மல்லிகைப்பூ, ஜாதி ரோஜா
முல்லைப்பூவும் வேணுமா
தொட்டாலெ கை மணக்கும்பூவும்
பட்டான ரோஜாப் பூவும்
கதம்பம் வேணுமா...
இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.
Thursday, December 30, 2010
Saturday, December 18, 2010
ஸ்ரீ வைகுண்டஏகாதசிப் படங்கள், ஸ்ரீரங்கம்
வைகுண்ட ஏகாதசி என்றால் கேட்க வேண்டாம்.
நான்கு மணிக்கு ஆரம்பிக்கும் வேலைகள். உப்பில்லாத சப்பாத்திகள்
இது பட்டினி கிடக்க முடியாத என் மாதிரி ஜன்மங்களுக்கு:)
ஒரு மூச்சில் வேலைகளை முடித்துக் கொண்டு தன்னைப் போலவே வயதான அக்கம்பக்கத்து பெண்களை அழைத்துக் கொண்டு
ஸ்ரீ பார்த்தசாரதியைப் பார்க்கக் கிளம்பிவிடுவார்.
பார்த்தசாரதியைத் தரிசனம் செய்த கையோடு அங்கேயெ குடியிருந்த தன் அக்கா ஒருவரையும், தங்கை ஒருவரையும் குசலம் விசாரித்துவிட்டு,
இரவு தங்கி
காலையில் துவாதசி பாரணை எனப்படும் நெல்லிமுள்ளிப் பச்சடி,அகத்திக்கீரை, மணத்தக்காளி போட்ட மோர்க்குழம்பு
இப்படி ஒரு மெனு கொண்ட சாப்பாட்டையும் முடித்துக் கொண்டு 22 ஆம் நம்பர் பஸ்ஸைப் பிடித்துப் புரசவாக்கம் வந்துவிடுவார்.
வரும்போது எனக்குப் பிடித்த இலைவடாம்,பந்தாய்க் கட்டின
ஸ்பெஷல் மல்லிகை,கோவிலுக்கு வெளியே அப்போது இருந்த
பாத்திரக் கடையிலிருந்து சின்னச் சின்ன பாத்திரங்கள், தயிர் உறை
குத்திவைக்க கல்சட்டிகள்,புது மத்துகள்,கீரை கடைய,மோர் சிலுப்ப...
தன்னுடன் வரும் தம்பி தாத்தம் என்கிற மாமாவையும் அனுப்பி
அங்கே இருக்கும் ஒரு கடையில் வாழைக்காய் பஜ்ஜியும்
வாங்கி கொண்டு வந்து கொடுப்பார்.
இதுதான் என் அப்போதைய ஏகாதசி. இப்போது இணைய ஏகாதசியாகி விட்டது:)
அழகாக ஒளிபரப்பிய பொதிகைத் தொலைக் காட்சிக்கு நன்றி.
புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.
Saturday, December 11, 2010
Saturday, December 04, 2010
புத்தம்புதுக்காலை
ஜயா டிவியில் வந்த சிவனார் 108 அடி உயரமாம். |
ஒருவர் நடைப் பயிற்சிக்கும், மற்றொருவர் வேலைக்கும் நடக்கிறார்கள். நல்ல நாளுக்கு வாழ்த்துகள் நண்பர்களே. |
மழை வருது மழை வருது ஆனால் வரலை;) |
பால் பாக்கெட்டுக்கு விரையும் இன்னோரு அம்மா |
பூஜைக்கு வரப்போகும் மலர்கள் |
கற்பூர ஜோதியில் பெண் தெரிகிறாளோ. |
காமிரா அடுத்த வருடத்திற்குப் போய்விட்டது:) மழை வரும் முன் எடுத்த படம் ,இன்று காலை. |
2008ஆம் வருடக் காலை |
புல்லுக்கு வலிக்காமல் குப்பைகள் திரட்டும் மாணிக்கம்!! இன்று காலை4/11/2010 |
இவை எல்லாம் இன்று காலை எடுத்த படங்கள். உங்கள் அபிப்பிராயங்கள் தேவை.
என் காலையும் உங்கள் காலையும் வெவ்வேறாக இருந்தாலும் சிறப்பு என்று எது உங்களுக்குத் தோன்றுகிறதோ அதைச் சொல்லுங்கள். இந்தத் தடவை அவசரப் படப் போவதில்லை.:)
புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.
Wednesday, November 24, 2010
நிலவின் பிரயாணம்
Tuesday, November 23, 2010
தீப மங்கள ஜோதி! வணக்கம்
இப்போதெல்லாம் முப்பது அகல்கவிளக்கோடு கார்த்திகை தீபங்கள் விழா இரண்டு நாட்களுடன் பூர்த்தியாச்சு.:)
புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.
Monday, November 22, 2010
அண்ணாமலைக்கு அரோகரா
Subscribe to:
Posts (Atom)