Sunday, December 11, 2011

நேயர்விருப்பம் கிரஹணம் விலகிய சந்திரன்
புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.

பூரணச் சந்திரன் ஆனால் தெளிவில்லாத  பார்வை.
கண்ணில் குறையில்லை.
காமிராவிலும் குறையில்லை.
குளித்துவந்தது போலக்
குளிர்கால நிலா.
எப்போது என்னை முழுமையாக அழகாக
படம் எடுக்கப் போகிறாய் என்று கேட்டது.
இது ராமலக்ஷ்மிக்காக  எடுக்கிறேன்.
அதுக்காகவாவது ஒரே மாதிரி நில்லேன் என்றேன்.

நான் ஆடவில்லை அம்மா
உன்கையாடுது என்று எதிர்ப்பாட்டு பாடிவிட்டது சந்திரிகா:)Posted by Picasa

19 comments:

ராமலக்ஷ்மி said...

கிரஹணம் விலகியதும் என்ன ஒரு ஒளி வெள்ளம். பிரகாசம். அதை மீண்டும் இங்கு பார்க்கிறேன். மிக்க நன்றி வல்லிம்மா. கார்த்திகை மாத தீபங்களின் படங்களும் அழகு.

ட்ரைபாட் உபயோகித்தால் தெளிவு கிட்டும். எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை போல எத்தனை முறை எடுத்தாலும் நமக்கு சலிப்பதில்லை:)! சந்திரிகாவைத் தொடருவோம்!!

Vasudevan Tirumurti said...

நான் ஆடவில்லை அம்மா
உன்கையாடுது என்று எதிர்ப்பாட்டு பாடிவிட்டது சந்திரிகா:) //
:-)))
எது மேலேயாவது கைகளை ஊன்றிக்கொண்டு எடுக்கணும்!

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி,
ஆமாம் உண்மையிலியே நான் பார்த்தது பொங்கிவரும் பெரு நிலவுதான். அருமையோ அருமை.ஊர் ஓய்ந்த நேரம்.எதிர் ஏடிஎம்க்குப் போலீஸ் வேன் வந்து நின்றது. என்ன விசாரணையோ தெரியவில்லை. அதற்கு மேல் வாசலில் நிற்க முடிக்கவில்லை.அதான் கையாட்டம்.பெரியவன்(மகன்) இரண்டு எஸ் எல் ஆர் ,ட்ரிபாட் உடன் வைத்திருக்கிறான்.அவனோடு ஒரு பவுர்ணமி படம் பிடிக்கணும்:)

வல்லிசிம்ஹன் said...

வரணும் தம்பி வாசுதேவன்.
அடுத்த தடவை மதில் மேல் வைத்துப் படம் எடுக்கப் பார்க்கிறேன்.
அன்னிக்கு மத்திரம் மெரினாவுக்குப் போயிருந்தால் ...கொடுத்துவைக்கவில்லை:)

கீதா said...

இன்றுதான் இந்தத் தளத்திற்கு வந்தேன். கண்ணைக் கவரும் காட்சிகளில் லயித்தேன். மனம் இலகுவாக்கும் அழகுப் புகைப்படப் பதிவுகளுக்குப் பாராட்டுகள்.

கீதா சாம்பசிவம் said...

கவிதை எங்கே? காணோமே? நல்லாத் தான் எடுத்திருக்கீங்க. இங்கே எனக்கும் எடுக்கணும்னு ஆசை தான். குளிரினாலே வெளியே போகவிடறதில்லை. :(

வல்லிசிம்ஹன் said...

வாங்க கீதா.மிக மிக மகிழ்ச்சி.
மனதுக்குப் பிடித்த கவிதைகளை இறைவன் நம்மைச் சுற்றிப் படைத்திர்க்கிறான். அவற்றைப் பதிவதில் ஒரு இன்பம். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் கீதா. கவிதையெல்லாம் ஒண்ணும் இல்ல. சும்மா போற போக்கில ரெண்டு இழுத்துவிட்டதைத்தான் நம்ம மீனா கவிதைன்னு சொல்லிட்டார்கள்:)படங்கள் இன்னும் ஷார்ப்பா இருந்தா அழகா இருக்கும்.

Rishvan said...

அருமை...நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...

என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்...

அன்புடன் மலிக்கா said...

மிக அழகான புகைப்படங்கள். வாழ்த்துகள்..

Muruganandan M.K. said...

குளித்துவந்தது போலக்
குளிர்கால நிலா....
மிகவும் ரசித்தேன். உங்கள் புகைப்படங்களையும், இனிய வரிகளையும்.
ரசனையுள்ள மனதுகளுக்கான ரசனையுள்ள உங்கள் பதிவைக் காண மகிழ்ச்சியாக இருக்கிறது.
அண்மையில் நானும் சில புகைப்படங்களையும் வரிகளையும் பதிவிட்டுள்ளேன். பெரும்பாலானவை மெபைல் போன் கமாராவில் எடுத்தது. முடிந்தால் பாருங்கள் http://muruganandanclics.wordpress.com/

வல்லிசிம்ஹன் said...

நன்றி ரிஷ்வான். அவசியம் வந்து பார்க்கிறேன். மிகவும் நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

வாங்க மலிக்கா. பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி.

வல்லிசிம்ஹன் said...

வரணும் டாக்டர்.
படங்களை நீங்கள் பார்வையிட்டதில் மகிழ்ச்சி.
உங்கள் பதிவிலும் வந்து பார்க்கிறேன். புகைப்படங்கள் அழியாமல் நம் மனதைப் பிரதிபலிக்கிறது என்று வேறு ஒருவர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். நன்றி.

மாதேவி said...

நிலாவும் கார்த்திகை தீபமும் ஒளியேற்றுகின்றன.

ஜோதிஜி திருப்பூர் said...

வளமும் நலமும் பெற 2012 புத்தாண்டு நல்வாழ்த்துகள்

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஜோதிஜி, உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் என் மனமார்ந்த
புத்தாண்டு வாழ்த்துகள். இங்கே வந்து வாழ்த்தியதற்கு மிகவும் நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி மிகவும் நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி மிகவும் நன்றி மா.