Monday, May 07, 2012

திருநாள் இது போலே

வண்ண வண்ண  நிலா.
எல்லாம் பிகாசா  மாயம்.
அடுத்தாற்போல இயற்கையின் மாயம் இந்த அடுக்கு மல்லிகை. வெள்ளைத்தாமரையையாய்  மனதை அள்ளுகிறது.
அதற்கு மேல்  அனைத்தையும் தாங்கும்   இறைவன்.
பத்து லட்சம் மக்களைத் தாங்கி இருக்கிறது  வைகையும் மதுரையும்.

இவை அனைத்தும் மாறாமல் அவன் பார்த்துக் கொள்ளுவான்.
ஒரு பாரம்பரியத்தையும் மாற்றாமல்  தேவஸ்தானத்தார்
விழாவை நடத்தி முடித்திருக்கிறார்கள்.

தொலைக்காட்சிகளும் அதைத்துளிப் பிசிறு இல்லாமல் ஒளிபரப்பின.
கண்கொடுத்த  இறைவனுக்கு நன்றி.
இறைவனை வணங்கி இன்பம் பெறுவோம்.


புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.
Posted by Picasa

12 comments:

திவாண்ணா said...

ஸ்வாமி தரிசனம் செய்து வைத்ததுக்கு நன்றி! அப்புறம் அக்கா, காமிராவை எது மேலேயாவது தாங்க வைத்து படம் எடுங்க.

வல்லிசிம்ஹன் said...

வரணும் தம்பி வாசுதேவன். இப்பதான் கீதா கிட்ட உங்களைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தேன். தகவலே இல்லையே என்றார்.உங்களுக்கு அவர் நம்பர் தெரியுமா.இல்லாவிட்டால் அனுப்புகிறேன்.
காமிராவுக்குனு ஏதாவது ஸ்டாண்ட் வைத்துக் கொள்ள வேண்டியதுதான்.
வீட்டில் எல்லோரும் நலம்னு நினைக்கிறேன்.

ராமலக்ஷ்மி said...

/ஒரு பாரம்பரியத்தையும் மாற்றாமல் தேவஸ்தானத்தார்
விழாவை நடத்தி முடித்திருக்கிறார்கள்./

மகிழ்ச்சியான விஷயம். நானும் இங்கே தரிசனம் செய்து கொண்டேன்.

ட்ரைபாட் ஒன்று வாங்கிடுங்கள், தொடர்ந்து நீங்கள் நிலவைப் படமெடுப்பதால் மிக உபயோகமாயிருக்கும்.

வல்லிசிம்ஹன் said...

ட்ரைபாட் வாங்க ஒரு வாஸ்து வேண்டாமா ராமலக்ஷ்மி:)
என் காமிரா டிஜுடல்...இத்தனூண்டு.
என் கைப்பையிலியே கிடக்கும். எஸெல் ஆர் வாங்கும்போது அதையும் வாங்கிடரேன். ஓகேயா:)நன்றி ராஜா.

மாதேவி said...

திருநாள் தர்சனம் கிடைத்தது.

ராமலக்ஷ்மி said...

SLR வாங்கும் போது சேர்த்தே வாங்கிக்கலாம்:)! இப்ப குட்டி டிஜிட்டல்களுக்கும் ஒரு சாண் உயரத்துல டேபிள்டாப் ட்ரைபாட் கிடைக்கிறது.செல்ஃப் டைமர் வைத்து எடுக்க மட்டுமின்றி நிலவைப் பார்க்க காமிராவை நிற்க வைக்கவும் பயனாகக் கூடும். எனக்கு முன் ஒரு காமிராவுடன் ஃப்ரீயாகக் கொடுத்திருந்தார்கள். [தகவலுக்காக..]

வல்லிசிம்ஹன் said...

நன்றி ராமலக்ஷ்மி. இது நான் கேள்விப்படாத விஷயம். இன்றே
ஈமெயில் அனுப்பி விடுகிறேன்.துபாய்க்கு:)

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி வந்து தரிசனம் செய்ததற்கு மிகவும் நன்றி.

ராமலக்ஷ்மி said...

நல்லது:).


1. இப்படியும் இருக்கு
http://www.amazon.com/Manfrotto-709B-Table-Tripod-Black/dp/B0000YD2JC

2. இது கொரில்லா ட்ரைபாட்
http://www.ebay.com/itm/Mini-Tripod-small-Gorilla-type-Digital-camera-stand-Flexible-5810-/390402449541?pt=US_Tripods&hash=item5ae5cca085

3. புதுசா இருக்கு எனக்கும்
http://www.ebay.com/itm/HorusBennu-Gorilla-SM-816-SLR-ZOOM-Mini-Tripod-Joby-Style-Choose-Color-/130692096503?pt=US_Tripods&hash=item1e6ddb21f7

4. ஆக்டபஸ் மாதிரி வளைஞ்சும் கொடுக்குமாம் இப்படி :)

http://www.ebay.com/itm/NEW-Mini-Octopus-Flexible-Tripod-Stand-for-Camera-Video-Canon-Nikon-Samsung-6-5-/110876886692?pt=US_Tripods&hash=item19d0c706a4#ht_2301wt_1270

வல்லிசிம்ஹன் said...

வாவ். அப்படிப்போடு. இத்தனை வகை இருக்கா. இங்கயே வாங்கிடலாம் போல இருக்கே.
நன்றி ராமலக்ஷ்மி. இத்தனை சிரமம் எடுத்துக் கொண்டு சொன்னதற்காக.

நன்றி.நன்றி மா.

ராஜி said...

படங்கள் அருமை

Vetirmagal said...

திருநாள் தரிசனத்தை எங்களுக்கு அளித்த்தற்கு நன்றி. சுவாமியின் அருள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டுகிறேன். என்னை மிகவும் கவர்ந்தது அந்த அழகு மல்லி!

என் பதிவுகளையும் பார்த்து ஒரு கருத்து சொன்னால் , அதில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய முனைவேன். http://vetrimagal.blogspot.in/2012/05/blog-post.html

நன்றி.