Thursday, September 09, 2010

PIT செப்டெம்பர் போட்டிக்கு


மீனாட்சி 2000த்து டிசம்பர் 20 ஆம் தேதி 4 இன்ச் குட்டியாக ஒரு பையில் வந்தது. அதோடு வெள்ளைவெளேர் என்று சில்வர் அரொவானாவும் வந்தது.


மீனாட்சி சாதாரண அரோவானா இனம். வெகு சாது. சாது மிரண்டு ,கன்னா பின்னாவென்று சாப்பிட ஆரம்பித்து ஒரெ வருடத்தில் ஒரு அடிக்கு வளர்ந்தது.

இனம் புரியாத பாசம். அதன் கண்ணில் எப்பவும் ஒரு தேடல். என்னை தென் அமெரிக்காவில் கொண்டுபோய்விட்டுவிடேன். நிம்மதியாய்ப் போய்விடும்''என்று சொல்வது போல இருக்கும்.

சிலசமயம் அது அது செய்யும் அட்டகாசம் பயம் தரும் . மதம் பிடித்த யானை கதைதான்.

பழைய கதையாகிவிட்டது.

பலவிதமாகப் போஸ் கொடுத்த மீனாட்சியின் சில படங்கள்.

ஏதாவது ஒரு நல்லதை தேர்ந்தெடுங்களேன்.

புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.
Posted by Picasa

9 comments:

ராமலக்ஷ்மி said...

புது வலைப்பூவுடன் பயணிக்கும் முதல் நபராக வாழ்த்திக் கொள்கிறேன்.
[நான்தானே? வடை போகலியே:)?]

மூன்றாவது படம் என் தேர்வு.

ராமலக்ஷ்மி said...

நாலாவதையே அனுப்புங்க. அதுவே சிறப்பு.

[ முதலில் 3 படமே இருந்தாற் போலிருந்ததே.]

துளசி கோபால் said...

மீனாட்சியைப் பார்த்ததும் மனசுக்குள்ளே நிறைய விஷயங்கள் வந்துபோச்சு.

எல்லா பதிவுகளையும் பார்த்துட்டேன்.

ரொம்பப்பிடிச்சது மரங்கள் தான்.

சூப்பரா இருக்கு.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா ராமலக்ஷ்மி. உங்களுக்குத் தான் முதல் வடை:)
நான்கு படங்கள் தான் வலையேற்றினேன். நாலாவதுதான் என் சாய்ஸ் கூட,. நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

நானும் அதையே நினைத்தேன் துளசி.
பாவங்கள். நம் வாழ்க்கையும் கோகி,மீனாட்சி வாழ்க்கையும் கொஞ்ச வருடங்களுக்குப் பிணைக்கப் பட்டு இருந்திருக்கிறது. அது அதுகளுக்கான சொர்க்கங்களில் நன்றாக இருக்கட்டும்.

Unknown said...

நாலாவது நல்ல சாய்ஸ் வல்லிம்மா:))))

கோமதி அரசு said...

புகைப்படத்திற்காக புது வலைப்பூ அருமை.

வாழ்த்துக்கள்.

நாலாவதையே அனுப்புங்க அக்கா.

வல்லிசிம்ஹன் said...

நன்றிம்மா கோமதி. இன்னும் நிறையப் படங்கள் சேகரிச்சுட்டுப் பதிவிடுகிறேன்.

வல்லிசிம்ஹன் said...

நன்றிம்மா கோமதி. இன்னும் நிறையப் படங்கள் சேகரிச்சுட்டுப் பதிவிடுகிறேன்.