Monday, September 13, 2010

மந்திர ஜமக்காளம்

விமானப் பயணங்களைப் பற்றிய விவரங்களைப் படித்துக் கொண்டிருந்த
போது, டிஸ்கவரி சானலில் ஏ380 ஏர்பஸ் பற்றிய விவரங்களைக் காண்பித்துக்
கொண்டிருந்தார்கள். விமானத்தின் வெளிப்புறம்,கட்டுமானம், ரோல்ஸ்ராய்ஸ்
எந்திரங்கள், பறவையினால் சேதமுறாமல் இருப்பதற்கான அதற்காகவே
தயாரிக்கப்பட்ட ஃபைபர் க்ளாஸ் வெளிப்புற சுவர்கள், என்று ஏகப்பட்ட விவரங்கள்.
இறங்கும் போது விமானத்துக்கு ஏதும் பாதிப்பில்லாமல் அதிர்வில்லாமல்
இறங்கக் கூடிய ஷாக் அப்சார்பர்கள் கொண்ட சக்கிரங்கள். தொலைக்
காட்சியில் பார்க்கும்போது எனக்கு ஏற்பட்ட ஆச்சரியத்தைச் சொல்லி
முடியாது. பயணத்தின் ஒவ்வொரு நிமிடமும் கவனமாக இருக்கும் பைலட்கள்,
அந்த விமானத்தின் உட்புறம் அமைந்த விதம், எப்பவுமே எகானமியில் பயணிக்கும்
வாய்ப்பே கிடைக்கும்:) இந்த விமானத்தில் அந்த எகானமி வகுப்பே ப்ரமாத
சௌகர்யத்தோடு அமைந்திருக்கிறது. அப்புறம் மற்ற வகுப்புகளைப் பற்றிக்
கேட்கவே வேண்டாம்:) குளிக்க ஷவ்ர் கொண்ட டாய்லெட்கள். ஒருத்தருக்கு
ஒருத்தர் பேசிக்கொள்ள தனித்தனி இருக்கைகள். அக்கடாவென்று
சாய்ந்து படுத்தவாறு பார்க்க சாய்மானங்கள், படுக்கைகள். தனி டிவி .
எனக்கென்னவோ ராமாயணத்தில் வரும் புஷ்பக விமானத்தை இவர்கள்
காப்பி எடுத்து இந்த மாதிரி தயாரித்திருக்கிறார்களோ என்று சந்தேகமாக இருக்கிறது.;)<>
<>
கிளம்ப  தயார் !




புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.

11 comments:

Anonymous said...

எந்த ஏர்லைன்ஸ் இது வல்லிம்மா?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஓ ரொம்ப அருமை.. வல்லி

வல்லிசிம்ஹன் said...

எல்லா ஏர்லைன்ஸ் கிட்டயும் இருக்குனு நினைக்கிறேன் அம்மிணி. காந்டாஸ்,எமிரட்ஸ்,சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ப்ரிடிஷ் ஏர்வேஸ்,காதே பசிஃபிக் எல்லோரைடைய விமானங்கள் படங்களும் இருக்கின்றன.

வல்லிசிம்ஹன் said...

அட இப்பதான் ஹரித்வார் படிச்சுக்கிட்டு இருக்கேன். அதுக்குள்ள இன்னோரு கமெண்ட் வந்துவிட்டது:) ஈ எல்லாம் வேற எங்கியோ போயிருக்கு. அப்படி இல்லாட்ட வேற காரணம் என்ன ன்னு யோசிக்கிறேன்.:)
(ஈ யாடலைன்னு சொல்லவரேன் முத்து)

Unknown said...

விமானத்தின் படங்கள் நன்றாக உள்ளன வல்லிம்மா:))))

ஸாதிகா said...

விமானபகிர்வு அருமை.பகிர்வுக்கு நன்றி!

வல்லிசிம்ஹன் said...

அன்பு சுமதி, படங்கள் அப்லோட் செய்யும் போது பெரிதாக இருக்கும் படங்கள் பதிவையே மறைத்துவிட்டன. இப்போது சரி செய்துவிட்டேன் பா. ரொம்ப மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாகவும் இருக்கிறது. நீங்கள் அசராமல் பின்னூட்டம் இடுவது.நன்றிப்பா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸாதிகா, நல் வரவு. இன்னும் நல்ல படங்களைப் பதிவு செய்ய முயற்ச்சிக்கிறேன்மா. நன்றி.

Unknown said...

சென்ற வார சிறந்த எழுத்தாளர்கள் - http://www.jeejix.com/Post/Show/1377/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

பெரு (அ) பொலிவியா இசை - http://www.jeejix.com/Post/Show/1402/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%20(%E0%AE%85)%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88

ரஜினி ஏன் அப்படிச் சொன்னார்? - http://www.jeejix.com/Post/Show/1296/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%20%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_


(www.jeejix.com ) .
உங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் !!

சாந்தி மாரியப்பன் said...

அருமையா இருக்கு வல்லிம்மா...

மோகன்ஜி said...

சுவாரஸ்யமான பதிவுங்க! முந்தா நாள் தான் மும்பைல இருந்து நம்மூர் விமானத்துல நொந்து போய் வந்தேன்! அதைப்பத்தி ஒரு பதிவும் போடலாம்னு இருக்கேன். உங்க பதிவப் பாத்துட்டு பெருமூச்சோடு,பொறாமையில் காதிலிருந்து புகையும் வருது மேடம்!