Thursday, December 30, 2010

புத்தாண்டு நல் வாழ்த்துகள்

 மல்லிகைப்பூ, ஜாதி ரோஜா
முல்லைப்பூவும் வேணுமா
தொட்டாலெ கை மணக்கும்பூவும்
 பட்டான ரோஜாப் பூவும்
கதம்பம் வேணுமா...

 இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.

7 comments:

ராமலக்ஷ்மி said...

பூப்பூவாப் பூத்திருக்கு பூமியிலே ஆயிரம் பூ:)!

முதலாவது நந்தியாவட்டைதானே?

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்:)!

வல்லிசிம்ஹன் said...

பூவில சிறந்த பூ பாரிஜாதம். எங்க வீட்டுப் பெயரும் அதுவே. அதற்கே முதலிடம்.
அன்பு ராமலக்ஷ்மி நல்வாழ்த்துகள் மா.

ராமலக்ஷ்மி said...

பாரிஜாதம். நன்றி வல்லிம்மா:)!

சாந்தி மாரியப்பன் said...

பாரிஜாதத்தை பவளமல்லின்னும் சொல்லலாம் இல்லியா வல்லிம்மா...பூ ரொம்ப அழகு. ஊசியால் சரமா தொடுத்துவைக்கும்போது, வெள்ளையும் போட்டிபோடும் சிவப்புமாக கொள்ளை அழகாயிருக்கும்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் சாரல்..புகுந்த வீட்டுக்கு வந்துதான் பவழமல்லிக்கு இன்னோரு பெயர் உண்டு என்று தெரியும். அப்புறம் நானும் பாரிஜாதம் என்று சொல்ல்ப் பழகிக் கொண்டேன்.

ராமலக்ஷ்மி said...

பவளமல்லி படங்கள் முன்னரும் உங்கள் பதிவிலே பார்த்திருக்கிறேனே:)! இரண்டும் ஒன்றேவா? நெல்லையில் எங்கள் வீட்டு தோட்டத்தில் பூத்துக் குலுங்கும் பவளமல்லி மரம் உண்டு. வேப்பங்கொழுந்து அரைத்து உருட்டி ஒரு சமயம் என்றால் பவளமல்லி இலைகளின் சாறெடுத்து ஒரு சமயம் என வயிற்றுப் பூச்சிக்காக அம்மா தருவார்கள்:)!

வல்லிசிம்ஹன் said...

இரண்டு வகை பவளமல்லி உண்டு ராமலக்ஷ்மி.
சிறியதாகக் காலையில் நம் கண்ணைப் பறிக்கும் ஒரு வகை.
இன்னொன்று இந்தப் படத்தில் இருப்பதைப் போல.

மழைக்குப் பின் பூக்கும் பவளமல்லிக்குத் தனி வாசம்.:)
நெல்லை அம்மாக்களுக்கும் பாட்டிகளுக்கு இந்த வேப்பிலைக் கொழுந்து உருண்டையிலும்,விளக்கெண்ணேயிலும் என்ன மோகமோ தெரியாது. :)
ஞாயிறு வந்தாலே எனக்கு கலக்கம் தான்.
உங்கள் அம்மாவும் நல்ல அம்மா!!!!