Wednesday, July 13, 2011

Visiting The Big Apple

little pond  by the road
for a dollar one dance!
arriving  to  Ellis  island
Add caption
She is still  showing the way to USA
whellchairamma  and paiyan
Broadway theater
Puthuvasantham  paattukkaarar!!

நியூயார்க்கை அடுத்த நுஆர்க் ( இப்படித்தான் சொல்கிறார்கள்.)
அங்கே இருக்கும் மாரியாத் ரெசிடென்சியில் மூன்று நாட்கள் தங்கி இருந்தோம்.
கிளம்ப்பும்போது இருந்த கால்வலி
ஒரு ஆட்வில் மாத்திரை சாப்பிட்டதும் குறைந்தது.
அந்த நாளையப் பயணம் லிபர்டி சிலையும்,ஊர் உலாவும். பெரிய பஸ்.
அதற்குத்தான் தலைக்க்கு
அறுபது
டாலர் வீதம் கேட்கிறார்கள். அதுவும் படியேறி மாடியில் உட்கார்ந்து கொள்ளணும். வெய்யிலோ சக்கைபோடு போடுகிறது.
எங்க வேணுமின்னாலும் இறங்கி எங்க வேணாலும் ஏறலாம்.
இந்த
ஐடியாவைக்
கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு
இரண்டு டாக்சி பிடித்து பாட்டரி பார்க் என்ற இடத்திற்கு வந்தோம்.
அங்கிருந்துதான்
பெர்ரி(ferry) பிடித்து லிபர்டி தீவுக்குப் போகணும்.
அதுக்கான கியூ அனுமார்வாலுக்கு மேல நீளம்.
ஏடு கொண்டலவாடா கூப்பிடலாம் என்று நினைத்தேன்.
வழியெங்கும் பாப்கார்ன்,ஜனகனமன வாசிக்கும் அமெரிக்கர்,
ஓடும் பாட்டிதாத்தாக்கள்,நம்மூர்
யுவதிகள்,குடும்பங்கள் அச்சுஅசல் தேர்விழாக் கூட்டம்.!
ஒருவழியாக் ஒடமேறிச் சென்றே
சுதந்திர தேவியையும் பார்த்துவந்தோம். அந்த அம்மையாரைப் பற்றித் தனிப் பதிவே
போடவே
ண்டும். அங்கு போய் இன்கினதும் கண்ட முதல் காட்சி ஒரு அழகான
பெண் சற்றே பருத்த உடல் ,என் கண்முன் படிதடுக்கிக் கிழே விழுந்தால்.
அடுத்தகணம் அங்கிருக்கும் ரேஞ்சர்கள் ஆஜர்.
கண்ணீரும் விசுமபலுமாக இருந்த பெண்ணுக்கு ஒரு மாத்திரை, கண்ணைத்துடைத்துக் கொள்ள டிஷ்யூ,ஒரு வீல்சேர்,காலில் கட்டு எல்லாம் போடப்பட்டது. ஆவலுடன்
வந்த நண்பன் அழாத குறையாக ,அவள் கையைப் பற்றிக்கொண்டு
நின்றிருந்தான்.
வந்தபடகிலேயே திரும்பினர்.
அந்த ஜோடி. காலில் போட்டிருந்த ஏணிச்செருப்பு
தடுக்கிவிட்டதாம். மீண்டும் வருகிறேன்.அடுத்த பதிவில்
பதிவாளரின் சாகசங்கள் வெளிவரும்.

அன்புடன்,
ரேவதிnarasimhan..புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.
Posted by Picasa

12 comments:

திவா said...

வாவ்! எவ்வளோ அழகான படங்கள்!

priya.r said...

Nice pictures! please keep blogging Ma

ராமலக்ஷ்மி said...

முதல் படத்திலேயே உள்ளம் கொள்ளை போய் விட்டது.

3,5 வானின் நீலம் அட்டகாசம்.

கண்ணகி? அட ஆமாம்:)!

ஏணிச் செருப்பை இனித் தவிர்ப்பார் அப்பெண்மணி என நம்புவோம்.

துளசி கோபால் said...

அருமை.

எனக்கு இன்னும் ஆச்சரியம் என்னன்னா..... மக்களைப் பார்த்ததுமே அவுங்க எந்த நாட்டுக்காரான்னு புரிஞ்சுக்கிட்டு உடனே அந்தந்த தேசிய கீதம் வாசிக்கரதுதான்ப்பா!!!!

நமக்கும் ஜனகன மன கிடைச்சது. ஆனால் அப்ப நாம் நியூஸி மக்கள். God of Nations வாசிச்சு இருக்கணும்:-)))))

geethasmbsvm6 said...

அருமையான படங்கள். எல்லாமும் அழகு

வல்லிசிம்ஹன் said...

அன்பு தம்பி வாசுதேவன், பாராட்டுகள் உத்சாகத்தைக் கொடுக்கின்றன.

இங்கே படங்களுக்கு உயிர் கொடுப்பது இடங்கள் தான்

வல்லிசிம்ஹன் said...

Thanks Priya. I will I WLL. IT IS LIKE BREATHING...BLOGGING.;)

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி, இல்லைமா.அவர்களுக்கு இந்தச் செருப்புதான் பழகி இருக்கிறது.

மாறுவார்களா என்பது சந்தேகம். :(

படங்களின் அருமை காண்பவர் கண்களிலும் எடுக்கப்பட்ட இடைத்தைப் பொறுத்தும் தான்.. நல்ல இடம் , படம் பிடித்த இடம்:))

துளசி கோபால் said...

போகட்டும் ஒரு சேஞ்சுக்கு வேற யாராவது விழணும்தானே:-))))))

வல்லிசிம்ஹன் said...

அன்பு துளசி, எனக்கும் ஒரே ஆச்சரியம். சம்பாதிப்பதிலும் என்ன நளினம் பார்த்தீங்களா.

அவருக்கு நியூசிப் பாட்டுத் தெரியலையோ என்னவோ.ஆஸ்திரேலியாக்காரர்களைக் கூட மகிழ்வித்தார்.

துளசி கோபால் said...

நியூஸி ஆந்தம் கேட்கவே ரொம்ப நல்லா இருக்கும்ப்பா. அதுலேயே இங்கிலிபீஸு அண்ட் மவோரி சொற்கள் வரும்.

முதல்முதல்லே கேக்கற நார்த் இண்டியனுக்கு இது என்ன ஆட்டா சப்பாத்தி எல்லாம் சொல்ராங்கன்னு இருக்கும்:-))))))

வல்லிசிம்ஹன் said...

அன்பு துளசி,

அவரையே பாடச் சொல்லி இருக்கலாம்:)

ஆமாம் யாரவது விழணும்னு இருந்தது..

அந்தச் செருப்பு படம் அனுப்பறேன்:)

--