Saturday, June 02, 2012

வைகாசி நிலா...நாளைதான் பௌர்ணமி

எட்டிப் பார்க்கும்  நிலா
வெளிவந்த   நிலா என்ன ஒரு ஆனந்தம்!
நீல நிலா!  ஒரு கண்ணனும் அவன் குழலும் கேட்க ஒரு ராதையும் சித்திரமாகத்
தோன்றினார்கள்.
ஏதாவது அம்மாவையும் குழந்தயையும் தேடுகிறதோ சோறூட்ட?
கேவா கலர் நிலா
இந்த நிலவுப் படங்களை இன்றே எடுக்க வேண்டிய
அவசியமென்ன.?
ஆசைதான். நாளைக்கு மகா விசேஷமான நாள்.
வைகாசி  விசாகம்

முருகனுடைய நாள்.
நம்மாழ்வார்  திரு நட்சத்திரம்.ஆழ்வார்  திரு நகரி ஊரில் உற்சவங்கள்
பூர்த்தியாகும் நாள். ஆழ்வார்  தாமிர பரணியில் திருமஞ்சனம்

காணும் நாள்.காணக் கொடுத்தவர்கள்  புண்ணியம் செய்தவர்கள்
ஆன்மீகத்தில் திளைப்பவர்களுக்கு  இன்னும்
நிறைய செய்திகள் தெரிந்திருக்கும்.
எனக்குத் தெரிந்த இரண்டைப் பகிர்ந்து கொள்கிறேன் உங்களுடன்.
இறை உணர்வு பரவட்டும்.


புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.
Posted by Picasa

3 comments:

வல்லிசிம்ஹன் said...

இன்னும் ட்ரை பாட் வாங்கலை:) தம்பி வாசுதேவன்.

ராமலக்ஷ்மி said...

வானிலே வைகாசி வெள்ளி நிலா!

அழகு.

மாதேவி said...

வைகாசி விசாகம் அம்மன் கோயில்களில் பொங்கல் விழாக்கள் நடக்கும் நாட்கள்.

இந்த "வைகாசிநிலா" விசேடமானதுதான்.
படமும் பகிர்வும் மனம் குளிர்கின்றது.