இன்றுதான் பௌர்ணமி என்று நினைத்திருந்தேன். நேற்று வந்த நிலா கண்கூசும் ஒளியோடு மின்னியது.
நாளை என்ன இன்னிக்கே என்னைப் படம் எடுத்துவிடு.
இப்பொழுதெல்லாம் மாலையில் சீக்கிரம் இருள் கவிகிறது. மழை மேகம் என்று நினைத்து வெளியே பார்த்தால் அது புரட்டாசி மாலையாகத்தான் தெரிகிறது.
அடுத்தமாதம் இவ்வாறு நிகழ சாத்தியம் இல்லை. மீண்டும் 7 மணிவரை வெளிச்சம் இருக்கும்.
மறக்க முடியாத மாதமாக செப்டம்பர் முடிகிறது.
துளசிகோபால் அறுபதாம் கல்யாணம்தான் ஹைலைட்!
அநேகப் பதிவர்களைச் சந்திக்கமுடிந்தாலும்
இன்னும் பலபேரைப் பார்த்துப் பேசும் மாலைநேரத்தை தவற வீட்டுவிட்டேன்.
இதோ துளசியும் புறப்பட்டு நூசி சேர்ந்தாச்சு. அவர்கள் சென்று வந்த கோயில் யாத்திரைப் பதிவுகளை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
Add caption |
புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.
11 comments:
முழுநிலா பிரகாசம். இங்கே மழையும் மேக மூட்டமும் ஆகவே இருந்தது நேற்று. இப்போதும் கூட.
நாங்களும் ந்யூஸியிலிருந்து வரவிருக்கும் பதிவுகளுக்காகக் காத்திருக்கிறோம்:)!
படங்கள் யாவும் அழகும்மா. துளசிம்மாவின் பதிவுகளுக்காக நாங்களும் ஆவலுடன் காத்திருக்கிறோம்.
இருட்டில் ஒளிரும் வெண்நிலா கதைபேச வந்தது.
அருமையான புகைப்படங்கள்.
படங்கள் யாவும் கலக்கல்
அன்பு ராமலக்ஷ்மி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மா.
அன்பு ஆதி பதிவுகளைத் தூசி தட்டிய ஓது இந்தப் பதிவும் கண்ணில் பட்டது. அப்போதைய உடல்நலக்குறைவு பின்னூட்டம் இடாமல் இருந்திருக்கிறேன். வருகைக்கு நன்றிமா.
வரனும் திரு மோஹன். அப்போதே பதிலிடாததற்கு மன்னிக்கணும். கட்டாயம் உங்கள் பதிவுக்கும் வருகிறேன்.நன்றிமா.
மாதேவி உங்கள் தளராத துணை இந்தப் பயணத்துக்கு அவசியம். நன்றி மா.
அன்பு டாக்டர், கவனிக்காமல் இருந்ததற்கு மன்னிக்கணும். பாராட்டுக்கு மிகவும் நன்றி.
வருகைக்கு நன்றி ப்ரேம்குமார்.
Post a Comment