Thursday, June 23, 2011

சிகாகோவில்சூறாவளி + பதிவர் சந்திப்பு:)

விமானம் வைத்திருப்பவர்களின் வீடும் பெரிதுதான்

Add caption
தனிக்குளம்
வீடு வாசலில் ப்ளேன் கட்டியிருக்கும் வீடுகள்:)
தனியார் ப்ளேன்
மின்னல் வரும் முன் தப்பித்த இளைஞன்
இளஞ்சிவப்பு  மலர்கள்   பெயர் கேட்கவில்லை
மஞ்சள் பச்சை மிளகாய். அழகு தான் :)
நம் காருண்யம் தெரிந்தது தானே  வாத்துகளுக்கு  ரொட்டித் துண்டுகள் போட்டோம்.
இந்த மணிக்கூண்டின் மேல்
 ஏற ஆசை. இடியார் வந்து கெடுத்தார்.
ஒரு குடும்பம் பூங்காவை விட்டு வெளியேற  தயாராகிறது.
மழைத்துளிகள்  விழ ஆரம்பிக்கின்றன.

சிகாகோ வந்ததிலிருந்து மழை நம்மை விடுவதாகத் தெரியவில்லை.
மழை வந்தால் மாட்டிக் கொள்வோமோ என்று பயந்தால்  சூரியனார் வந்து  சிரிப்பார்.
அப்படிச் சூரியனார் சிரிக்கும் வேளையில் நதியோரப் பூங்கா ஒன்றுக்குச் செல்லலாம் என்று முடிவெடுத்துப் புறப்பட்டோம்.

போகும் வாழியில்  தனியார் விமானங்கள் இருக்கும்  சாலை வழியாக வண்டியை ஓட்டிச் சென்றால்
  மகள்.
 மேகம் ஒன்றும் தென்படவில்லை அப்போது.
 வரவில்லை!
அழகிய பெரிய வீடுகளைப் படமெடுத்துக் கொண்டேன். ஒரே ஒரு விமானம் தான் கண்ணில் பட்டது.
யானைக் கொட்டாரம் போல பெரிய பெரிய   கூடங்களில் நின்றிந்த ஆகாசப் பறவைகளைப் பார்க்க முடிந்தது.
காலையில் பலகாரம் முடித்து
நளதமயந்தி  மாதவன் போல் ஹனி ''பை''  என்று சொல்லிவிட்டுப் பிளேனில் ஏறி  போய்விடுவார்களாம். இரவு சாப்பாடு  ஆறு  மணிக்கு வந்து விடுவார்களாம்.
ஹ்ம்ம்  என்று பெருமூச்சு விட்டுக் கொண்டு கடந்தேன்.
மகள் படங்கள் எடுக்க அனுமதிக்கவில்லை.

அங்கிருந்த  நதிக்கரைப் பூங்கா
ஒன்றை அடைந்தோம்.  இரண்டு மூன்று தப்படி எடுப்பதற்குள் வானம் உறுமும் சத்தம் கேட்டது.
 ஒ! எதோ  பறக்கிறது என்று என்னையே  சமாதானம் செய்து கொண்டு அந்த ஓடையையும் மனிதர்களையும் என் படப் பெட்டிக்குள்  அடைத்துக் கொண்டிருந்தேன்.

வலுவான தூறல்கள் விழ ஆரம்பித்தன. இனிய தமிழ் மக்கள் நாலைந்து பேரைக் குடும்பத்தோடு பார்த்துள்    கை
யசைத்தோம்.

உடனே
கிளம்பினாலும் வண்டியை அடைவதற்குள்  பாதி நனைந்தாச்சு.

அதற்குள்  அங்கிருந்த ஒழி பெருக்கியில் தண்ணீர் அருகேயாரும் போக வேண்டாம் பலத்த சூறாவளி வருகிறது என்ற   தண்டோராவும் அடிக்கப் பட்டது.

காலென்ன வழியென்ன ..ம்ஹூம் புள்ளிமானைப் போலத்துள்ளி ஓடும் பாட்டியைப் பார்த்துப் பேரங்கள் திகைத்தார்கள்.
இது  மாதிரி இரண்டு தடவை அனுபவப் பட்டால் அவள் பயம் தெளிந்துவிடும் என்ற சிங்கத்தின் கர்ஜனை வேற:)
வீடு வரும்வரை ஒரு துளி ம்மழையில்லை.
வீட்டை அடைந்தோம். காற்றும் மழையும் கல்யாணக்   கலை
 கட்டியது.
தொலைக்காட்சியில் டொர்நேடோ வார்ந்நிங் சொல்லிக் கொண்டிருந்தார்கள்
தொலைபேசியைத் தொடவேண்டாம்.
ஜன்னல் அருகில் போக வேண்டாம். வீட்டின் அடித்தலத்துக்கோ, இல்லை குளியலறை பாத்    டப்
லோ நின்று கொள்ளலாம். இரவு பத்துமணி வரை ஜாக்கிரதை ஜாக்கிரதை என்று சொல்லிய வண்ணம் இருந்தார்கள்.
நமக்கோ பாலும் கசந்தது படுக்கை நொந்தது. வாழ்க்கையே
கடினமானது:)
வரேன் என்று பயமுறுத்திய புயல் மிச்சிகன் ஏரிக்கரைக்குப் போய்விட்டது.
********
அடுத்த நிகழ்ச்சி   மூன்றாம் சுழிப் பதிவின் உரிமையாளர் திரு.அப்பாதுரையைச் சந்தித்ததுதான்.!
இவர் நம் வீட்டுக்குப் பக்கத்திலேயே இருக்கிறார் என்று தெரிந்து ஒரே ஆச்சரியம் எனக்கு.
ஒரு ஞாயிறு மாலை அவரும் தொலை பேசியில் தொடர்பு கொண்டு தான் வரலாமா
என்று கேட்டதும் உற்சாகத்தோடு  வரச் சொன்னேன்.
பெண் ,மாப்பிள்ளை,,சிங்கம் எல்லோரும் அவருடன் இனிதாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
நான் கேட்டுக் கொண்டிருந்தேன்.
அழகான

 பூங்கொத்துடன் அவர் வந்ததுதான் அருமை.


நம் ''அப்பாவித்தங்கமணி'' யுடனும் தொலைபேசியில் பேசியாச்சு.நல்ல பெண்.
இப்படியாகத்தானே மூன்றுவாரங்கள் கழித்தாச்சு.
மீண்டும் பார்க்கலாம்.
அன்பு அப்பாஜிக்கும்
, ஏடிஎம்
தங்கத்துக்கும்  மனமார்ந்த நன்றி.
புயல் வராமல் வீட்டைக் காப்பாற்றிய பெரிய கடவுளுக்கும் நன்றி.


.


புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.

Friday, June 17, 2011

அமெரிக்க நிலா! அதுவும் பெரிது..

முத்துமகுடம் அணிந்த நிலா.
ஒளிவதும் மறைவதும்  நல்லதொரு விளையாட்டு.
ஜன்னலில் தோன்றிய நிலா.
காலயில்பத்திரிக்கையில்
கூகிலார்கொடுத்த  படம்


புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே. அமெரிக்க நிலா! அது
வும் பெரிது..
Posted by Picasa

Sunday, June 12, 2011

ஆசையில பாத்தி கட்டி....

கத்ரீக்கா

,குடமிளகா,வெண்டக்கா,தக்காளி,..
உதவும் கரங்கள்
கருமமே கண்ணாயினார்...
செடிகள்   உறுதியாக வளர அன்பு கொடுக்கும் பெரியவர்
குழந்தைகளின் விளையாட்டுத் திடல்
கடையிலிருந்து மரக் கட்டைகள் வாங்கி வந்து  நடப்போகும் செடிகளின் பாதுகாப்பாக 
ஒரு  பெட்டியும் செய்து  காப்பாற்றி இருக்கிறார்..
இனி பெரிய சிங்கம்தான்  முயல்களிடமிருந்து இந்தச் செடிகளைக் காப்பாற்ற வேண்டும்.

இதைதவிர நாற்றுகள் வளருகின்றன.
அவை இந்த மழை ஓய்ந்தவுடன்
நடவேண்டும்.
புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.

Saturday, June 11, 2011

மலை கண்காட்சி

மலர் கண்காட்சி
சமையலறை ஜன்னலின் கீழ்
கடைகள் பளபளக்க  சாலைகள் சுத்தம் அவசியம்
கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா
அலங்காரச்சீர் வரிசை
  அமர்க்களமாக வீற்றிருக்கிறது
 மலை கண்காட்சி.
புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.

Tuesday, June 07, 2011

pictures with cinema titles

நீலவானம்

இருமலர்கள்
கண்ணே பாப்பா
கடலோரக் கவிதைகள்
வெள்ளை ரோஜா.

நீலவானம்

ஜூன் புகைப்படங்கள்.  அனுப்பாதவை:)

புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.

Thursday, June 02, 2011

காலையில் தினமும் கண்விழித்தால் தான் கண்ணில் படும் ஆதவன்

கிழக்கு வெளுத்ததடி கீழ்வானம் சிவந்ததடி
 
மரங்களும்
சூரியனும்
காலை வணக்கம் சொல்லிக் கொள்கின்றன.
கருவேப்பிலைக் கண்ணு மாதிரி  ஒரு கருவேப்பிலைச் செடி.
புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.

Tuesday, May 31, 2011

Interlaken,Switzerland


http://naachiyaar.blogspot.com

இந்த   இடத்திலும் இண்டர்லாக்கன் பற்றிய செய்திகள் கொடுத்திருக்கிறேன்
சொல்ல மறந்தது இந்த இடம் ஸ்ரீரங்கம்  நகரத்தை நினைவு படுத்தியதுதான் அழகு.
ஆறுகள் இரண்டு அங்கே. ஏரிகள் இரண்டு இங்கே:)


புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.
Posted by Picasa