Tuesday, September 13, 2011

அமைதி நிலா அதிகாலையில்........

நிற்க நேரம் இல்லாமல்  வேலைகளும் தொலைபேசி அழைப்புகளும்
நிறைந்து  இருக்கும் காலம். இன்னும் இரண்டு நாட்களில் கடைக்குட்டியின்
 குடும்பம் வந்து இறங்குகிறது. அவர்களது திருப்பதி பயணம்.
இத்தியாதி  விவரங்களை ஏற்பாடு செய்வதிலும்

குழந்தையின் அப்த பூர்த்திக்கான சிறிய அளவிலான
விழாவுக்கான   பரபரப்பிலும்  நொடிகள் பறக்கின்றன.

இருந்தாலும் நிலவை மறக்க முடியவில்லை.
என்னைப் படம் பிடிக்காமல் எப்படி இருப்பாய் என்று ஜன்னல் வழியே
என்னைத் தட்டி எழுப்பிய ஒளி.
நேரம் காலை நான்கு:)

மனதுக்குப் பிடித்த தோழ்யை இருதயத்திலும் கண்களிலும்  நிறைய
 வாங்கிக் கொண்டாலும் காமிராவிலும்
பிடித்துக் கொள்ள ஆசை.
என்னைவிட  அழகு இந்த உலகில் யார் என்று கேட்கும் தோற்றம் இந்த நிலா அம்மாவுக்கு.
எதிர்த்த வீட்டு வாட்ச்மான்  ''அம்மா இத்தனை சீக்கிரம் ஏன் வெளி வருகிறார்?
பண்டிகை கூட இல்லையே.''
என்று என்னைப் புதிராகப் பார்க்கிறார்:)




புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.
 

11 comments:

துளசி கோபால் said...

மனசுக்கு றெக்கை மட்டும் போதாது. காலுக்குச் சக்கரமும், தோளுக்குக் கைகள் பலவும் வேணுமுன்னு நிலாம்மாவிடம் கேக்கலாம். (ப்ளவுஸ் தச்சுக் கஷ்டமாப்போயிடுமுன்னு அவள் பதிலாம இருக்கணும்1)

விசேஷங்கள் நல்லபடி நடக்க வாழ்த்துகின்றேன்.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் துளசி. தலையில்லாத வாத்து சேதி தெரியும் இல்லையா:)
அது போல சிலசமயம் எங்கயோ ஓடிக் கொண்டிருக்கிறேன்.
பசங்கள் வருவதற்கு முன் வேலைகளை முடிக்க வேண்டும்.
ப்ளவுஸ் என்றதும் ரங்காச்சாரி நினைவு வருகிறது. அங்கே தைக்க ரெடியா ப்ளௌஸ் கத்திரிச்சு வச்சு இருக்காங்க.
நீங்க இருந்தால் அமோகமா தைச்சுப்பீங்க.

துளசி கோபால் said...

அட1 ரங்காச்சாரியில் இப்படி எல்லாமா!!!!! பேஷ் பேஷ். எட்டுகைகளுக்கும் பொருந்துமோ?????

இதேபோல அந்தக்கால உள் பாடீ(ஸ்) கத்திரிச்சுக் கிடைக்குதான்னு பாருங்க.

அதுலே கொஞ்சம் பரிசோதனைகள் பண்ணிக்கிட்டு இருக்கேன்:-)

முனைவர் இரா.குணசீலன் said...

புதையலையெல்லாம் வானத்தில் வைத்துவிட்டு அதன் சாவியை பூமிக்குள் தேடிக்கொண்டிருக்கும் மனிதர்களுக்காக..

சாவியைத் தேடித்தந்த பதிவு.

அருமை.
விளக்கங்களும் நன்றாகவுள்ளன

பாராட்டுக்கள்.

வல்லிசிம்ஹன் said...

துல்சிமா. துர்கைக்கா தைக்கப் போறீங்க:)
எட்டு கையா!!

வல்லிசிம்ஹன் said...

அன்பு திரு குணசீலன் உங்கள் பின்னூட்டம் மிகவும் கவித்துவமாக இருக்கிறது.
நன்றி.
வானத்தையும் நட்சத்திரங்களையும் பார்ப்பது சோம்பேறிகளின்
வேலை என்று சொல்பவர்களும் உண்டு.

உங்கள் பாராட்டு இதமாக இருக்கிறது.

தக்குடு said...

ஆத்து விஷேஷம் எல்லாம் நல்லபடியா நடக்க வாழ்த்துக்கள் வல்லிம்மா!! அவசரபயணத்தின் நடுவே இமைகளில் விழுந்த சிறு மழைத் துளியை ரசிக்கும் ரசிகனின் மனது உங்களுக்கு!!...:))

வல்லிசிம்ஹன் said...

அன்பு தக்குடு,
விசேஷங்களுக்கு நடுவே என்னையும் எட்டிப்பார்க்கும் மாப்பிள்ளை நிலா நீங்கள்:)
பகவத் சங்கல்பத்தில் எல்லாம் இனிதெ நடைபெறட்டும்.
இது போல இணையம் பக்கம் வந்தால் தான் சிறிது சுவாசம் கிடைக்கிறது.:)

மாதேவி said...

திருப்பதி பயணமா ?
குடும்ப விழாக்களுக்கு வாழ்த்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா மாதேவி. உங்கள் பழைய இடுகைகளைப் போனவாரம்தான் படித்தேன். குழம்புப் பொடி ரெச்பி அற்புதம்.
மிக மிக நன்றியம்மா.

ஆமினா said...

நா கேமரா எடுத்துட்டு வந்தாலே அவுக வெக்கப்பட்டு முகில் சேலைல மூடிக்கிறாக வல்லிம்மா :-(

அழகா எடுத்துருக்கீங்க