Friday, November 19, 2010

ஆப்ரஹாம் லின்கன்

லிங்கன்
பிறந்த இடம்  கெண்டகி .ஒரு நடுத்தரக் குடும்பப் பெற்றோருக்குப் பிறந்தவர்    ,மனிதர்களுக்குள்ள சம உரிமையைக் கற்றார்.
சாதாரணக் குடும்பத்தில் பிறந்ததினாலையே
ஒரு வக்கீலாகப் பயிற்சி எடுக்கவும் மிகவும் சிரமப்பட்டார்.

அமெரிக்காவின் முதல் ரிபப்ளிகன் ஜனாதிபதி லிங்கன். இரண்டுதடவை அந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவரும் அவரே.
Spring Field Railwaystation.இங்கிருந்துதான் லின்கன்  தன் பதவி ஏற்பதற்காகப்  புறப்பட்டார்.
கடும் உழைப்புக்கு அஞ்சாத மனிதர் லின்கன்
அமெரிக்க ஜனாதிபதி ஆவதற்கு முன் லின்கன் வசித்த  வீடு.
ஆப்ரஹாம் லின்கன் எழுதிய புத்தகங்களும் மற்று அமெரிக்காவைப் பற்றிய சரித்திரப் புத்தகங்கள் இருக்கும் ஸ்ப்ரிங் ஃபீல்ட் நூலகம்
லின்கனும் மகனும்
Uncle Tom's காபின்
லிங்கன் ,அமெரிக்க ஜனாதிபதி ஆவதற்கும் முன் சந்தித்த கஷ்டங்கள் பலப்பல.
கறுப்பினத்தவருக்கு முடிந்தவரை உதவி செய்ய முன்வந்ததாலையே
அவர் தலைமையில் இயங்க மற்ற வெள்ளை இனத்தவர் மறுத்தனர்.
அத்தனை எதிர்ப்புகளையும் பொறுமையாக் வெற்றி கொண்ட
லிங்கனின்  வளர்ச்சியைக் கண்ட  ஊருக்குப் போக வேண்டும் என்ற ஆசையைத் தெரிவித்தபோது
எங்களை அங்கு அழைத்துச் சென்ற
எங்கள் மகள் மருமகனுக்கு மிகவும் நன்றி.
ஒவ்வொரு இடமும் புனிதமாகப் பாதுகாக்கப் படுகின்றன அங்கே.
ஆப்ரஹாம் லிங்கனின் சொந்த வாழ்க்கை சந்தோஷமாக இல்லை.
ஒரு மகனை நோய்க்குப் பறி கொடுத்தார்.
இன்னும் நிறைய படங்கள்  இருந்தன.
பிகாசாவில்  இடம் இல்லை என்று சொன்னபோது
பல படங்களை டெலிட்  செய்ய வேண்டிவந்தது விட்டது.
அங்கே இருந்தா மியூசியத்தில் நிஜமாகவே
கட்டப் பட்டிருந்த அங்கிள் தாம்'ஸ் காபினையும் பார்த்தோம்.


நம் ஊருக்கு இதெல்லாம் புதிதில்லை.
அவங்க ஊரிலையும்  இது போல இருந்ததுதான்
வித்தியாசமாக இருந்தது.     
புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.

5 comments:

ராமலக்ஷ்மி said...

//அத்தனை எதிர்ப்புகளையும் பொறுமையாக் வெற்றி கொண்ட
லிங்கனின் பிறந்த ஊருக்குப் போக வேண்டும் என்ற ஆசையைத் தெரிவித்தபோது//

உயர்ந்த மனிதரின் பிறந்த இடத்தைப் பார்க்கத் தோன்றிக் கேட்டிருக்கிறீர்கள். அழைத்துச் சென்றவர்களுக்கு எங்கள் நன்றியும. மிக நல்ல பகிர்வு.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

புது மெயில் அக்கவுண்ட் திறந்து இந்த புகைப்படப்பயணங்கள் ப்ளாகை அங்க மாத்துங்க..புகைப்படங்கள் நிறைய போடனுமில்ல..

நல்ல படங்கள்.

வல்லிசிம்ஹன் said...

பாரும்மா. இதுக்குத் தான் இணைய மகள்கள் வேணும்கறது. நன்றிப்பா முத்து. உடனே இன்னோரு ஐடி செய்துக்கறேன். ரொம்ப ரொம்ப நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா ராமலக்ஷ்மி.
வரலாறு முக்கியம்னு நகைச்சுவையாகச் சொல்லிக் கொள்வதுண்டு. ஆனால் இந்த இடத்துக்குப் போனபோது ஏற்பட்ட உணர்வுகள் சரித்திரம் நிஜமாகவே எவ்வளவு முக்கியம்னு தெரிந்து கொண்டேன். நன்றி மா

சுமதி said...

லிங்கனின் பிறந்து,வளர்ந்த இடம் பார்க்க மகிழ்ச்சி வல்லிம்மா.