Thursday, January 20, 2011

தைத்திங்கள் வில்லிபுத்தூர்

மாப்பிள்ளை ரெடி
கல்யாணப்பொண்ணு
ஆண்டாள் கல்யாண வைபோகமே
ஆண்டாளுக்குப் பூமாலை
ஆண்டாளின் பல்லாக்கு
பொங்கல் முடிந்த மறுநாள் காலையில் கனுபொங்கல் வைத்துவிட்டு
பிறந்தகத்துப் பழைய சாதமும் சாப்பிட்டுவிட்டு  தொலைக் காட்சியைப் பார்க்க உட்கார்ந்தேன்.
மனதின் ஒரு மூலையில் எப்பொழுதும் ஒரு  ஏக்கம்,நினைத்த போது நினைத்த இடத்துக்குப் போக முடியவில்லையே,.
கோவில்களுக்குப் போக முடியவில்லையே என்ற  நினைப்பு இருந்து கொண்டே இருக்கும்.,.
அந்த எண்ணத்தை மாற்ற வந்தது போல கோதை நாச்சியாரே  வந்துவிட்டாள்.
நாச்சியார் திருமொழியோடு,''தைத்திங்கள்''என்று தொடங்கும் பாசுரத்துடன்  என் கண் முன் வில்லிபுத்தூர் அரசியும் அவள் கேள்வன் ரங்கமன்னாரும் உலா வந்தனர்,.
கூடவே வடபத்ர சாயி.

கண்கள் கொடுத்த இறைவனையும் சரியான நேரத்தில் அந்தத் தொலைக்காட்சியைப் பார்க்கதூண்டிய கைகளுக்கும்  என் நன்றிகள்.
படங்கள் பிரமாதமாக வரவில்லை. இருந்தாலும் பகிர்ந்து கொள்ளத் தோன்றியதால் உங்களுக்குப்
பதிவிடுகிறே.ன்
தாயே சரணம்.




புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.

2 comments:

Rathnavel Natarajan said...

Good pictorial Blog.

வல்லிசிம்ஹன் said...

வருகைக்கு மனம் நிறைந்த நன்றி.