Saturday, December 04, 2010

புத்தம்புதுக்காலை

ஜயா டிவியில்    வந்த   சிவனார் 108 அடி உயரமாம்.
ஒருவர் நடைப் பயிற்சிக்கும், மற்றொருவர்  வேலைக்கும்   நடக்கிறார்கள். நல்ல நாளுக்கு வாழ்த்துகள் நண்பர்களே.
மழை வருது மழை வருது ஆனால்  வரலை;)
பால் பாக்கெட்டுக்கு விரையும் இன்னோரு அம்மா
பூஜைக்கு வரப்போகும் மலர்கள்
கற்பூர ஜோதியில் பெண் தெரிகிறாளோ.
காமிரா அடுத்த வருடத்திற்குப் போய்விட்டது:) மழை வரும் முன்  எடுத்த படம் ,இன்று காலை.

2008ஆம் வருடக் காலை
புல்லுக்கு வலிக்காமல் குப்பைகள் திரட்டும் மாணிக்கம்!! இன்று காலை4/11/2010


இவை எல்லாம் இன்று காலை எடுத்த படங்கள். உங்கள் அபிப்பிராயங்கள் தேவை.
என் காலையும் உங்கள் காலையும் வெவ்வேறாக   இருந்தாலும்  சிறப்பு என்று எது உங்களுக்குத் தோன்றுகிறதோ  அதைச் சொல்லுங்கள். இந்தத் தடவை அவசரப் படப் போவதில்லை.:)

புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.
Posted by Picasa

6 comments:

ஜோதிஜி said...

பூக்களை பறிக்காதீர்கள் என்பது போல புல்லுக்கு வலியை ஏற்படுத்தாதீர்கள் என்று சொல்லாமா?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சூப்பர்.. எனக்கு அந்த ரெண்டு பூ ஜன்னல் கிட்ட அது ரொம்ப் பிடிக்குது..
எங்கள் காலை எபடி இருந்துச்சுன்னு தெரியல .. நாளைக்கு வேணா பாத்துட்டு சொல்ரேன்..:))

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஜோதிஜி.
பூக்களைப் பறிப்பது எங்க வீட்டில் எஜமானருக்குப் பிடிக்காது.
ஆனால் புல் வளர்ந்தாலும்ம் பூச்சி வரும் என்பதற்காக அடிக்கடி சீர்திருத்திவிடுவார்:)
நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

வாங்க முத்து.
அது ஸ்விட்சர்லாந்திலிருந்து வந்து இரண்டு வருடங்கள் ஆச்சு.
இந்த டிசம்பரில்தான் பூக்க மனம்வந்திருக்கிறது. ஆர்க்கிடஸ் ஆரஞ்சு பூக்கள்.
எல்லாக் காலைகளும் அழகாக அமைய வாழ்த்துகள் முத்து.

ராமலக்ஷ்மி said...

புல்லுக்கு வலிக்காமல்..
அருமையான சிந்தனை!

ஜன்னல் திறக்கக் காத்திருக்கும் பூக்கள் அழகு.

பச்சை இலைகள் நடுவே ‘பூஜைக்கு வரப்போகும் மலர்கள்’ என் சாய்ஸ்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் அன்பு ராமலக்ஷ்மி. நான் மிகவும் ரசித்து எடுத்த படம்.
நாயகனை அடையப் போகும் மணப்பெண்ணாகத் தலை குனியும் செம்பருத்திகள்.
நன்றிமா.