு உடம்பைக் கொஞ்சம் கவனி. இளைக்கப்பார் என்றதுக்கு, நான், “குண்டாக இருப்பதால் நான் என்ன ஆரோக்கியகுறைவாக இருக்கிறேன். ஒல்லியாக இருப்பதால் நீங்க என்ன ஆரோக்கியமாக இருக்கிறீர்கள்?”(அவருக்கு sugar, BP, cholesterol இத்யாதிகள்) என்று கேட்டது ஞாபகம் வருகிறது. என்னைப் பொருத்ததவரையில் குண்டாக இருக்கிறீர்களோ ஒல்லியாக இருக்கிறீர்களோ - ஆரோக்கியமாக இருந்தால் சரி!பி.கு. என் அத்திம்பேர் குண்டு ஒல்லி என்று என்னிடம் பேசியது அதுவே கடைசி!
# posted by chandar : 7:34 AM
ஹா ஹா,.இதுவல்லவோ பதில்.இந்த ஒல்லியா இருக்கிறவர்களுக்கு குண்டாக இருப்பவர்களைப் பார்க்கும்போது ஏதோ ஆகிவிடுகிறது. நமக்குத்தான் நல்ல மனசு ஆச்சே. அதனாலே விட்டு விடலாம்.பூனைக்கு ஒரு காலம் வந்தால் யானைக்கு ஒரு காலம் வராதா?:-))
# posted by manu : 9:03 AM
கணக்குச் சரியா வருதான்னு தெரியலையே மானு.48- 40- 74 வச்சுப் பார்த்தா,37.5 - 32- 72 சரியா?பூனைக்கு ஒரு காலம் வந்துருச்சு. இன்னும் 'யானை'க்குத்தான் வரலை:-)))குண்டோ ஒல்லியோ மனசு சந்தோஷமா இருந்தாச் சரி. ஒல்லியா இருந்துக்கிட்டு, ஒண்ணும் திங்காம,'கண்ணுலே பசி'யோடு இருக்கற நிறையப்பேரைப் பார்த்து மனசு சமாதானப் பட்டுருது:-))))கொஞ்சமாத் தின்னாலும், மனசுலே களங்கம் இல்லாதபடியாலே உடம்புலே ஒட்டுது,மத்ததெல்லாம் ஒரே வினை.
# posted by துளசி கோபால் : 10:49 AM
அடி சக்கை. என்னா கணக்கு. !!!! திருமண நாளுக்கு 1 நாள் தான் பாக்கி. பொண்ணு இன்னும் ரெடியாகலியா? பார்லர் போணும். மெஹந்தி வைக்கணும்.திருமண நாள் வாழ்த்துக்கள் துளசி.ரொம்பவே சரிதான்.வயசும் கம்மி. எடையும் கம்மி.கல்யாணம்+32===72கல்யாணம்+40---76கிலொநீங்க எடை குறைவாக இருக்கிறிர்கள்.மலை நாட்டில் இருப்பதால் இத்தோடு போச்சு.:-)))) கண்ணில் பசி. கை கொடுங்க துளசி. நான் சாப்பிடாவிட்டாக் கூட வெயிட் ஏறுதும்மா. பாட்டி என்று என்னை தாராளமாகக் கூப்பிடலாம்.மதர் நேச்சர். வாகு அப்படி.
# posted by manu : 1:43 PM
Hiindha kavalai ennakum undu..minna ellam naan " naan enna kundaa irundha enna ". endru nenaipen.. ippo ellam en attitude maari iruku..aanaa poosinaapila irukomnnu nenaippadhu and illaikanum apdingradhum oru concernaa irukalaam - aana adhuve oru paina manasula iruka koodadhunnu oru thelivu irukku..irundhaalum unga posta pathavudane oru nalla aarudhal dhaan!!! And healthyaa irundhaa podhumnnu nalla padradhu..
# posted by Priya : 1:19 AM
Hiindha kavalai ennakum undu..minna ellam naan " naan enna kundaa irundha enna ". endru nenaipen.. ippo ellam en attitude maari iruku..aanaa poosinaapila irukomnnu nenaippadhu and illaikanum apdingradhum oru concernaa irukalaam - aana adhuve oru paina manasula iruka koodadhunnu oru thelivu irukku..irundhaalum unga posta pathavudane oru nalla aarudhal dhaan!!! And healthyaa irundhaa podhumnnu nalla padradhu..
# posted by Priya : 1:19 AM
dear Priya, thank you for your comments. it is true, a fact I am over my allowed weight. I know that. I am trying to lessen my intake and increase my exercise routine. I want that to remain my own problem. it hurts when my own sontha bantham(enappaduvarkaL) keliyaa kapesumbothuthaan kobam varukirathu.neenga chinnavanga

Friday, August 25, 2006

வாழ்த்துக்கள் வெற்றிக்கு

தேன்கூடு ஆகஸ்ட் போட்டியில்,வெற்றி பெற , பங்கு பெற்ற எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

நன்றி,வணக்கம் வாழ்த்துக்கள்

எப்போதும் போல நம்ம வீட்டுக்கு வரும் எல்லாரையும், அவர்கள் ஆதரவிற்கும்
அன்பிற்கும்

(வார்த்தைகள் போதாமையால்)
இப்போது நன்றி சொல்லுகிறேன்.

பொருனைக்கரையிலேக்கு வரும் பின்னூட்டங்களை
பதிய முடியாது.
ஆதலால் வில்லிபுத்தூர் ஸ்ரீயில் (அரங்கேற்றம்)
கருத்துக்களை இட வேண்டும்.

வோட் செய்தவர்களுக்கும், போட்டிக்கு உத்சாகம் கொடுத்தவர்களுக்கும்,தனி மடல் மெயில் செய்தவர்களுக்கும் நன்றி.நன்றி.

Thursday, August 24, 2006

வழி,தங்குமிடம் ராமேஸ்வரம்






எல்லொருக்கும் இராமேஸ்வரம் என்பது ஒரு புண்ணிய யாத்திரை தலமாகத் தான் தெரியும். எனக்கு அப்படித்தான்.இந்தப் பதிவு ஒரு பின்குறிப்பாக எழுதுகிறேன்.ஒரு நாள் பயணமாகவே போய் விட்டு வரக்கூடிய இடம் தான். ஆனால் அங்கே தங்கி வந்தால் இன்னும் நிறைய இடங்களைப் பார்க்கலாம்.மதுரையில் இருந்து நான்கு மணிநேரப் பயணம்.ராமனாதபுரத்தில் நல்ல வசதியுடன் விடுதிகள் இருக்கின்றன.அங்கே இறங்கி சேது விலிருந்து பயணத்தை ஆரம்பிக்கலாம்.வைணவர்கள் சேது தீர்த்தத்தில் குளித்துவிட்டு அடுத்த நாள் ராமேச்வரம் அக்கினி தீர்த்ததில் குளிப்பார்கள்.சேதுவில் சங்கல்பம் செய்து முன்னோர்களுக்கு நினைவாக கட்லில் குளித்து அங்கே வாழும் வசதி குறைந்தவர்களுக்கு நாம் அணிந்த் உடையோ ,அன்னதானமோ செய்யலாம்.அங்கிருப்பவர்களே நமக்கு சொல்லிக் கொடுப்பார்கள்.அங்கெ பக்கத்திலேயே ராமன் தபம் செய்த திருப்புல்லணை ஆதி ஜகன்னாதன் கொவிலுக்குப் போனால் மதிய சாப்பாடு உறுதி.கடலுக்குக் குளிக்கப் போவதற்கு முன்னால் சொல்லிவிட்டால் போதும். சமைத்து வைத்துக் கொடுப்பார்கள். ஆஹா அந்தப் பசிக்கு அந்தப் பொங்கல் அமிர்தம் தான்.இங்கு இராமபிரானுக்கு கடலரசன் சேதுப் பாலம் கட்ட வழி சொல்லிக் கொடுத்தானாம்.கடலைப் பிளந்து இலங்கைக்குப் பாலம் அமைத்தால் கடலில் உள்ள உயிர்கள் அழியும், அதனால் மிதக்கும் பாலம் ஒன்றை நளன் என்னும் தேவ சிற்பியை வைத்துக் கட்டலாம், என்று யோசனை சொல்ல, இராமனும் நளனை வேண்ட வானரங்கள் உதவியுடன் அதிகக் கனமில்லாத கற்களால் சேதுப்பாலம் அமைந்ததாம்.அதனால் சுற்றுச் சூழல் பாதுகாப்பு அப்போது இன்னும் சிறப்பாக இயங்கி இருக்கிறது என்று எனக்குத் தெளிவாகியது.பக்கத்தில் தேவிட்டினம் என்னும் கடலோர கிராமத்தில் நவபாஷணம் என்னும் நவக்கிரக பரிகார தலம் இருக்கிறது.கடலுக்குள் போய் ராமபிரான் ஸ்தாபித்ததாகச் சொல்லப்படும் கிரஹங்களைச் சுற்றி வந்து அர்ச்சனை செய்யலாம்.அங்கேயும் தானம் செய்யும் வழக்கம் உள்ளது. நம் பின்னாலேயெ அவர்கள் குறி வைத்து வருவதைப் பார்த்தால் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும்அங்கிருந்து நேரே ராமேஸ்வரம் தான். அங்கே ந்இறைய தங்கும் விடுதிகள் வந்து விட்டன.நாற்பது வருடங்கள் முன்னால்நமக்கு பரிகாரம் செய்ய உதவியாக கைருக்கும் சாஸ்திரிகள் வீட்டிலேயே தங்கவும், சாப்பிடவும் வசதி செய்வார்கள்.இப்போது நமக்குத்தான் அந்த வசதி எல்லாம் போதாதே..அதனால் (பண) வசதிக்கு ஏற்ப விடுதிகள் கிடைக்கின்றன.ஸ்ரீ ராமனாத ஸ்வாமி ஆலயத்துக்குள் 22 தீர்த்தங்கள் இருக்கின்றன.எல்லாம் நாம் செய்த , செய்யப் போகும் பாப விமோசனம்,,(நிவர்த்தி) செய்யக் காத்துக் கொண்டு ,அந்தக் கிணறுகளிலிருந்து தண்ணீர் இறைத்துக் கொடுப்பதையே சேவையாகச் செய்யும் நண்பர்களோடுதயார் நிலையில் உள்ளன.எத்தனை உயர்ந்த சேவை.!!பர்வதவர்த்தினி அம்மனும், இராமலிங்கமும் ஜோதியாகத் அவ்வளவு ஓளியோடு காட்சி தருகிறார்கள்,அங்கெ இன்னும் கை நீட்டும் காட்சி வரவில்லை.பக்தியும் சுத்தமும் ஆன்மீகமும் இருந்தன.ஏழ்மையும் இருந்தது.இன்னோரு தடவை என்னை இராமேஸ்வரம் போக வைத்த தமிழ் மணத்துக்கு நன்றி..
// posted by manu @ 10:25 AM
Comments:
another good post from you madam!//எல்லாம் நாம் செய்த , செய்யப் போகும் பாப விமோசனம்,//ha haaaa :))
# posted by ambi : 3:46 PM
ப்ளான் எல்லாம் பக்காவா ரெடி செஞ்சுருங்க. போயிட்டு வந்துருவோம்.
# posted by துளசி கோபால் : 5:17 AM
ஆமாம் துளசி இப்போது நல்ல வசதியாகப் போய்வர வாய்ப்பு இருக்கிறது.மனமும் புத்தியும் ஒன்று சேர்ந்து நல்ல ப்ளான் செய்தால் கவலையே இல்லை.:-)
# posted by manu : 5:58 AM
ஆமாம் அம்பி,சந்தேகமே இல்லை.தெரிந்தும் தெரியாமலும் செய்யும் பாபங்கள் எவ்வளவோ இல்லையா?நன்றிப்பா.
# posted by manu : 6:00 AM Post a Comment

Wednesday, August 23, 2006

வலையில் எழுத ஒரு இலக்கணம்?

தமிழ் எழுத இலக்கணம் தேவையா.

தேவைதான்.

என்னைப் பொறுத்த வரை பேசும் தமிழில்

இருந்து மாறி,

பள்ளியில் எழுதப் பழகிய ஒரு நடைதான்

சுலபமாக இருக்கிறது.

ஆனால் இப்போது இணையத்தில் பார்க்கும்

பதிவுகளில் படித்த தமிழைக் காணோம். பழகும் தமிழ்தான்

இருக்கிறது. இந்த நடை சீக்கிரமே எனக்குப் பிடிபட

தமிழம்மா உதவி செய்ய வேண்டும்.

Tuesday, August 22, 2006

புதிய வலைப்பூ

அன்பு சக வலைப் பதிவாளர்களுக்கு,

என் வெப்லாக் http://porunaikaraiyile.blogspot.com

puthiya blogger beta
வசம் மாற்றும்போது

ஏதோ தவறாக ?? நான், டெம்ப்ளேட்,பெயர்,பதிவு விபரம் இப்படி
ஏகப்பட்ட ,, ஒன்று விடாமல் எல்லா விதக் கோளாறுகளையும்

நான் செய்து இருப்பதாகத் தெரிய வருகிறது.

அந்தக் காரணத்தில் இந்தப் புதுப் பதிவில்
மீண்டும் பழைய எண்ணங்களைப் பதிந்து வருகிறேன்.

புது வலைப்பதிவின் பெயர் வில்லிபுத்தூர் ஸ்ரீ.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து வருவது ஆறிப்போனதாயிருந்தாலும் ,
அப்போதைக்கு அப்போது
புதுசும் வரும் என்று சொல்லி முடிக்க ஆசைப்படுகிறேன்.

ராம லக்ஷ்மண ஜானகி ஜய் போலோ ஹனுமானு கி

ஸ்ரீராமனாத ஸ்வாமி சரணம்.
இராமெஸ்வரம் ,ராமன் ஈஸ்வரனைப் பூஜித்த இடம்.
ராவணவதம் முடிந்து சீதையுடன் மகிழ்வாகப் புஷ்பக விமானத்தில் ஏறும்போது,
விபிஷணப் பட்டாபிஷேகம் முடிந்து அரசாட்சி ஆரம்பமான நிலையிலும் ,
சீதை பல உயிர்க்ள் பலியானதை நினைத்து மனம் வருத்தம் கொண்டாளாம்.
அப்போது இராம்னுக்கும் ரவணவதம், என்னதான் லோக க்ஷேமம் என்றலும் உயிர் வதை தோஷம் பாதிக்கும்
என்று அறிவுறுத்தப் பட்டது.
சிவனாரைப் பூஜித்து நிவர்த்தி செய்ய வேண்டும் என்று.
அங்கிருந்த முனிவர்கள் உணர்த்தினார்கள்.

உடனெ முன்வந்தது யாராக் இருக்க முடியும்?
நம்ம ஹனுமான் ஜி தான்.

உடனே காசிக்கு சென்று, விஸ்வநாத லிங்கத்தைக் கொண்டு வருவதாக விண்ணில் பாய்ந்து விட்டார்.
சீதையும் இராமனும் முறைப்படி சிவலிங்க அர்ச்சனைக்கு வேண்டிய (அங்கே கிடைக்கக் கூடிய)
இலை, பழங்கள் எல்லாம் சேகரிக்க ஆரம்பித்துக் காத்திருக்கலானார்கள்.
இந்த சம்பவம் நடப்பது இராமேஸ்வரம் என்று இப்போது அழைக்கப்படும் கடல் கரையில்.
அனுமனுக்கு எதனாலொ தாமதமாகிறது.
முஹூர்த்த நேரம் நெருங்கியதால் ராமன் சீதையை நோக்கி, இந்த நேரத்தைத் தவிர்க்கக்கூடாது.
நீயெ சிவரூபமான லிங்கத்தை மணலில் பிடித்து வை.
பூஜையை ஆரம்பிக்கலாம் என்று சொல்லிவிட்டார்.

அவளும் அவ்வாறே மணலும் நீரும் கலந்து லிங்கம் செய்து வைக்க,
இருவரும் ஈஸ்வரனை மனதார வேண்டிக்கொண்டனர்.
அவர்கள் இஷ்டப்படியே பாப விமோசனமும் கிடைத்தது.
சீதையும் ராமரும் வழிபட்டு முடிக்கும்போது அநுமன் காசிலிங்கத்தோடு வருகிறார்.
இங்கோ பூஜை முடிந்துவிட்டது.

அனுமன் கொண்டு வந்த லிங்கத்தைக் கீழே வைத்தார்.

மீண்டும் அதை அசைக்கப் பார்த்தால் முடியவில்லை.

விச்வரூபம் எடுத்து அசைத்துப் பார்த்தாலும் ஸ்வாமி

மனம் வைக்க மாட்டென் என்கிறார்.காசிக்குத் திரும்ப மனமில்லை

அந்த ஸ்வாமி ராமனாதன் ஆகிவிட்டார்.

ராமன் பூஜித்த லிங்கம் ராமலிங்கம்

அனுமன் கொண்டு வந்த லிங்கம் காசிலிங்கம்.

இரண்டு பேருக்கும் கோவில் உண்டு.

அனும்ுக்கும் செந்தூரவர்ணத்தோடு ஒரு தனி சன்னிதி.

நல்ல ஆகிருதியோடு கோவில் வாசல் பக்கம் பாதி உருவம் நிலத்திலும் மீதி உருவம் கடலிலும் இருக்கும்படியான தோற்றம்.

அவ்ர சன்னிதி அருகே நிற்கும்போது காலுக்குக் கீழே கடல் ஓசையிடும் சத்தம் கேட்கும்.

ராமனாதர் கோவில் நந்தி பெரிய வடிவில் உள்ளது.

உள்ளே ஈச்வரனுடன் தாய் பர்வதவர்த்தினி.

ஆடி மாதம் தங்கத் தேரோட்டம், வெள்ளித் தேரொட்டம் உண்டு.

ராமேச்வரம் ஒரு magical place.

பாம்பன் பாலத்தைக் கடக்கும்போதே நம் உற்சாகம்

ஆரம்பம்.முன்னால் இந்த தார்ச் சாலை வருவதற்கு முன்

ராமெச்வரம் -போட் மெயில் ஒன்றுதான் அங்கே போகும்.

நாம் போகும் அந்த ரயிலில் தான் அந்த ஊருக்குப் பால்,தயிர்,காய்கறி,நியூஸ் பேபர் எல்லாம் போகும்.

எங்கள் தந்தை அங்கே தபால்தந்தி அலுவலக மேலாளராக இருந்த 2 வருடமும் ,தினந்தோறும் ஏதாவது நடந்துகொண்டே இருக்கும்.

நாட்டுத் தலைவ்ர வருவார். சென்னைப் பிரமுகர்கள், கவர்னர் ந்று யாராவது ப்ரார்த்தனை செலுத்த வருவார்கள்.

யாத்திரிகர்களால் வாழும் ஊராய் அது இருந்தது.

எனக்குத் தெரிந்து கழுதைகளும் மாடுகளும்

வெளியே உலர்த்தும் புடவைகளை சாப்பிடும் ஒரே ஊர் அதுதான்:-))

முதல் தடவை நாங்கள்(நாங்களும் எங்கள் முதல் புத்திரனும்) 4 நாட்கள் விடுமுறையில் போனபோது,

பாம்பன் பாலத்தின் மேல் ரயில் ஊர்ந்தது இன்னும் நினைவில் இருக்கிறது. கீழே சன்னலுக்கு வெளியே காற்றும் அலை ஓசையும் நம்மை

தாலாட்டும்.

1964 புயல் ஞாபகம் வந்தால் பயம் பற்றிக்கொள்ளும்.

அதில் தானே ஒரு ரயிலோடு பயணிகள் மறைந்தார்கள்.

மேலே இருக்கும் 4ஆவது படம் இரவில் தனுஷ்கோடியின் பிம்பம்.

பழகுவதற்கு இனிய மக்கள். அவ்வளவு வியாபாரம் எடுபடாத நாட்கள் அவை.

இதே பிரயாணம் 2003இல் செய்த போது நிலமை மாறி இருந்தது. (மீண்டும் பார்க்கலாம்)








// posted by manu @ 7:27 AM
Comments:
ராமேஸ்வரம் போய் வர வேண்டும் என்ற என் தாகத்தை ஏற்படுத்தியது இந்த பதிவு.

என்று நிறைவேறுமோ தெரியவில்லை.

ஜனாதிபதியின் ஊர் வேறு இப்போ. இன்னும் கொஞ்சம் வசதி செய்திருக்கிறார்களோ தெரியவில்லை.

கோயிலை வைத்துதான் எல்லோரும் பிழைக்கிறார்கள் என்று நினைக்கிறேன். இலங்கைகாரர்களின் பிரச்சனை ஏதாவது இருக்கிறதா?

ராவணன் பிராமணன். அவனை கொன்றதால் ஏற்பட்டது பிரம்மஹத்தி தோஷம். கொடுமையானது. அதற்கு பரிகாரமாக இந்த பூஜை செய்கிறார் ராமர். இது அந்த ஊர் தல புராணம். வால்மீகி ராமாயணத்தில் இந்த நிகழ்ச்சி சொல்லப்படவில்லை. ஆனால், துளசி ராமாயணத்தில் உண்டு.

ராமர் இன்னும் இரண்டு இடங்களில் சிவனை தொழுது இன்னும் தன் இரண்டு தோஷங்களுக்கு பரிகாரம் செய்து கொள்கிறார். அவைகளும் தமிழ்நாட்டில் தான். பெயர் நினைவில்லை. புத்தகத்தை பார்க்க வேண்டும்.

நன்றி
# posted by ஜயராமன் : 2:57 PM
நன்றி ஜயராமன்.
நானும் அந்தக் கோவிலகள் பற்றீப் படித்து இருக்கிறேன்.
நினைவுக்கு வரவில்லை.

2003இல் நாங்கள் போனபோது மாற்றம் இருந்தது. அடுத்து எழுதுகிறேன்.
# posted by manu : 5:14 PM
மானு,

நான் ராமேஸ்வரம் போயே 34 வருசமாச்சு. அப்ப கொஞ்சம் வேற மாதிரி இருந்ததோ?
நீங்க விவரிச்சதை படிச்சதும், அதையெல்லாம் பார்த்தேனான்னு கூட நினைவு இல்லை.
அதிலும் ஹனுமான் ஜி சன்னிதியில் காலடியில் கடல் ஓசை...?!!!!!

சரி. இப்ப உங்க புண்ணியத்தில் இன்னொரு விஸிட் மானஸிகமா ஆச்சுன்னு வச்சுக்கலாம்.
நன்றி.

மண்டபம் ஸ்டேஷன்லே இருந்து ராமேஸ்வரம் போற ரயிலிலே ஒரே மீன் நாற்றம்.
பொறுக்க முடியாம வாயிலெ எடுத்துட்டேன்(-:
# posted by துளசி கோபால் : 3:05 AM
வாங்கப்பா துளசி.நம்ம அம்மா அப்பா சம்பந்தப்பட்ட எல்லா ஊருமே நமக்கு இனிமை.
இல்லை யான்னா சாமியாவது அந்த ஊரில இருக்கணும்.
இதே போல எங்க இரண்டாவது பையன் இருக்கும் ஊரிலே தினம் அந்தக் கோவில் மணி
ஓசைக் காகவேக் காத்துக்கொண்டு இருப்பேன். நம்ம போக வேண்டிய இன்னோரு லிஸ்ட் தயாரிக்கலாம்மா?:-)0
# posted by manu : 6:37 AM
இந்த விஷயம் சொல்ல விட்டுப் போய் விட்டது.சாலை வழிபயணம் இன்னும் சுலபம். மடுரையிலிருந்தோ ராமனாதபுரத்திலிருந்தோ வண்டி வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம்.
ஆமாம், அனுமன் சன்னிதிக்குக் கீழே கடல். இந்தக் கோவிலும் கடற்கரை ஓரமாகக் கட்டி இருக்கவேண்டும்.
திருப்பதிக்கு முன்னால் போகும்போது கோவில் வாசலில் காரிலிருந்து இறங்கிக் கோவிலுக்குள் போனது கூட எனக்கு ஞாபகம் இருக்கிறது.1960 என்று நினைக்கிறேன்.:-)0
# posted by manu : 1:36 PM
என் தாத்தாவின் வீடு ராமநாதபுரம் பக்கத்தில் இருக்கும் வாலாந்தரவை என்ற கிராமத்தில் இருந்தது. காலையில் 11 மணிக்கு ஒரு ரயிலில் ராமேஸ்வரத்தில் இருந்து மீன் வரும். ரெம்ப fresh ஆக இருக்கும். வாரத்தில் நான்கு நாட்கள் என் தாத்தா வீட்டில் மீன் சமையல் இருக்கும். எங்கும் மணல் வெளி. அடர்த்தியாக மஞ்சள் காடாக வளர்ந்து கிடக்கும் ஆவாரஞ் செடிகள். ஆகா நான் சிறு வயதில் விளையாடிய இடங்கள் எல்லாம் நினைவிற்கு வருகின்றன.
# posted by மகேஸ் : 3:42 PM
Post a Comment



<< Home

கனவுத்தொழிற்சாலை மந்திரவாதிகள்-1

யூல் ப்ரெனர்&டெபொரா கெர் நடித்த கிங்&ஐ படம் பார்த்து இருக்கிறிர்களா/
இருவருக்கும் நடக்கும் விவாதங்கள் சூடு பறக்கும். டெபோரா ரியல் இங்க்லிஷ் கவர்னஸ், யுல்
சையாம் மன்னராக வந்து தன் நாட்டைக் காப்பாற்றி ச்ரித்திரம் படைப்பார்.
இருவருக்கும் இடையெ வெகு இனிமையான காதல் மலரும் நேரம் வரும்போதும் சூழ்நிலை அவர்களைப்
பிரிக்கிறது. அப்பொழுது ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டே பிரியும் கணம் அருமை.


அதுபோல் இங்ரிட் பெர்க்மன்
பர்ட் லன்காஸ்டர் காதலும் 'காஸா பிளான்காவில்" முடியும்.
காரி க்ராண்ட் டெபொரா ஜோடி, டாக்டர் ஷிவாகொ,(ஓமார் ஷரிஃப்)
எல்லாப் படங்களுமே

எத்தனை தரம் பார்த்தாலும் அலுக்காத கதைகள்.
இப்போதும் காதல் படம் வருகிறது.
தவறு இல்லை. காலம் மாறிவிட்டது.
காதலும் மாறிவிட்டது.


// posted by manu @ 6:33 PM
Comments:
பத்மினி அழகாக உள்ளார்
# posted by Ennar : 8:32 PM
நன்றி என்னார். வருகைக்கு.
இந்தப்பாடல் காட்சிக்காக அவ்வளவு பணம் செலவழித்தார்களாம்.
என்ன ஒரு அருமையான ஜோடி/.
# posted by manu : 9:52 PM
சினிமாவில் 'முழு மூச்சாக' இறங்குனமாதிரி இருக்கு!

எனக்குப் பிடிச்சிருக்கு.

ஆமாம், ஓமர் ஷெரீஃப் படங்கள் எல்லாமே அப்ப ரொம்பப் பிடிச்சிருந்தது.
# posted by துளசி கோபால் : 3:11 AM
ச்சூம்மாதான். என் டிவியில் புதிதாக சோனிபிக்ஸ் என்ற சானல் வந்தது. அதில் ஜூலி ஆண்ட் ரூஸ் பாத்ததும்,
நான் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்னு தோணித்து.

கனவுகள் நிறைந்த காலங்கள்னு கவிதையில் சொல்லுவாங்க இல்ல?
# posted by manu : 7:02 AM
மாக்கெனாஸ் கோல்டை விட்டுட்டேன்.
சூபர்மேனையும் சொல்லி
இருக்கணும்.
ஓமர் ஷரிஃப் க்ரேஸ் கொஞ்ச நாள் இருந்தது நினைவில்.
# posted by manu : 7:07 AM
Post a Comment



<< Home

திரு இராஜநாரயணன் ஐயா அவர்கள்

கி.இராஜநாராயணன் அய்யா--2
அய்யாவும் போனுக்கு வந்து யார் என்று விசாரித்து விட்டு பேச ஆரம்பித்தார். அவ்வளவு எளிமையான பேச்சை நான் இதுவரை கேட்டது இல்லை.
எங்க அம்மா அப்பா ஊரு பேரு எல்லாவற்றையும் விசாரித்தவர் விவரத்தைக் கேட்டு வருத்தப்பட்டார்.
அதற்கப்புறம் அடிக்கடி கதை கேட்பதற்கே நான் போன் செய்வதும் அம்மாவும் அவரும் நடந்த நிகழ்ச்சிகளைக் கோர்வையாக சொல்வதும் மிகப் பழகிப்போன ஒன்றாகிவிட்டது.

அதன் பயன் ,அதுக்கப்புறம் நடந்த புத்தகக் கண்காட்சியில் அகரம் பதிப்பகத்தில் அய்யவுடைய நான்கு புத்தகங்களை வாங்கியதுதான்.

எல்லாவற்றையும் இன்னும் படித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

அம்மாவும் அய்யாவும் ஒரு நாள் மதியம் போன் செய்து
அடுத்த நாள் அவர்கள் சென்னைக்கு முத்தமிழ் விழா ஒன்றில் கலந்து கொள்ள வருவதாகவும், எங்க வீட்டுக்கு அப்படியே வரலாமா என்று கேட்டதும்,
எனக்குப் பேச்சே வரவில்லை.

இவ்வளவு பெரிய ம்னிதர்களோடுப் பேசிப் பழகி இருந்தால்தானே வார்த்தைகள் அருமையாக வெளியே வரும்?

வாங்க, கட்டாயம் வரணும் எனறு சொல்லி விட்டு மறுநாள் காலையிலிருந்து காத்துக் கொண்டிருந்தோம் நானும் எங்க வீட்டுக்காரரும்..

காலையில் தொலைபேசியில் உறுதி வேறு செய்து கொண்டேன். மனசு மாறிவிடப் போகிறதே என்றூ.
வந்தார்களம்மா இருவரும் . ஒரு வழக்கமான, அம்மா அப்பா வருகை போலத்தான் இருந்தது.
கணவதி அம்மாவின் பாசம்,அய்யாவின் வீட்டை சுற்றிப் பார்க்கும் அழகு எல்லாம் எனக்கு அதிசயமாக இருந்தது.
அவர்கள் என்ன சாப்பிட்டார்களோ என்னவோ என்று விசாரித்தேன். அய்யாவுக்கு நல்ல காப்பி போதும் சக்கரை கம்மியா என்று அம்மாவும், அவளுக்கு நல்ல பால் போரும் சக்கரையே வேண்டாம் என்று அய்யாவும் சொல்லி விட்டார்கள்.
அதற்குப் பிறகு எங்க வீட்டு மீனாட்சிதான் பேச்சைத்தன் பக்கம் இழுத்துக் கொண்டது. இப்படிக்கூட தனிமையாக ஒரு பிறவி உண்டா என்று சிரிப்பு.
எல்லாவற்றிற்கும் சிரிப்புதான்.
வாங்கின புத்தகங்கள் எல்லாவற்றிலும் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார்,. தான் பழகின சக எழுத்தாளர்கள் பற்றின சுவையான சம்பவங்களைச் சொன்னார். அம்மாவும் அப்போதைக்கப்போது கலந்து கொண்டார்கள்.
என் பிரமிப்பு நீங்கவே மேலும் ஒரு மணி நேரம் ஆனது

அவர்கள் பாண்டிக்குப் பயணம் புறப்பட வேண்டும். வீட்டுக்குப் போய் தோசை சுட வேண்டும் என்று பழகின ரொடீன் அன்றாட வாழ்க்கைக்கு வந்து விட்டார்கள்.
நானும் புத்தகங்களிருந்து கேட்க நினைத்து இருந்த ஒரு சந்தேகத்தைக் கூடக் கேட்கவில்லை.
அவர்களைப் பார்த்ததே பெரிய புண்ணியம் தான்.
அந்த இரண்டு மணி நேரமும் இரு வயது முதிர்ந்த இளமை நிறைந்த வாழ்க்கையின் ரகசியம் தெரிந்த
இரு நல்ல மனிதர்களைப் பார்த்துப் பழகியதுதான் எங்கள் வீட்டில் நிரவி இருந்தது.
எத்தனை முரண்பாடுகளை இருவரும் சந்தித்து
இருக்கிறார்கள்!!
வாழ்வின் கரடு முரடான பாதை எங்கும் பயணம் செய்து
அலுப்புக் காட்டாமல் வாழ்க்கயை ரசித்து ருசிப்பதே தலையாய கடமையாக, ஒரு தவமாக இயங்கும், யாரிடமும் தப்பையே கண்டுபிடிக்காமல் நிறைவையே காணும் இரு அற்புத மனிதர்களைச் சந்திக்கும் பாக்கியம் கிடைத்தது
மீண்டும் அவர்களைப் பார்த்துப் பேசும் நாளுக்காகக் காத்து இருக்கிறோம்.
அய்யா அவர்களிடம் அவரைப் பற்றி எழுதப் போகிறேன் என்றதும் உடனே மீனாட்சியைப் பற்றிய தன் எண்ணங்களை எழுதிக் கட்டுரையை ஆரம்பிக்கலாம் என்று சிரித்துக் கொண்டெ ஐடியா கொடுத்தார்.
ஒரு நல்ல மனிதரையும் அவரது குடும்பத்தையும் அடையாளம் காண்பித்துக் கொடுத்த எங்க அம்மாவுக்கு நன்றி..




// posted by manu @ 4:02 PM 7 comments

ஆனந்தம்

ஆனந்தம்,அனந்தம்.மஹாலக்ஷ்மியுடன் இருக்கும்போதுதான்.
தனியாக இருந்த ராமனுக்குத் தான் எத்தனை கோபம்.

நாங்கள் திருப்புல்லணை என்னும் திருப்புல்லாணி ஆதி ஜகன்னாதபெருமாள் கோவிலுக்குப் போனபோது தான் பார்த்தோம்.
வெறும் தரையில் புல்லால் ஆன இருக்கையில் ராமன் படுத்து இருக்கும் கோலம். கடலரசன் வருகைக்குப் ப்டுத்துத் தபம், செய்கிறான்.மூன்று நாட்களாகப்பசியோடு காத்து இருக்கிறான்.
அவன் நினவோ கடலுக்கு அந்தக் கரையில் காத்திருக்கும்,, ஜானகியிடம்.

தவிப்புடன் இருக்கும் தனது மனைவியிடம் என்று மட்டும் இல்லாமல்,"உங்கள் அரசாட்சியில் நானும் குடியிருப்பவள் இல்லையா. ராமா உனக்கு அதுகூட நினைவு இல்லையா".உன் ஆளுமைக்கு உட்பட்டவளிடம் நீ அலட்சியமாக இருக்கலாமா,?" என்று அனுமனிடம் சொல்லி அனுப்பினாளே, அவள் துயரம் தீர்க்க நான் உடனே போகவிட்டால் என்னை ஒரு கணவன் என்றோ, ஒரு அரசன் என்றொ, சொன்ன சொல் காப்பவன் என்றோ எப்படி நினைக்க முடியும் என்று பரிதவிக்கிறான்.

இயற்கையாகக் கோபத்திற்கு இடம் கொடுக்காதவன்.
அவன் கோபித்த கணங்களை எண்ணி விடலாம்.
தன்னை நம்பியவர்களை யாராவது துன்பப் படுத்தினால்,
உடனே காக்க வந்து விடுவான்.
சீதையைக் காகாசுரன் குத்திக் கிழிக்க முற்படும்போது,
அவள் மடியில் தூங்கிக் கொண்டிருந்த ராகவன், சீற்றத்துடன் எழுந்திருக்கிறான்.
"படுத்திருந்த ஐந்து தலைக்கருநாகத்தை எழுப்பியவன் யார்' என்ற கேள்வியுடன்."/
சுற்றிப் பார்க்கிறான்.அப்போது அவன் பார்வையில் ஜயந்தன் என்ற, காக ரூபம் எடுத்தவன் (இந்திரன் மகன்) படுகிறான்.
ஆக்ரொஷத்துடன், சீதை மேலிருந்த இரத்தத்துளிகளைப் பார்த்த மறு வினாடி பறக்கிறது ஒரு புல்.ராமனின் அஸ்திரமாக. துரத்துகிறது.அவனும் எல்லா உலகத்திலேயும் அடைக்கலம் கேட்டு, தந்தையிடமும் அது கிடைக்காமல் ராமன்சீதையிடமே வந்து விழுகிறான்.
தன்னைத் துன்புறுத்தியவனிடமும் இரக்கமே
பிறக்கிறது தாய்க்கு. சீதை.
விழுந்த கிடந்த காகத்தின் தலையை இராமன் கால்கள் பக்கமாக திருப்பி விடுகிறாள். இராமன்
விடுத்த அஸ்திரம், வீணாகாமல் அந்த அசுரனின் ஒரு கண்ணை மத்திரம் வாங்கிக் கொள்கிறது. இப்படி அவளைப் போற்றிப் பாதுகாத்தவன்,
தன் சீதாவைக் காப்பாற்ற முடியாமல், கடலரசின் தாமதத்தை எப்படிப் பொறுப்பான்?
மூன்று நாட்கள் பொறுமை காக்கிறான். நான்காம் நாளும் அழைப்புக்கு வராத கடலரசனைக் குறித்து அஸ்திரம் பூட்ட,புல்லணையைவிட்டு எழுந்து, தயார் ஆகிறான்.
அவன் கம்பீரமாக நிற்கும் அழகுதான் எப்படி இருக்கிறது!
நிமிர்ந்த பார்வை, அதில் வைராக்கியம்,மூண்ட கோபம், தண்டிக்கத் தயார்நிலையில் கோதண்டம்.
கதறிக்கொண்டு சரணம் அடைகிறான், சமுத்திரராஜன்.
அவனுடன் கூட வந்த அவனது மனைவியரும் சரண் கேட்டு கை கூப்பி நிற்கின்றனர்.
தன்னிலைக்குத் திரும்பும், ராமனின் கோபம் தணிந்து
சேது அணையில் கவனம் திருப்புகிறான்.

"விபீஷணின் நட்பைக் கொண்டான்,
ராவணனை வென்றான்//
வீரமாதா ஜானகி தேவியைத் தீக்குளிக்க செய்தான்.
கற்பின் கனலைக் கனிவுடன் ஏற்று
அயோத்தி நகர் மீண்டான்,
கலங்கிய மக்கள் களிப்புற ராமன் அரசுரிமை கொண்டான் அரசுரிமை
கொண்டான்."//
இந்தக் கடைசி வரிகள் "லவகுசா" என்னும் படத்தில் லவனும் குசனும் ராமனின் எதிரே வால்மீகியின் நூலை அரங்கேற்றம் செய்யும்போது பாடும் பாடல்.
கேட்கும்போதே நம் மனம் உருகும்.
ஆனந்த ராமனாகச் சீதையோடு எழுந்தருளி இருக்கும்
தாசரதியை வணங்குவோம்.








// posted by manu @ 8:59 AM
Comments:
படமும், ராமன் பெருமையும் அப்பப்பா..... சொல்ல வார்த்தையே இல்லைப்பா.
# posted by துளசி கோபால் : 3:04 PM
அன்பு துளசி.நன்றிப்பா. மானிடப் பிறவி என்றால் நினைக்கத் தோணுவது, ராமனைத்தான்.நம்மிடம் இல்லாதது எல்லாம் அவனிடம் இருப்பதனாலியானு தோணும்.
# posted by manu : 4:43 PM
ராமனுக்கு பெருமையெ சீதையால்தான். இதை நான் சொல்லவில்லை தியாகராஜர் கூறுகிறார். "மா ஜானகி சடபெட்டக

Monday, August 21, 2006

தமிழ்

Saturday, May 06, 2006
தமிழ்மணம் பதிவு
தமிழில் எழுத ஆர்வம் இருந்தும் முயற்சி செய்யாமல் சும்மா இருந்த என்னை முடுக்கி விட்டு ப்லொக் பதிவு செய்ய வைத்த துளசி கோபால், என்னை அஙகீகரித்து ஆரம்பித்து வைக்கும் தமிழ்மணத்துக்கும் என்னுடைய
வணக்கம்.
ரொம்ப தேர்தல் வாசனை அடித்தால் மன்னிக்கவும்.
ஐம்புலன் களும் ஒலிப்பெருக்கி,கொடி என்றே நிரம்பி இருக்கின்றன.
தவறு இருந்தாலும் பொறுத்து கொள்ளவும்.
மனு.

ரஙக மாமா

Friday, April 07, 2006
Rangamama-3
Vanakkam. ரஙக மாமா கதை, கவிதை எழுதுவான் என்று சொன்னேன் இல்லயா? இந்த போட்டோவும் அவனுக்கு கவிதை கொடுத்து இருக்கும்.
"அசைந்தாடும் கீற்று
சொல்லும் ஒரு பாட்டு"ன்னு பாடல் எழுதி இருப்பான்.


// posted by manu @ 8:03 AM
Comments: Post a Comment