Monday, February 25, 2013

விமானத்திலிருந்து எடுத்த நிலாப் படங்கள்.

மகனார் அளித்த  பரிசு  அழகான மஞ்சள் நிறம் படத்தில் வரவில்லையே!
எட்டி எட்டிப் பிடித்த நிலா
விமானம்  போட்ட  ஆட்டத்தில்  சட்டென கண்ணில் பட்டது  நிலா.
இல்லாவிட்டால்  பார்த்தே  இருக்க மாட்டேன்.
முன்னிருக்கும்   சீட்டில்  இருந்து எடுத்து  இருக்கலாம்.
அவரோ சென்னை வரும் வரை தூக்கம் விடுவதாயில்லை.:)

அதனால்  பதினாறு சாண் உடலை(சுற்றளவு)
வானத்தின் வண்ணங்கள்
குறுக்கி எடுத்த படங்கள்:)

புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.
Posted by Picasa

10 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை அம்மா...

ராமலக்ஷ்மி said...

பிரிய நிலா, தேடி வந்து காட்சி கொடுத்து விட்டாள் பாருங்கள்:)! அருமையான படங்கள்.

மாதேவி said...

மகனாரின் பரிசு, நிலா, வண்ணங்கள் அழகு.

ADHI VENKAT said...

பல வண்ணங்களும், நிலாவும் அழகு...

வை.கோபாலகிருஷ்ணன் said...

படங்கள் மிகவும் அழகோ அழகு.

முதல்படம் ரொம்ப ஜோர்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன் தவறாமல் வந்து கௌரவிக்கிறீர்கள் மா. மிகவும் நன்றி

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் வெகு பிடிய நிலா. நான் பிரியம் வைக்கும் நிலா
பிரியாத நிலா.இப்பொழுதும் கொஞ்சமே குறைந்த நிலவைப் பார்த்துவிட்டுத்தான் கோலம் போட்டேன் ராம்லக்ஷ்மி. நன்றிமா. அப்பொழுதும் தெளித்த நீரிலும் எட்டிப் பார்க்கிறாள்:)

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி.இந்த வாலந்தைன்ஸ் டே வந்தாலும் வந்தது. பூக்கள் எல்லாம்வானத்துக்கு ஏறிவிட்டன விலைகள். மகனிடம் சொல்லிவிட்டேன். நிறையவிலை கொடுத்து வாங்கவேண்டாம்.ஊருக்குப் போகும்போது இரண்டு பூக்கள் கொடு போதும் என்று. அதற்குத்தான் கிளம்பும் நேரம் கொடுத்தார்.
அதை அப்படியே பேத்தியிடம் கொடுத்துவிட்டென்:)

வல்லிசிம்ஹன் said...

உண்மையே ஆதி. நேரம் மாறும்போது வானமும் வண்ணம் மாறுகிறது. இந்த அதிசய இயற்கையை எப்படி வர்ணிப்பது!!

வல்லிசிம்ஹன் said...

வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி கோபு சார்.