Tuesday, August 16, 2011

பாரீசுக்குப் போ..............


நோடிறேடோம்
 சர்ச்
பாரீசுக்குப் போகலாமா என்று மகன் கேட்டதும் நினைவுக்கு வந்தது பல சமாசாரங்கள்.


ஜெயகாந்தன் ஐய்யாவின் "பாரீசுக்குப் போ" நாவல். இசைஆர்வத்தில், ஒரு பழமையான கலாசாரத்திலிருந்து

முரட்டுத்தனமாகத் தன்னை விடுவித்துக் கொண்டு பாரீஸ் செல்லும் ஒரு இளைஞனின்

கதை..

இரண்டாவது மறைந்த இந்தி நடிகர் ஷம்மிகபூரின் நடிப்பில் வெளிவந்த ஆன் ஈவனிங்க் இன் பாரீஸ்

மூன்றாவது,

சிவந்த மண் திரைப்படத்தில் இடம் பெற்ற "ஒரு ராஜா ராணி யிடம்" பாடல்

இடம் பெற்ற இடமாகப் பாரீஸை நான் நினைத்தது.:)

இன்னும் எத்தனையோ கதை,திரைப்படங்கள் வந்தாலும் எனக்கு உகந்தவை இந்த நினைவுகளே.
ஏதாவது ஐரோப்பிய நாட்டுக்குப் போகவேண்டுமென்ற எண்ணம். பாரீஸ் வென்றது.

மூன்றரை மணி நேரப் பயணம் குழந்தைகளுக்கும் எங்களுக்கும் நன்மை.தங்கும் விடுதியெல்லாம் நான்கு மாதம் முன்னாலயே பதிவு செய்திருந்தார் மகன்.சென்ற வியாழன் காலை எட்டு மணி டிஜிவி ரயிலில் கிளம்பத்தயாரானோம்.இருக்கைகள் அனைத்தும் மிக வசதி. வேகமோ அதிகம்.ஏறினதுதான் தெரியும்.

அலுங்காமல் குலுங்காமல் 500 கிலோமீட்டர் தூரம் கடந்து விட்டோம்.இருக்கும் நேரத்தை வேணாக்காமல் ஊர் சுற்றிப் பார்க்கணும்.

சாப்பாடு, ரெஸ்ட் எடுக்கிறது இதெல்லாம் கொஞ்ச நேரம் தான் ஒதுக்கணும்.இரவு நேர விளக்கு வெளிச்சத்தில் நகரைக் காணவேண்டும் என்றெல்லாம்

திட்டம்.

முடிந்தது கொஞ்சம் தான். அந்த ஊருக்கு மூன்று நாள் எல்லாம் போதாது.:)

புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.

8 comments:

வல்லிசிம்ஹன் said...

நாங்கள் பயணித்த விரைவு வண்டியின் படம் பதிவில் ஏற்ற முடியவில்லை. அடுத்த பதிவில் பார்க்கலாம்

அமைதிச்சாரல் said...

படங்கள்லயாவது பாரீசை பாத்துக்குறோம்.. உங்க இடுகையில் :-)

இராஜராஜேஸ்வரி said...

அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

துளசி கோபால் said...

உண்மை. மூணு நாள் போதவே போதாது. லூவரையே சரியாப் பார்க்கலைன்னு எனக்கு ஆதங்கம்.

இன்னொருக்கா போகவேண்டிய லிஸ்டில் இந்த ஊர் இருக்கு.

படங்கள் அருமை.

Unknown said...

இந்தியா தற்போது எங்கே இருந்து உயரும் பெரிய திறனை கொண்டிருக்கிறது. இந்த வளர்ச்சி மலர்ந்துகொண்டிருக்கிறது போது, என்ன ஒரு பிரகாசமான எதிர்காலத்தை அது ஊக்கமூட்ட வேண்டும் ஒரிஜினாலிட்டி இல்லை, ரஜினி கூறுகிறது. மேலும் அறிய இங்கே சொடுக்கவும்
http://bit.ly/n9GwsR

வல்லிசிம்ஹன் said...

அன்பு சாரல் 337 படங்கள் இருக்கு. கொஞ்சம் கொஞ்சமாப் பதிவிட்டுவிடலாம்:)
நீ/ங்களும் பாரீசுக்குக் கண்டிப்பா போவீங்க.
நான் கனவில கூட நினைச்சதில்லை. ஆனால்
போகிற வாய்ப்பு கிடைத்தது..

வல்லிசிம்ஹன் said...

நன்றி இராஜராஜேஸ்வரி.
ரசித்தால் உற்சாகம் தான்.

வல்லிசிம்ஹன் said...

துளசி,
லூவரை வெளியில் இருந்து பார்த்ததோடு சரி. ஊர் சுற்றும் பஸ்ஸில் ஏறியதால் இவ்வளவாவது படம் எடுக்க முடிந்தது.
எங்க போனாலும் கியூ க்யூ!!!
அழகுதான் இந்தப் பாரீஸ்.