Tuesday, August 22, 2006

ராம லக்ஷ்மண ஜானகி ஜய் போலோ ஹனுமானு கி

ஸ்ரீராமனாத ஸ்வாமி சரணம்.
இராமெஸ்வரம் ,ராமன் ஈஸ்வரனைப் பூஜித்த இடம்.
ராவணவதம் முடிந்து சீதையுடன் மகிழ்வாகப் புஷ்பக விமானத்தில் ஏறும்போது,
விபிஷணப் பட்டாபிஷேகம் முடிந்து அரசாட்சி ஆரம்பமான நிலையிலும் ,
சீதை பல உயிர்க்ள் பலியானதை நினைத்து மனம் வருத்தம் கொண்டாளாம்.
அப்போது இராம்னுக்கும் ரவணவதம், என்னதான் லோக க்ஷேமம் என்றலும் உயிர் வதை தோஷம் பாதிக்கும்
என்று அறிவுறுத்தப் பட்டது.
சிவனாரைப் பூஜித்து நிவர்த்தி செய்ய வேண்டும் என்று.
அங்கிருந்த முனிவர்கள் உணர்த்தினார்கள்.

உடனெ முன்வந்தது யாராக் இருக்க முடியும்?
நம்ம ஹனுமான் ஜி தான்.

உடனே காசிக்கு சென்று, விஸ்வநாத லிங்கத்தைக் கொண்டு வருவதாக விண்ணில் பாய்ந்து விட்டார்.
சீதையும் இராமனும் முறைப்படி சிவலிங்க அர்ச்சனைக்கு வேண்டிய (அங்கே கிடைக்கக் கூடிய)
இலை, பழங்கள் எல்லாம் சேகரிக்க ஆரம்பித்துக் காத்திருக்கலானார்கள்.
இந்த சம்பவம் நடப்பது இராமேஸ்வரம் என்று இப்போது அழைக்கப்படும் கடல் கரையில்.
அனுமனுக்கு எதனாலொ தாமதமாகிறது.
முஹூர்த்த நேரம் நெருங்கியதால் ராமன் சீதையை நோக்கி, இந்த நேரத்தைத் தவிர்க்கக்கூடாது.
நீயெ சிவரூபமான லிங்கத்தை மணலில் பிடித்து வை.
பூஜையை ஆரம்பிக்கலாம் என்று சொல்லிவிட்டார்.

அவளும் அவ்வாறே மணலும் நீரும் கலந்து லிங்கம் செய்து வைக்க,
இருவரும் ஈஸ்வரனை மனதார வேண்டிக்கொண்டனர்.
அவர்கள் இஷ்டப்படியே பாப விமோசனமும் கிடைத்தது.
சீதையும் ராமரும் வழிபட்டு முடிக்கும்போது அநுமன் காசிலிங்கத்தோடு வருகிறார்.
இங்கோ பூஜை முடிந்துவிட்டது.

அனுமன் கொண்டு வந்த லிங்கத்தைக் கீழே வைத்தார்.

மீண்டும் அதை அசைக்கப் பார்த்தால் முடியவில்லை.

விச்வரூபம் எடுத்து அசைத்துப் பார்த்தாலும் ஸ்வாமி

மனம் வைக்க மாட்டென் என்கிறார்.காசிக்குத் திரும்ப மனமில்லை

அந்த ஸ்வாமி ராமனாதன் ஆகிவிட்டார்.

ராமன் பூஜித்த லிங்கம் ராமலிங்கம்

அனுமன் கொண்டு வந்த லிங்கம் காசிலிங்கம்.

இரண்டு பேருக்கும் கோவில் உண்டு.

அனும்ுக்கும் செந்தூரவர்ணத்தோடு ஒரு தனி சன்னிதி.

நல்ல ஆகிருதியோடு கோவில் வாசல் பக்கம் பாதி உருவம் நிலத்திலும் மீதி உருவம் கடலிலும் இருக்கும்படியான தோற்றம்.

அவ்ர சன்னிதி அருகே நிற்கும்போது காலுக்குக் கீழே கடல் ஓசையிடும் சத்தம் கேட்கும்.

ராமனாதர் கோவில் நந்தி பெரிய வடிவில் உள்ளது.

உள்ளே ஈச்வரனுடன் தாய் பர்வதவர்த்தினி.

ஆடி மாதம் தங்கத் தேரோட்டம், வெள்ளித் தேரொட்டம் உண்டு.

ராமேச்வரம் ஒரு magical place.

பாம்பன் பாலத்தைக் கடக்கும்போதே நம் உற்சாகம்

ஆரம்பம்.முன்னால் இந்த தார்ச் சாலை வருவதற்கு முன்

ராமெச்வரம் -போட் மெயில் ஒன்றுதான் அங்கே போகும்.

நாம் போகும் அந்த ரயிலில் தான் அந்த ஊருக்குப் பால்,தயிர்,காய்கறி,நியூஸ் பேபர் எல்லாம் போகும்.

எங்கள் தந்தை அங்கே தபால்தந்தி அலுவலக மேலாளராக இருந்த 2 வருடமும் ,தினந்தோறும் ஏதாவது நடந்துகொண்டே இருக்கும்.

நாட்டுத் தலைவ்ர வருவார். சென்னைப் பிரமுகர்கள், கவர்னர் ந்று யாராவது ப்ரார்த்தனை செலுத்த வருவார்கள்.

யாத்திரிகர்களால் வாழும் ஊராய் அது இருந்தது.

எனக்குத் தெரிந்து கழுதைகளும் மாடுகளும்

வெளியே உலர்த்தும் புடவைகளை சாப்பிடும் ஒரே ஊர் அதுதான்:-))

முதல் தடவை நாங்கள்(நாங்களும் எங்கள் முதல் புத்திரனும்) 4 நாட்கள் விடுமுறையில் போனபோது,

பாம்பன் பாலத்தின் மேல் ரயில் ஊர்ந்தது இன்னும் நினைவில் இருக்கிறது. கீழே சன்னலுக்கு வெளியே காற்றும் அலை ஓசையும் நம்மை

தாலாட்டும்.

1964 புயல் ஞாபகம் வந்தால் பயம் பற்றிக்கொள்ளும்.

அதில் தானே ஒரு ரயிலோடு பயணிகள் மறைந்தார்கள்.

மேலே இருக்கும் 4ஆவது படம் இரவில் தனுஷ்கோடியின் பிம்பம்.

பழகுவதற்கு இனிய மக்கள். அவ்வளவு வியாபாரம் எடுபடாத நாட்கள் அவை.

இதே பிரயாணம் 2003இல் செய்த போது நிலமை மாறி இருந்தது. (மீண்டும் பார்க்கலாம்)








// posted by manu @ 7:27 AM
Comments:
ராமேஸ்வரம் போய் வர வேண்டும் என்ற என் தாகத்தை ஏற்படுத்தியது இந்த பதிவு.

என்று நிறைவேறுமோ தெரியவில்லை.

ஜனாதிபதியின் ஊர் வேறு இப்போ. இன்னும் கொஞ்சம் வசதி செய்திருக்கிறார்களோ தெரியவில்லை.

கோயிலை வைத்துதான் எல்லோரும் பிழைக்கிறார்கள் என்று நினைக்கிறேன். இலங்கைகாரர்களின் பிரச்சனை ஏதாவது இருக்கிறதா?

ராவணன் பிராமணன். அவனை கொன்றதால் ஏற்பட்டது பிரம்மஹத்தி தோஷம். கொடுமையானது. அதற்கு பரிகாரமாக இந்த பூஜை செய்கிறார் ராமர். இது அந்த ஊர் தல புராணம். வால்மீகி ராமாயணத்தில் இந்த நிகழ்ச்சி சொல்லப்படவில்லை. ஆனால், துளசி ராமாயணத்தில் உண்டு.

ராமர் இன்னும் இரண்டு இடங்களில் சிவனை தொழுது இன்னும் தன் இரண்டு தோஷங்களுக்கு பரிகாரம் செய்து கொள்கிறார். அவைகளும் தமிழ்நாட்டில் தான். பெயர் நினைவில்லை. புத்தகத்தை பார்க்க வேண்டும்.

நன்றி
# posted by ஜயராமன் : 2:57 PM
நன்றி ஜயராமன்.
நானும் அந்தக் கோவிலகள் பற்றீப் படித்து இருக்கிறேன்.
நினைவுக்கு வரவில்லை.

2003இல் நாங்கள் போனபோது மாற்றம் இருந்தது. அடுத்து எழுதுகிறேன்.
# posted by manu : 5:14 PM
மானு,

நான் ராமேஸ்வரம் போயே 34 வருசமாச்சு. அப்ப கொஞ்சம் வேற மாதிரி இருந்ததோ?
நீங்க விவரிச்சதை படிச்சதும், அதையெல்லாம் பார்த்தேனான்னு கூட நினைவு இல்லை.
அதிலும் ஹனுமான் ஜி சன்னிதியில் காலடியில் கடல் ஓசை...?!!!!!

சரி. இப்ப உங்க புண்ணியத்தில் இன்னொரு விஸிட் மானஸிகமா ஆச்சுன்னு வச்சுக்கலாம்.
நன்றி.

மண்டபம் ஸ்டேஷன்லே இருந்து ராமேஸ்வரம் போற ரயிலிலே ஒரே மீன் நாற்றம்.
பொறுக்க முடியாம வாயிலெ எடுத்துட்டேன்(-:
# posted by துளசி கோபால் : 3:05 AM
வாங்கப்பா துளசி.நம்ம அம்மா அப்பா சம்பந்தப்பட்ட எல்லா ஊருமே நமக்கு இனிமை.
இல்லை யான்னா சாமியாவது அந்த ஊரில இருக்கணும்.
இதே போல எங்க இரண்டாவது பையன் இருக்கும் ஊரிலே தினம் அந்தக் கோவில் மணி
ஓசைக் காகவேக் காத்துக்கொண்டு இருப்பேன். நம்ம போக வேண்டிய இன்னோரு லிஸ்ட் தயாரிக்கலாம்மா?:-)0
# posted by manu : 6:37 AM
இந்த விஷயம் சொல்ல விட்டுப் போய் விட்டது.சாலை வழிபயணம் இன்னும் சுலபம். மடுரையிலிருந்தோ ராமனாதபுரத்திலிருந்தோ வண்டி வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம்.
ஆமாம், அனுமன் சன்னிதிக்குக் கீழே கடல். இந்தக் கோவிலும் கடற்கரை ஓரமாகக் கட்டி இருக்கவேண்டும்.
திருப்பதிக்கு முன்னால் போகும்போது கோவில் வாசலில் காரிலிருந்து இறங்கிக் கோவிலுக்குள் போனது கூட எனக்கு ஞாபகம் இருக்கிறது.1960 என்று நினைக்கிறேன்.:-)0
# posted by manu : 1:36 PM
என் தாத்தாவின் வீடு ராமநாதபுரம் பக்கத்தில் இருக்கும் வாலாந்தரவை என்ற கிராமத்தில் இருந்தது. காலையில் 11 மணிக்கு ஒரு ரயிலில் ராமேஸ்வரத்தில் இருந்து மீன் வரும். ரெம்ப fresh ஆக இருக்கும். வாரத்தில் நான்கு நாட்கள் என் தாத்தா வீட்டில் மீன் சமையல் இருக்கும். எங்கும் மணல் வெளி. அடர்த்தியாக மஞ்சள் காடாக வளர்ந்து கிடக்கும் ஆவாரஞ் செடிகள். ஆகா நான் சிறு வயதில் விளையாடிய இடங்கள் எல்லாம் நினைவிற்கு வருகின்றன.
# posted by மகேஸ் : 3:42 PM
Post a Comment



<< Home

No comments: