Sunday, February 13, 2011

வசந்தம் வருகிறது

இலைகள் சொல்லும் ரகசியத்தை உங்களுக்குச் சொல்லத்தான் இந்த ஒலிபெருக்கி:)
 மஞ்சள் வண்ணத்தில் ஒரு சிரிப்பூ
இளஞ்சிவப்பில்  ஒரு வெட்கப்பூ.


இன்னும் கொஞ்சம் சிவப்பைக் கலந்து வானத்தை எட்டும் போகென்வில்லா.

இளம்மஞ்சள் வண்ணம்  கலந்து கிளைகளோடு ஒட்டிக் கீழே இருக்கும் புல் தரையை  அளவெடுக்கும் சந்தனப்பூ.



புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.

Monday, February 07, 2011

அன்பு..... பிப்ரவரி புகைப்படம்

எங்கள் குடும்பம்னு சொல்றாங்களா:0).

அதுக்குள்ள விழா முடிந்து விட்டதா!








ஆர்கே எம்வி  யா போத்தீஸா.
ஒரு நிமிஷம் இரும்மா. சரி செய்து கொடுக்கறேன்.
நிஜமாவா  போட்டிக்கா  நாங்களா??
புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.

Monday, January 31, 2011

பயணம்,அனுபவம்,படங்கள் பாடங்கள்

 அண்மையில் ,போன வாரம்  ஒரு உறவினரின்  எண்பது  வயது பூர்த்திக்காகப்

 பெங்களூரு போக வேண்டிய   அழகான மகிழ்ச்சியான சந்தர்ப்பம் வாய்த்தது.

 ரயில் நிலையத்தில்   முன்கட்டணம் செலுத்திச் செல்லும்,  வாகனத்துக்கு நிற்கையிலியே  ,சாப்பாடு முடிந்த அடுத்த கணம் ,போய்ப் பார்க்க வேண்டிய இடம்  இந்தோ அமெரிக்கன் தாவரவியல் ஆராய்ச்சிக் கழகம் என்று உத்தரவாகியது:)

அதே மாதிரி செய்யவும் செய்தோம். எல்லோரும்  பயமுறுத்தியபடி பங்களூரு குளிரால் அடிக்கவில்லை. வெய்யில் தான் உறுத்தியது.

ஆனால் நாங்கள் சென்ற இடம்  கண்களுக்கு குளிர்ச்சியை அள்ளித்தந்தது.
எப்பொழுதும்போல் அங்கிருந்த மலர்களின் மௌன  மொழி
மனதுக்குச் சந்தோஷத்தை அள்ளிக்  கொடுத்தது.
சில பூக்களை உங்களுடன்   பகிர்ந்து கொள்கிறேன்.:)










புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.

Friday, January 21, 2011

வெண்ணிலவே தண்மதியே என்னுடனே வாவா..

பலகணியின் வழி நிலா
புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.

Thursday, January 20, 2011

தைத்திங்கள் வில்லிபுத்தூர்

மாப்பிள்ளை ரெடி
கல்யாணப்பொண்ணு
ஆண்டாள் கல்யாண வைபோகமே
ஆண்டாளுக்குப் பூமாலை
ஆண்டாளின் பல்லாக்கு
பொங்கல் முடிந்த மறுநாள் காலையில் கனுபொங்கல் வைத்துவிட்டு
பிறந்தகத்துப் பழைய சாதமும் சாப்பிட்டுவிட்டு  தொலைக் காட்சியைப் பார்க்க உட்கார்ந்தேன்.
மனதின் ஒரு மூலையில் எப்பொழுதும் ஒரு  ஏக்கம்,நினைத்த போது நினைத்த இடத்துக்குப் போக முடியவில்லையே,.
கோவில்களுக்குப் போக முடியவில்லையே என்ற  நினைப்பு இருந்து கொண்டே இருக்கும்.,.
அந்த எண்ணத்தை மாற்ற வந்தது போல கோதை நாச்சியாரே  வந்துவிட்டாள்.
நாச்சியார் திருமொழியோடு,''தைத்திங்கள்''என்று தொடங்கும் பாசுரத்துடன்  என் கண் முன் வில்லிபுத்தூர் அரசியும் அவள் கேள்வன் ரங்கமன்னாரும் உலா வந்தனர்,.
கூடவே வடபத்ர சாயி.

கண்கள் கொடுத்த இறைவனையும் சரியான நேரத்தில் அந்தத் தொலைக்காட்சியைப் பார்க்கதூண்டிய கைகளுக்கும்  என் நன்றிகள்.
படங்கள் பிரமாதமாக வரவில்லை. இருந்தாலும் பகிர்ந்து கொள்ளத் தோன்றியதால் உங்களுக்குப்
பதிவிடுகிறே.ன்
தாயே சரணம்.




புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.

Wednesday, January 12, 2011

சிற்றுலா...

காத்திருக்கும் கிளி
தெய்வப் புலவரும் வந்துவிட்டார் கடல்மல்லைக்கு
கிளி கொஞ்சும் நந்தவனம்
வளமையான   மண்
செட்டிபுண்ணியம் கோவில்(நல்லா  எழுதணும் சாமி)
நாளை வரும்  நல்ல வேளை
சாம்பல் பூத்த வானம்
எங்கும் பசுமை
புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.