Monday, February 27, 2012

வண்ணச் சிட்டுகள்

கூடி வாழ்ந்தால்  கோடி நன்மை
அம்மா,அப்பா,பிள்ளை மூவரும் தானிய வேட்டைக்குக் கிளம்பிய போது

அம்மா சொன்னது,பையா நீ அப்பாவோடு இரு.
நான்   தானியங்களைக் கொண்டு வந்து தருகிறேன்.
மனிதர்கள் காமிரா கையோடு அலைகிறார்கள். அவர்கள் காலடியில் மாட்டிக் கொள்ளாதே''என்றது.
பிள்ளைக்கோ தன்னை யாராவது படம் எடுத்தால் நன்றாக இருக்குமே
என்று, காமிராக் காரர்கள் பின்னால் அலைந்தது.


ஒரு நிமிடத்தில்    ஒரு வயதானவரின் கைப்பிடி நழுவி அதன்
பக்கத்தில் தொபால் என்று விழவும்
அதிர்ச்சியோடு அலறிய குட்டிப் பிள்ளை அம்மாவிடம் அடைக்கலம் தேடியது.
உடனே அந்த இடத்தில்  இருந்த அத்தனை குருவிகளும் சேர்ந்து, வந்திருப்பவர்களைத் திட்டித் தீர்த்தன.:(

புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.
2008  அமெரிக்கப் பயணத்தின் போது எடுத்த
படங்கள்.(செயிண்ட் லூயிஸ்)
அதைச் சுற்றி  ஒரு கதையும் 
பின்னிப் பேரனிடம் சொன்னேன்.
அப்போது அவனுக்குப் பத்துவயது.
''அஞ்சாமல் தனிவழியே போக வேண்டாம்''னு ஒரு பழமொழி இருக்குப்பா. நீ எங்களைவிட்டுத் தனியாகச் சுற்றக் கூடாது என்று 
அறிவுரை சொல்லுவதுபோல
அவனைப் பார்த்தேன்.
  • பாட்டி உனக்கு எப்பவும்    வழிதவறிவிடுவோமான்னு பயமாக
  • இருக்கா. நான் உன்னுடனேயே இருக்கிறேன். பயப்படாதே என்று என் கையைப் பிடித்துக் கொண்டவன்  அந்த இடத்தைச் சுற்றிப்பார்க்கும் வரை விடவில்லை:)

8 comments:

திவாண்ணா said...

பாட்டி உனக்கு எப்பவும்வழி தவறி விடுவோமான்னு பயமாக இருக்கா. நான் உன்னுடனேயே இருக்கிறேன். பயப்படாதே என்று என் கையைப் பிடித்துக் கொண்டவன் அந்த இடத்தைச் சுற்றிப்பார்க்கும் வரை விடவில்லை:)//
:-)))))))))))))))

ADHI VENKAT said...

அழகான படங்களும், அதற்கேற்ற கதையும் அருமை.

ராமலக்ஷ்மி said...

பொறுப்பான பேரன்:)!

வானை நிறைக்கும் வண்ணச் சிட்டுகளும், ஹெட்டரும் கண்ணை நிறைக்கின்றன.

குருவிக்கதை.. அழகா நிகழ்வைக் கண் முன் கொண்டு வந்துள்ளீர்கள்.

கோமதி அரசு said...

குருவி படங்களும் அதற்கேற்ற கதையும் அருமை அக்கா.

பேரனின் கரிசனமான கவனிப்பு மனதை மகிழசெய்தது.

Geetha Sambasivam said...

நல்ல பேரன், நல்ல பாட்டி. :)))))

வல்லிசிம்ஹன் said...

28ஆம் தேதி கண்புரை அகற்றப் பட்டது. .இன்னும் ஒருநாள் கழித்துப் பின்னூட்டங்களுக்குப் பதில் எழுதுகிறேன்

மாதேவி said...

பாட்டி தொலையாமல் பார்த்துக்கொள்ள பேரன் இருக்கும்போது கவலை எதற்கு :))))

Muruganandan M.K. said...

அழகான படங்களும்
சுவையான வரிகளும்
அருமை.