Tuesday, August 30, 2011

வெற்றிக் கொடி கட்டு


மரங்களும் சொன்ன பேச்சைக் கேட்கும் பாரீஸ்

புதிய பாரீஸ்
போரின் அவலம்
புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.
இந்தப் படங்களுக்கான விளக்கங்கள் கூகிலாரைப் பார்த்துத்தான் தெரிந்து கொள்ள
வேண்டும்.
ஒரு தரமான ஆங்கிலம் பேசும் வழிகாட்டி கிடைக்கவில்லை.
நேரமும் கொஞ்சம்.
 கிராமத்தான் உயிர் காலேஜ், செத்த காலேஜ்

.பார்த்த  கதைதான்.:(
இருந்தாலும் கலையை ரசிக்க நமக்குக் கதை வேண்டாமே.

அதைத்தான் இங்கே படங்களாகப் பகிர்ந்து கொள்கிறேன்.
இந்த லிங்கில் வெற்றி வளைவின்    விளக்கங்கள் இருக்கின்றன.
பேரரசன்

    நெப்போலியன் ஆஸ்திரியாவை வென்று அந்த ஊர்  இளவரசியை மனம் புரிந்து வந்தபோது  இந்த  வெற்றி
 வளைவைக் கட்டத் தீர்மானம் செய்யப் பட்டது. 
அவர்   செயின்ட்  ஹெலினா தீவில் இறந்த பிறகு
 அவரது சாம்பலும் இறுதி ஊர்வலமாக இந்த
மண்டபம் வழியாக எடுத்துச் செல்லப் பட்டதாகக் குறித்து   இருக்கிறார்கள்.
வளைவுக்கு வெளியே அணையா தீபம் ஒன்றும்  எரிந்து கொண்டிருக்கிறது.
 பிரெஞ்ச் வீரர்
இறந்ததை
கௌரவிக்கும் வண்ணம்.,  இங்கே நினைவுச் சின்னங்களும் சிற்பங்களும் எழுப்பப் பட்டிருக்கின்றன.




இங்கு இன்று ஈத்
 பிறை காணப்பட்ட செய்தி. இன்னும் நான்கு நாட்களுக்கு ரமதான் கொண்டாட்டங்களுக்கு  ஊடகங்கள் தயார் நிலையில் இருக்கின்றன.

அனைவருக்கும்   ரம்ஜான் திரு நாள் வாழ்த்துகள்.

4 comments:

துளசி கோபால் said...

படம் பார்த்துக் கதை சொல்:-)))))

உங்கள் அனைவருக்கும் விழாக்கால வாழ்த்து(க்)கள்.

வல்லிசிம்ஹன் said...

கதைதான். நீண்ட கதை. துளசி.
படித்தது அத்தனையையும் வலையேற்ற முடியவில்லை.
புரட்சிகள் இன்னும் அங்கே தொடர்ந்து கொமண்டிருப்பதாகத் தான் தோன்றுகிறது.
சுதந்திர தாகம் தீராத நகரம்

Chitra said...

சுதந்திர தாகம் தீராத நகரம்



...... ஒரே வரியில் - உங்கள் படங்களை போலவே அழகாக சொல்லி விட்டீர்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு சித்ரா,வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.
truly, the free spirit is so visible. you also want to join te fum.