Thursday, September 07, 2006

சின்ன கிருஷ்னனும் சின்ன ராமனும்

நம்மில் சில பேர், சாமிக்கு ஏன் ஏதாவது படைக்க வேண்டும்?

நாம் சாப்பிடும் பொருட்களை அவர் சாப்பிடப் போகிறாரா.
ராத்திரி வேளையில் அவருக்கு எதற்கு ஏகாந்த சேவையும்
நாதஸ்வரமும்

நீலாம்பரி இசையும் /அவர் தூங்கப்போகிறாரா/?
டெல் மி ஒய் என்று முன்னால் சிறுவர் சிறுமியருக்கு ஒரு
செலக்ஷன் of குட் க்வெஸ்டியன்ஸ் அண்ட் ஆன்சர்ஸ்
வரும்.
ஆனால் அதில் நம்ம சாமியைப் பற்றி ஒண்ணும் கிடைக்காது.
நமக்கு இவ்வளவு முன்னோடிகள் இருக்கும்பொதே சில கேள்விகளுக்கு பதில் தெரிவதில்லை.
வரப்போகும் தலைமுறை கேட்கும் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வது?
ஏனெனில் நமக்குத் தெரிந்ததும் கொஞ்சம் தான்.
அப்போதுதான் இன்று காலை இந்தப் பாடலைக்
கேட்க நேர்ந்தது.

வடமொழியில் இருந்தாலும் புரிந்தது.
எனக்குத் தெரிந்தவரை அதன் பொருளைக் கொடுத்து இருக்கிறேன்.

யார் சொல்வது ராமன் சாப்பிடவில்லை என்று.?
நீங்களும் சபரியின் அன்போடு கொடுத்தால்
அவன் ஏற்றுக்கொள்ளுவான்.

யார் சொல்வது கிருஷ்ணன் தூங்குவதில்லை என்று.
நீங்களும் யசோதா போல் அவனுக்குத் தாலாட்டுப் பாடினால் அவன் தூங்குவான்.

யார் சொலவது அவன் பாடி ஆடிக் களிக்க
மாட்டான் என்று,
நீங்களும் கோபிகளுடன் சேர்ந்தால்
பக்தியில் அவன் பாடி ஆடுவான்.
அவர்களைப் போலப் பாடிப் பழகுங்கள்.
இதே போல் போகிறது.

இனிமையான பாடல்.
சில கேள்விகளுக்குப் பதில் இப்படித்தான் கிடைக்கும்.
இதை நம்பினால் போதும் என்று எனக்குத்
தோன்றுகிறது.

21 comments:

revathiNarasimhan said...

பரிசோதனைப் பின்னூட்டம்

லட்சுமி said...

நல்லா இருக்கு அந்த பாட்டு..உண்மை தான்.
நாம சாமிக்கு வச்சு கும்பிட்டு விட்டு அப்புறம் சாப்பிட்டு பார்க்கறோம்.அப்ப உப்பு பத்தலை இனிப்பு பத்தலைன்னு அப்பறமா சேர்த்துக்கிறோம். அப்ப அவருக்கு குடுத்தப்ப பாவம் அவர்,எப்படி தான் சாப்பிட்டாரோ.சுடசுட சில சமயம் படைக்கிறோம்..சபரி மாதிரி குடுத்தா நிச்சயம் ஏத்துப்பார்.

revathiNarasimhan said...

லட்சுமி, எப்படி இந்தப் பதிவைக் கண்டுபிடித்தீர்கள்.
நன்றிப்பா.

இன்று மார்கழி பிறந்தாச்சு.
எல்லாமே அவனுக்கான மாதம்.
வலையிலேயெ நிறைய வலம் வரப் போகிறான்.
வாழி நாரணன் நாமம்.

செல்லி said...

வல்லி
//வரப்போகும் தலைமுறை கேட்கும் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வது?//
ஆமாம். வெள்நாட்டில வாழும் நம்மைப் போன்ற பெற்றோர்க்கு இப்போதய பெரிய பிரச்சனையே இதுதான். ஏதாவது செஞசுதான் ஆகணும்.
நன்றி

Iniyal said...

நிஜம் தான் நீங்க சொல்றது, லயிப்பு பெரிய விஷயம் இல்லயா...! பக்தியே அதுல தான் அடங்கி இருக்கு.

இனியாள்

வல்லிசிம்ஹன் said...

செல்லி, நாட்கள் கழித்து பதில் எழுதுகிறேன் .
இங்கு குளிர் அதிகமாகிவிட்டது.
புது பிளாகருக்கு மாறியதில் என் பழைய பதிவும் பார்வைக்குத் தெரிகிறது.
நன்றிப்பா,இங்கும் வந்ததிற்கு.

வல்லிசிம்ஹன் said...

வரணும் இனியாள்.
ஆமாம் மேலோட்டமான பக்திக்குத் தான் இப்போது நேரம் இருக்கிறது..
எதிலேயுமே லயிக்கவில்லையொ என்று சந்தேகமும் வருகிறது.
வேலை,வேலை,வேலை.
இதுதான் தாரக மந்திரம் இப்பொ.

SurveySan said...

fyi - http://neyarviruppam.blogspot.com/2007/03/6-more.html

Jeeves said...

http://neyarviruppam.blogspot.com/2007/03/6-more.html


திட்டப்படாதுன்னா திட்டப்படாது.. நீங்க தானே அந்த பாட்டை நேயர் விருப்பத்தில கேட்டீங்க.. அதனால திட்டப்படாதுன்னா திட்டப்படாது

நானானி said...

பாடல் உணர்வுப்பூர்வமாக இருந்த்து!
'அத்தாடி மாரியம்மா..சோறு ஆக்கி
வச்சேன் வாடியம்மா.. ஆழாக்கு அரிசிய பாழாக்கவேணாம். தின்னுப்புட்டு போடியம்மா!'
என்று எளிமையாக உள்ளன்போடு
அழைத்தாலூம் தெய்வம் ஓடோடி வரும்.

வல்லிசிம்ஹன் said...

ஜீவ்ஸ்,

பாட்டையும் கேட்டேன்.
நன்றாகவும் இருந்தது.

திட்டவும் இல்லை.
பாராட்டவும் செய்தாச்சு.
உண்மையாகவே நல்லாப் பாடியிருக்கீங்க.

வல்லிசிம்ஹன் said...

நானானி,நல்லா இருக்கீங்களா.
காலிஃபோர்னியா சீதோஷ்ணம் சரியா இருக்கும்னு நம்பரேன்.
இங்கே இன்னிக்கு ஸ்னோ ஸ்னோ ஸ்நோ.

உண்மைதான் .அன்பான பக்திக்கு நிகரே கிடையாது.

நானானி said...

நலம் விசாரித்ததுக்கு நன்றி!கலிபோர்னியாவில் இருந்தவரை நன்றாகத்தான் இருந்தேன். ஆம் சென்னை வந்தாச்சு. வந்ததும் என் உடன் பிறப்புக்களான ஜலதோஷமும் இருமலும் என்னை வந்து அப்பிக்கொண்டன.என் ப்ளாக் வந்து என் பதிவுகளைப் பார்வையிட அன்புடன் அழைக்கிறேன்!

கீதா சாம்பசிவம் said...

mmmmmm, today came to this blog Of course incidentally. Saw you are reading again and again your blogs and Thulasi's blogs only. :D Very nice blog. Keep it up.

Ms.Congeniality said...

nalla questions and the song answers aptly :)

Vijay said...

ஐயா ,எனது முதல் பதிவினை பார்த்து கருத்து சொல்லவும்.

"கொங்கு மண்டலத்தில் ஒரு சுற்றுச்சுழல்
போராளியின் வெற்றிப்பேரிகை"

http://pugaippezhai.blogspot.com/2008/06/blog-post_3130.html

அன்புடன்,
விஜய்
கோவை

இக்பால் said...

என் பதிவிற்கு வந்து பார்த்து படித்துவிட்டு பின்னூட்டம் இட்டதற்கு நன்றி.

VIKNESHWARAN said...

இதுதான் முதல் முறை உங்கள் வலைப்பக்கம் வருகிறேன்.. உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி... என்னிடம் எதற்கு மன்னிப்பெல்லாம்...

யு.எஸ்.தமிழன் said...

வல்லிசிம்ஹன் -

இப்போதுதான் உங்கள் பதிவைப்பார்க்கிறேன். ஸ்ரீவில்லிப்புத்தூர் அகிலாண்டேஸ்வரியின் பெரிய சைஸ் படம் எதாவது உங்களிடம் உள்ளதா? அவருடைய காதில் ஸ்ரீசக்ரம் தெரியும்படி இருக்க வேண்டும்.

நன்றி!

வல்லிசிம்ஹன் said...

வரணும் யு.எஸ்.தமிழன்.
நீங்கள் குறிப்பிடுவது திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி.

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் அல்லவா தாயார்.
அகிலாண்டேஸ்வரி படம் கூகிளில் தேடிப்ப் பார்க்கிறேன்.அவள் இஷ்டம் அதுவானால் இதே பதிவில் போடுகிறேன்மா.

யு.எஸ்.தமிழன் said...

எனக்கு இந்த சந்தேகம் இருந்தது. அருள்செல்வனிடம் ட்விட்டர் உரையாடலின் போதும் அதையே தெரிவித்திருந்தேன். திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரிதான். கிடைதால் போடவும்.

நன்றி!