Tuesday, October 04, 2011
Friday, September 30, 2011
கொலு வைத்தாச்சு. கண்டு மகிழ வாருங்கள்.
புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.
நவராத்திரி வருவதற்கு முன் நான்கு நாட்களாக குதித்துக் கொண்டிருந்தது பேத்திதான்.
இயந்திரமாகப் பொம்மைகளைக் கீழெ
இறக்கி, கைகள் கால்கள் , முகம் எல்லாம் சரியாக இருக்கிற்தா என்று பார்த்து
ஒவ்வொன்றாகப் பிரிக்கும் போது அவள் முகத்தில் தெரிந்த ஆனந்ததைத்தைப் பார்க்க வேணுமே.
''கான் ஐ டச் தெம் பாட்டி.
க்ரிஷ்னா உம்மாச்சி நிறைய வச்சிருக்கியா.
தினம் வருவாரா.
நான் தினம் கூப்பிடறேனே
சொப்பனத்தில வர மாட்டேன் என்கிறாரெ.
ஐ லவ் ஹிம் சோ மச்.!!''
இன்னோரு ஆண்டாளா!
வருவார் என்று சொல்லி வைத்திருக்கிறேன்.
அவளுக்காக வருவான் கண்ணன்.
Tuesday, September 13, 2011
அமைதி நிலா அதிகாலையில்........
நிற்க நேரம் இல்லாமல் வேலைகளும் தொலைபேசி அழைப்புகளும்
நிறைந்து இருக்கும் காலம். இன்னும் இரண்டு நாட்களில் கடைக்குட்டியின்
குடும்பம் வந்து இறங்குகிறது. அவர்களது திருப்பதி பயணம்.
இத்தியாதி விவரங்களை ஏற்பாடு செய்வதிலும்
குழந்தையின் அப்த பூர்த்திக்கான சிறிய அளவிலான
விழாவுக்கான பரபரப்பிலும் நொடிகள் பறக்கின்றன.
இருந்தாலும் நிலவை மறக்க முடியவில்லை.
என்னைப் படம் பிடிக்காமல் எப்படி இருப்பாய் என்று ஜன்னல் வழியே
என்னைத் தட்டி எழுப்பிய ஒளி.
நேரம் காலை நான்கு:)
மனதுக்குப் பிடித்த தோழ்யை இருதயத்திலும் கண்களிலும் நிறைய
வாங்கிக் கொண்டாலும் காமிராவிலும்
பிடித்துக் கொள்ள ஆசை.
என்னைவிட அழகு இந்த உலகில் யார் என்று கேட்கும் தோற்றம் இந்த நிலா அம்மாவுக்கு.
எதிர்த்த வீட்டு வாட்ச்மான் ''அம்மா இத்தனை சீக்கிரம் ஏன் வெளி வருகிறார்?
பண்டிகை கூட இல்லையே.''
என்று என்னைப் புதிராகப் பார்க்கிறார்:)

Saturday, September 10, 2011
நொத்ரே டோம் கோவில்,PARIS
![]() |
கோவிலின் உள்ளே |
![]() |
கார்கோயில் |
![]() |
உலகப் பிரசித்தி பெற்ற இசைக் கருவி ஆர்கன். |
வெளியிலிருந்து பார்க்கத்தான் முடிந்தது. அவ்வளவு நீளம் க்யூ நின்றது.
திருப்பதி கியூ வரிசை அளவு இல்லாவிட்டாலும் அதில் பாதி அளவாவது இருந்தது.
இந்தக் கோவிலும் அன்னை மேரிக்காக எழுப்பப்பட்ட கோவிலே.
ஹன்ச் பாக் ஆஃப் நாத்ரடோம் நாவல் இங்கிருந்து ,இந்தக் கோவிலின் பின்னணியில் எழுதப்பட்டது.
அதைப் படித்ததிலிருந்து இங்கே உண்மையாகவே கார்கோயில்(Gargoyils)
இருக்குமோ:)
என்று இளவயதில் நினைத்ததும் உண்டு:)
வெளியிலிருந்து எவ்வளவு படங்கள் எடுக்க முடியுமோ அவ்வளவு எடுத்தோம். மற்றவை கூகிளிலிருந்து
எடுத்துக் கொண்டேன்.
சிற்பங்களின் அளவோ,செதுக்கப்பட்ட அழகோ சொல்லி முடியாது.
திரும்பிய இடங்களில் எல்லாம் அற்புதம்.
புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.
Wednesday, September 07, 2011
Subscribe to:
Posts (Atom)