Tuesday, November 23, 2010

தீப மங்கள ஜோதி! வணக்கம்

அறுபது அகல்கள் இரண்டு உயர விளக்கு, வெள்ளி விளக்குகள் எல்லாவற்றையும் தேய்த்து,சந்தானம்,கும்குமம் வைத்து ,துளசி மாடத்தில் ஆரம்பித்து,காம்பவுண்டு சுவரெல்லாம்   வரிசையாக
தீபங்கள் வைத்தது  ஒரு ஐந்து  வருடங்களுக்கு முன்.
இப்போதெல்லாம் முப்பது அகல்கவிளக்கோடு  கார்த்திகை தீபங்கள் விழா இரண்டு நாட்களுடன்  பூர்த்தியாச்சு.:) 
புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.

9 comments:

ராமலக்ஷ்மி said...

ஒளிரும் கார்த்திகை நாள் படங்கள் அருமை. சயனத்தில் இருக்கும் தெய்வம் யாரோ? விஷ்ணு எனில் ஆதிசேஷனைக் காணுமே, எனவேதான் சந்தேகம்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஓ அவர் ஹனுமன்..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ம் அந்தக்காலமும் நல்லா இருந்த்து. இப்ப நேரமின்மையோ .. அல்லது உதவிக்கு கைகள் குறைவோ ..என்றால் சுருக்கி செய்வதுமா இருக்கு..

இங்கே தில்லியில் எல்லாரும் என்ன விசேசம் என்ன விசெசம்ன்னு கேப்பாங்க..:)

துளசி கோபால் said...

அருமையான படங்கள்.

முப்பது அகல்களா???? பேஷ் பேஷ்

நாங்க கோவிலிலேயே சொக்கப்'பனை' கொளுத்தி விளக்கு வச்சுக் கொண்டாடிட்டோம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி நன்றிமா. சயனத்தில் இருப்பவர் ஹனுமான் ஜி.
உயிர்த்தோழி அனுப்பினார். நம்ம ஊரிலயும் பூம்புஹார் கண்காட்சியில் கூட இருந்தது.

வல்லிசிம்ஹன் said...

அட ,முத்து! கண்டுபிடிச்சாச்சு.:)
உண்மைதான் முத்து, கூடமாட உதவி செய்ய யாரும் இல்லைன்னால் கோலம் போடுவதே மஹா சிரமமாகிவிட்டது.;)
பரவாயில்லை வருடத்தில் ரெண்டு நாள் இது கூடச் செய்யக் கூடாதா;)
வட இந்தியாவில் தீபாவளிக்கு அகல்,தியா ஏத்திடறாங்களே!

ராமலக்ஷ்மி said...

கையில் கஜாயுதம் பார்த்து அப்படியும் நினைத்தேன். முகம் சரியாக தெரியவில்லை:)! உறுதிப் படுத்தியதுக்கு நன்றி. அழகான விக்கிரகம்.

வல்லிசிம்ஹன் said...

துளசிக்கு இல்லாத கோவிலா கொண்டாட்டமா:)போட்டோ போடுங்கப்பா.
துளசி மாடத்துக்கு-2
டூல் ரூமுக்கு...1
சாமிரூமுக்கு ...4
மாடி
ப்படிக்கு ..2 கூடத்துக்கு ...4
வரவேற்பரைக்கு..2
வாசலுக்கு ...4
நாலு ஜன்னலுக்கு 8
கேட் தூணுக்கு ..4
ஆச்சா முப்பது:) இன்னும் விட்டுப்போன இடங்கள் 4.என்ன செய்ய துளசி.இந்த ஆரோக்கியம் கெடாம இருந்தா போதும்!!!

Unknown said...

கோலம் போட்டு,மாவிலை தோரணம் கட்டி, குத்து விளக்கு வைத்திருப்பது எல்லாம் அழகு வல்லிம்மா:))))