Thursday, July 12, 2012

பகலவன் உதயம், மாமல்லபுரம்

கதிரவன் ஒளியில்  காலை இயற்கை
உதயத்துக்கு முன் இருள்

கோட்டை கட்டிவிட்டோம்:)
மெல்லச் சிவந்தது வானம்
அநுமன் தேடிப் பிடித்த ஆரஞ்சுப்பழம்
இந்தத் தங்கத்துக்கு முன் எந்தத் தங்கம் வேண்டும்?
குடையே  விரியாதே.உன்னடிப்  பூக்கள் விரியட்டும்
வெள்ளை  நுரை  வரவேற்கும் சூரியன்
புதுவெள்ளை நுரைக் காலை நனைக்க
இது போல நிறம்  கண்டதுண்டோ!
இரு நாட்கள்  இயற்கையில் கழிந்தது. அதில் முக்கிய
துண்டு  இந்த சூரிய உதயம்.


புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.
Posted by Picasa

Saturday, June 09, 2012

சீர்மை வேண்டும் வாழ்க்கையில்

ஒரே அளவில் அழகான   இலைகள்
அடுக்கப்பட்ட சிமெண்ட் பைகள் தலையில் விழுந்துவிடுமோ?
புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.

Saturday, June 02, 2012

வைகாசி நிலா...நாளைதான் பௌர்ணமி

எட்டிப் பார்க்கும்  நிலா
வெளிவந்த   நிலா என்ன ஒரு ஆனந்தம்!
நீல நிலா!  ஒரு கண்ணனும் அவன் குழலும் கேட்க ஒரு ராதையும் சித்திரமாகத்
தோன்றினார்கள்.
ஏதாவது அம்மாவையும் குழந்தயையும் தேடுகிறதோ சோறூட்ட?
கேவா கலர் நிலா
இந்த நிலவுப் படங்களை இன்றே எடுக்க வேண்டிய
அவசியமென்ன.?
ஆசைதான். நாளைக்கு மகா விசேஷமான நாள்.
வைகாசி  விசாகம்

முருகனுடைய நாள்.
நம்மாழ்வார்  திரு நட்சத்திரம்.ஆழ்வார்  திரு நகரி ஊரில் உற்சவங்கள்
பூர்த்தியாகும் நாள். ஆழ்வார்  தாமிர பரணியில் திருமஞ்சனம்

காணும் நாள்.காணக் கொடுத்தவர்கள்  புண்ணியம் செய்தவர்கள்
ஆன்மீகத்தில் திளைப்பவர்களுக்கு  இன்னும்
நிறைய செய்திகள் தெரிந்திருக்கும்.
எனக்குத் தெரிந்த இரண்டைப் பகிர்ந்து கொள்கிறேன் உங்களுடன்.
இறை உணர்வு பரவட்டும்.


புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.
Posted by Picasa

Monday, May 07, 2012

திருநாள் இது போலே

வண்ண வண்ண  நிலா.
எல்லாம் பிகாசா  மாயம்.
அடுத்தாற்போல இயற்கையின் மாயம் இந்த அடுக்கு மல்லிகை. வெள்ளைத்தாமரையையாய்  மனதை அள்ளுகிறது.
அதற்கு மேல்  அனைத்தையும் தாங்கும்   இறைவன்.
பத்து லட்சம் மக்களைத் தாங்கி இருக்கிறது  வைகையும் மதுரையும்.

இவை அனைத்தும் மாறாமல் அவன் பார்த்துக் கொள்ளுவான்.
ஒரு பாரம்பரியத்தையும் மாற்றாமல்  தேவஸ்தானத்தார்
விழாவை நடத்தி முடித்திருக்கிறார்கள்.

தொலைக்காட்சிகளும் அதைத்துளிப் பிசிறு இல்லாமல் ஒளிபரப்பின.
கண்கொடுத்த  இறைவனுக்கு நன்றி.
இறைவனை வணங்கி இன்பம் பெறுவோம்.


புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.
Posted by Picasa

Thursday, May 03, 2012

வெய்யில் எங்களுக்கு அமிர்தம்

உயர்ந்தவர்

வீட்டின் வடக்கு மூலையில் ஒரு ஐம்பது காக்டஸ்   
இவைகளுக்கு இப்போது கொண்டாட்ட்ட காலம்!!
அழகான கண்ணைப் பறிக்கும் மஞ்சளில்   சிவப்பு மகரந்தம்
அசோக சக்கரமோ
பச்சையாக இருந்தாலும் கேட்கும் தண்ணீர்  ஒரு மழையில் போதும்
அம்மா  பசிக்கிறது...இது என் கற்பனை
புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.

Friday, April 27, 2012

தங்கமாய் ஒளிர்விடும் கேஷியா மலர்கள்.

புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே!!!!!

மின்வெட்டினால் ஏற்படும்  லாபங்கள்   பலப்பல.
இன்வர்ட்டர் இருந்தாலும்  அது தாங்குவது சில

அழுத்தங்களையே. .அதற்கு தொலைக்காட்சி பிடிக்காது.
பெரிய மின்விசிறி பிடிக்காது. கணினி ...ம்ஹூம் பிடிக்கவே பிடிக்காது.
மாலை 4லிருந்து ஆறுமணி எங்கள்  கோட்டா.
மூன்று மணியிலிருந்தே தனிஆவர்த்தனம் வாசிக்க ஆரம்பித்து  விடும் மின் விளக்குகள்.

எங்களுக்குள் ஒரு   ஒப்பந்தம்  . அவர் காற்றில்லாமல் கிரிக்கெட்ட் பார்ப்பார் .நான்   காற்றோடு  ராவ் பஹதூர் சிங்காரம் படிப்பேன்.:)
அதுவும்  குறைந்த காற்றோடு ஓடும், சாமரம் வீசும் தோழி இந்த விசிறி.

பதிவர்   கீதாவிடம்  பேசிய போது  அலுத்துக் கொள்ளவே இல்லை. காலையில் ஒன்பது மணிக்குப் போய் 12  மனிக்கு வருகிறதாம்.

இரவு  எப்போது வேண்டுமானாலும் போகலாம். ஆனால் நடுராத்திரி இரண்டு மணிக்கு மேல் ஏசி  போட்டுக் கொள்ளமுடியும்.
ஏற்கனவே   ஆஸ்த்மா இருக்கிறதே . அவஸ்தையாக இல்லையா
என்று  கேட்டால். ,திருச்சியில் வேர்ப்பதே கிடையாதாம்.
அதுவும் அடடா  மழடா அட மழைடான்னு நேற்று கொட்டித் தீர்த்ததாம்.

மொட்டை மாடிக்குப் போனால் அகிலாண்டேஸ்வரி, உச்சிப் பிள்ளையார்,  ரங்கநாதன் கோபுர விளக்கெல்லாம் பளிச்சிடுகிறதாம்.
ஜன்னல் வழியாகக் காவிரி தெரிகிறாளாம்..

இப்பவே திருச்சிக்கு டிக்கட் வாங்கிடலாம்னு நினைக்கிறேன்:)

இதோ நம் வீட்டிலும் மின்வெட்டுதான். சொல்லி ஒருதரம் அணைப்பாங்க. சொல்லாமல் ஒரு தரம் அணைப்பாங்க போல.
அணைக்கிறது நாகரீகமான வார்த்தை வெட்டுவதே பொருத்தமானது!!!

அதனால் கிடைத்த மின்சக்தியில் இந்தப் பதிவை எழுதிவிடுகிறேன்.:)
வெளியே மழையும் பெய்யுது  மஞ்ச வெய்யிலும் காயுது என்று இரண்டும் கலந்தடிக்கின்றன.
இதுவும் ஒரு அருமை.

லாபம் இன்னொன்று மின்சாரக்கட்டணத்தைப் பற்றிக் கவலைப் படவேண்டாம். அதுவும் குறைந்துவிடும்.

வீட்டைவிட்டு வெளியே போகும் பழக்கம் வரும்.
படிதாண்டும் பத்தினியாக  பதியோடு    போகலாம்.

எந்த ஏரியாவில் முழு மின்வெட்டு இல்லை என்று தெரிந்து கொண்டு அவர்களோடு  குசலம் விசாரிக்கலாம்.

சாப்பாட்டு நேரத்துக்கு வீட்டுக்கு வந்துவிடலாம்.

இப்போதுதான் ராணி, என் உதவிக்கு வரும் பெண் சொல்லிவிட்டுப் போனார்.
இன்று காலை 9  லிருந்து மாலை ஐந்தரைவரை
நோ பவர்!!!
ஆஹா . கணினியை மூடும் நேரம் வந்துவிட்டது.

அடுத்த நாவல் என்ன படிக்கலாம்:)
தலைப்புக்கும்    எழுதி இருப்பதற்கும் சம்பந்தமே இல்லையே என்று நினைப்பவர்களுக்கு

மின்சாரம் போனால் உடலிலும் சாரம் இறங்கிவிடுகிறது.

அதனால் கொஞ்சம் புலம்பல் கொஞ்சம் பினாத்தல்.:)))






Monday, March 19, 2012

தோட்டக் கண்காட்சி

 


புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.
Posted by Picasa