Tuesday, November 08, 2011

கனவாகிய தொழிற்சாலை..சினிமா

சாவித்திரியும் குழந்தைகளும்
புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.

எத்தனை படங்கள்

எவ்வளவு நட்சத்திரங்கள், எல்லோருமே என் விஷயத்தில் மிகவும்

நன்மை செய்தவர்கள். இந்தப் பதிவிலும் இதற்கு முந்தின பதிவிலும் எனக்கு உள்ள சினிமா (மெமரி) டைரக்டரியிலிருந்து

சில நபர்களின் புகைப்படங்கள்,திரை ஸ்டில்கள் என்று முடிந்த வரை (எனக்குப் பிடித்த நடிக நடிகையரின்) கொடுத்து இருக்கிறேன்.

எத்தனையொ ஆயிரக்கணக்கான முகங்கள் திரையில் மின்னி நமக்கு இன்பத்தையும் ,நிறைவையும் கொடுத்து இருக்கிறார்கள். அவர்களில் சிலர் இவர்கள்.

இவர்களில் முதல்வர் வேறு யாரக இருக்க முடியும். நம்ம சிவாஜி சார் தான்.

அடுத்தது.எஸ்.வீ.ரங்கராவ். எப்போதுமே இனிமையான கம்பீரம். நாகரீகமான தோற்றம்.பண்பட்ட நடிப்பு. நமது சொந்தப் பெரியப்பாவையோ மாமாவையோ நினைவு படுத்தும் கனிவு.

எப்போதுமே ஆனந்தம் தம் கல்யாண சமையல் சாதம் இவர்.

அலுக்கவே அலுக்காத குரல். இறைவன் இவரை இன்னும் கொஞ்ச நாள் விட்டு வைத்து இருக்கலாம்.

இவருக்கு அடுத்தாற்போல் நம்மைக் கவருவது பானுமதி அம்மாவும் சாவித்திரியும் தான்.

ஒரு பாசமலர் தங்கை, ஒரு அன்னை, ஒரு மயங்குகிறாள் ஒரு மாது பாட்டு,

'சொன்ன பேச்சை கேக்கணும் முன்னும் பின்னும் பாக்கணும்"

பூவாகிக் காயாகி.//

வெங்கடாசல நிலையம் வைகுண்டபுர வாசம்//

இதே போல் மறக்க முடியாத வாய்த்துடுக்கு,சிவாஜி சாருக்கு இணையான நடிப்பு.

அவரது எழுத்துக்கள் , பன்முகத்திறமை

எல்லாமே இவரைப்போல் பெண்கள் இன்னும் நிறைய

திரை உலகுக்கு வரவில்லையே என்று தோன்றும்.

சாவித்திரி அம்மாவும் இதே போல்,

ஆனால் பாச மழை,காதல் ரசம் கண்ணாலெயே பேசுவது

அந்தக் காலத்தில் கண்களுக்கு யார் ஒப்பனை செய்தார்களோ தெரியாது.

உடல் வளம் எப்படி இருந்தாலும் முகம் நினைவில்

நிற்கும்படியாக மேக்கப் செய்து இருப்பார்கள். அவை அழியாத சித்திரங்கள் ஆகி நம் மனதை நிரப்பும்.

இதே போல் பத்மினியும், வைஜயந்தி மாலா,சரொஜாதேவி அம்மாவும் நடிப்பினாலும் திரை அழகினாலும் எங்களை மயக்கினவர்கள்.

இந்தப்  பதிவை மீள் பதிவாக விட்டுவிட   மனமில்லை.

தினமும்''தேன் கிண்ணம் '' பாடல்களைக் கேட்கும்போது

பாடல்கள் காதை நனைப்பதைப் போல   அவ்ரகளின் நடிப்பு மனத்தை நிரப்புகிறது.அவர்களுக்கே இந்தப் பதிவு   சம்ர்ப்பணம்.











2 comments:

பால கணேஷ் said...

சிறுவனாக இருந்த போது வைஜயந்தி மாலாவையும், தேவிகாவையும் ரசித்த தருணங்களை நினைவுகூரச் செய்து விட்டீர்கள். இவர்களுடன் பத்மினியம்மாவையும் சேர்த்திருக்கலாமெ...

வல்லிசிம்ஹன் said...

அன்பு திரு கணேஷ்,பத்மினியையும் சிவாஜியையும் மறந்து ஒரு பதிவு என்னால் போட முடியாது. முதல் படத்திலியே அவர்கள் இருக்கிறார்கள்.;)