Sunday, July 11, 2010

உலகின் மிக வயதான மரங்கள்





மரங்களே அழகு.


பசுமைக்கும்

நிழலுக்கும்

உறுதிக்கும்

நிலைத்து நிற்பதற்கும் ஒரு சான்றாக இயற்கையின் படைப்பு.

உலகின் பல்வேறு பாகங்களின் மரங்கள்,நூற்றாண்டு காலங்களாக நிற்கும் மரங்களைத் தேடினேன்.

தெடியதி கிடைத்தது ஒரு ஆலிவ் மரம்.

இரு இடி வாங்கிய சியெர்ரா நவாடா என்கிற இடத்தில் இருக்கும் இன்னோரு மரம்.

மெக்ஸிகோவில் இருக்கும் இன்னோரு மரம்.

பறைவைகளொடு மனிதர்களும் அடைக்கலம் கொண்டிருக்கும் இன்னோரு மரம்.



இவைகள் பாதுகாக்கப்பட்டு வரும் மரங்கள்.

நம் ஊரிலும் சில மரங்களைப் பார்த்தேன்.



குறித்துவைத்த மரங்களைப் படம் எடுக்கப் போன போது,

அவை பல வேறூ காரணங்களுக்காக,

மின்கம்பிகளுக்காக,

தொலைபேசிக் கம்பங்களுக்காக,

எல்லாவற்றுக்கும் மேலாக தொலைக்காட்சி தனியார் கேபிள் லைன்களில் சிலமரங்கள் தூக்குப் போட்டுக் கொண்ட காட்சியையும் பார்த்தேன்.

படங்களுக்ககவும் ஒரு பதிவு வேண்டுமே.

Sunday, June 20, 2010

வில்லிபுத்தூர் ஸ்ரீ.: செடோனா படங்கள். 2007

வில்லிபுத்தூர் ஸ்ரீ.: செடோனா படங்கள். 2007

பகவானின் சரணாரவிந்தங்களில் இந்தப் பதிவு வலைப்பூவாக இருக்கட்டும்,.

செடோனா படங்கள். 2007





பகவானின் சரணாரவிந்தங்களில் இந்தப் பதிவு வலைப்பூவாக இருக்கட்டும்,.

''லேட்  ஃபார்  ட்ரெயின் கஃபே ''
இப்படி  ஒரு  ஹொட்டெல் செடோனா  ஊரில். எல்லாமெ  விதமான கலாசாரங்களின் பிரதிபலிப்பு.


முதல் ,ஆதிமுதல் காலத்திலிருந்து அங்கே வாழ்ந்து வந்த சிவப்பு இந்தியர்கள்,
அவர்களின்  உண்மை  முகங்களை தொலைத்தாலும்,


சில  வழிகளில் இன்னும் தங்களின்  பாரம்பரியத்தைக் காப்பாற்றி   வருகிறார்கள்.
அங்கே  படத்தயாரிப்பாளர்களும்   ஏகப்பட்ட   தடயங்களை விட்டுச் சென்றிருக்கிறார்கள். அதில் மேலே  இருக்கும் படமும் ஒன்று.
 
உண்மையாகவே  மயக்கக் கூடிய  இடம்.


Friday, June 18, 2010

2007 ஆம் ஆண்டின் சில படங்கள்.

க்ராண்ட்   கான்யான். அங்கே எடுத்த படங்கள் சில இங்கே.




பகவானின் சரணாரவிந்தங்களில் இந்தப் பதிவு வலைப்பூவாக இருக்கட்டும்,.
Posted by Picasa

Wednesday, April 21, 2010

பொழுது போனதோ?

cல் இன்ஸ்டிட்யுட்.
மூன்று மாடிகளும் பார்த்து, ஒரு கூடை, ஒரு பிள்ளயார், ஒரு சிப்பி(எல்லாம் சேர்ந்து 30ரூபாயில் அடங்கி விடும்.)

அடுத்த படையெடுப்பு ஸ்பென்சர் கட்டிடம். அங்கே போய் இருக்கும் கடைகளைப்
பார்த்துவிட்டு ஒன்றும் வாங்காமல்---எல்லாம் பட்ஜெட்டுக்கு மேல் இருக்கும்.
அடுத்து நடந்து ஹிக்கின்பாதம்ஸ் வருவோம்.
நடுவில் கொறிக்க ஏதாவது உண்டு.
ஹிக்கின்ஸில் குழந்தைகள் பக்கம் இப்போது போலவே நல்ல புத்தகங்கள் இருக்கும்.
ஒன்றொன்றாகப் படித்து விட்டு கடைசியில் ஒரு மனதாக
லேடிபேர்ட் புஸ்தகம் ஓன்றும் (5ரூ) டின்டின் புஸ்தகம்(18ரூ) ஒன்றும் வாங்கி வருவோம்.
ஸ்பெஷல் டிரீட் ஆட்டொவில் வீடு வருவதுதான்.
பிறகு வீடே கலகலப்பாகி விடும். முதலில் பெரிய பாட்டியிடம் வாங்கி வந்த பொருட்களைக் காண்பிக்க வேண்டும்.
பிறகு சின்னப் பாட்டியிடம்(ஆங்கிலம் படித்த பாட்டி) சொல்ல வேண்டும். அவர்கள்
இருவரும் அவசியமான கேள்விகளைக் கேட்டு
இவர்கள் மூவரும் பதில் சொன்ன பிறகுதான் படிக்கும் படலம்.
இதுபோல் சேர்ந்த புத்தகங்கள் பொக்கிஷங்கள்.
இவைகளைத் தவிர லெண்டிங் லைபிரரிப் புத்தகங்கள் திருப்பிக் கொடுக்கும் நாளுக்கு முன்னால்
காணாமல் போகும்.
டியூ டேட் முடிந்து பள்ளிக்ககூடம் திறந்த பிறகு, நான்தானே
இருப்பதை திருப்பி கொடுக்கப் போக வேண்டும்!

எங்க வீட்டு மூன்று தலை முறைக்கும் நான்தான் லைபிரரி உமன்.

பெரிய பாட்டியோட வடுவூர் துரைசாமி,

மாமியாருடைய லக்ஷ்மி,தேவன், கல்கி புத்தகங்கள்,
என்னுடைய சிவசங்கரி,சுஜாதா, பி வி ஆர், சாவி ,
வாசந்தி
இதற்குப்பிறகு பசங்களோட புக்ஸ்.
இப்பவும் சொல்லுவார் அந்த லைபிரரிசொந்தக்காரர்
105 ருபா புஸ்தகம் வரவே இல்லைம்மா என்று.
நான் என்ன சொல்லுவேன்?

புத்தகங்கள் பைண்டு செய்து ஸமத்தாக அலமாரியில் இருக்கிறது என்றா?
அதற்குப் பிறகு அவர் கடைக்கே நிறைய புத்தகங்களை
சும்மாவாகவே கொடுத்து சரி பண்ணி விட்டேன்.
அதுவும் இந்த புத்தகங்கள்,
லியான் யுரிஸ், அலிஸ்டர் மாக்லீன்
ஹாட்லி சேஸ்,
ஹரால்ட்ராபின்ஸ்,
மரியோ பூசோ,
இர்விங் வாலஸ்,
ஆர்தர் ஹெய்லி,
இயன் ஃப்ளெமிங்,
பீட்டர் பென்சிலி
மேலும் சிலருடைய புத்தகங்களை
இடம் பற்றாக் குறையால் கிலொ கணக்கில் கொடுக்க வேண்டி வந்தது!!. அறிவு தானம் நல்லதுதானே1
அதனாலே பரவாயில்லை என்று நாங்களே சமாதானப்படுத்திக் கொண்டோம்.
இன்னும் சேர்த்துப் பிரிந்த பழைய ஒலி
நாடாக்கள். ஹ்ம்ம்.

Tuesday, April 20, 2010

திருவாடிப்பூரத்து ஜகத்துதித்தாள் வாழியே.
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே.
ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயியின் துணவி, ஸ்ரீரங்கனை மணந்தவள் அவள் ஓரடி முன்வந்து வாழ்த்திய முனி, எதிராஜன்,நமது உடையவர், ஸ்ரீ ராமானுஜர் அவதரித்த சித்திரைத் திருநாள், திருவாதிரை நட்சத்திரம் இன்று.

இராம லக்க்ஷ்மணர்களில் லக்ஷ்மணரின் அவதாரம் தான் ஸ்ரீ ராமானுஜர்.மஹாவிஷ்ணுவின் , நின்றால் குடையாம், இருந்தால் சிங்காசனமாம் கிடந்தால் புல்கும் அணையாம் ஆதிசேஷனே லக்ஷ்மணன். சேவா நாயகன்.
அவனே ஸ்ரீராமானுஜராக வந்து மக்கள் உய்ய வந்த மாமுனி.
இந்த அவதார புருஷனின் தோற்ற முக்கியத்துவமே அனைவரையும் பகவான் வழிப்படுத்துதலே.
கடவுள் இருக்கிறார் அவரை அணுக எல்லோருக்கும் உரிமை உண்டு. சில நபர்களுக்கு மட்டும் சொந்தம் இல்லை அவன் நமம் என்பதைத் திருக்கோஷ்டியூர் கோபுரம் மேல் நின்று உரக்க அறிவித்தவர்.

ஜாதி பேதம் பகவானுக்கு இல்லை என்பதைத் தன் வாழ்நாள் முழுவதும் தானே அவ்வழியில் நடந்து நிரூபித்தவர்.
மேலும் சொல்ல எத்தனையோ உண்டு.
அதைச கற்றறிந்த   பெரியோர் சொல்லியும் இருக்கிறார்கள்.
இந்த நாளைப் பதிவு செய்யவே இந்த எழுத்து.
வாழி உடையவர் நாமம்.
நாராயணனையே வாராய் என் செல்லப் பிள்ளாய் என்றழைத்த பெருமான் .அவரை என்றும் மறவாமல் இருக்கும் மனதைக்  கொடுக்க அந்த ஸ்ரீமன் நாரயணனையே துதிக்கிறேன்.

Tuesday, March 30, 2010

பங்குனி உத்திரம்,பவுர்ணமியும் தெய்வத்திருமணங்களும்

திரு முருகன் வள்ளி தெய்வானை
ஸ்ரீ  கற்பகாம்பாள் கபாலீஸ்வரர்
SRIRANGAM DHIVYA THAMBATHIYAR
அறுபத்துமூவர் பூர்த்தியான அடுத்த நாள் கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் அம்மா கையைப் பிடித்துப் பௌர்ணமி நிலவு ஒளிவீசத் திருமணம் செய்கிறார்.ஸ்ரீ ரங்கராஜன் ஸ்ரீரங்கத்தில் தாயார் ரங்கநாயகியுடன் சேர்த்தி கண்டருள் புரிகிறான்.




திரு முருகனோ தெய்வயானையின் கரம் பிடித்து ,சுற்றம் சூழத் திருமணக் கோலத்தில் காட்சி தருகிறான்.



இந்தத் திருமணங்களைக் காண முழுநிலவோ தன் பூர்ணபொலிவுடன் விரைந்து வந்து

அத்தனை திருமணங்களுக்கும் சாட்சியாக நிற்கிறான்.



இந்த நல்ல நாளில் அனைவரும் மன சஞ்சலங்கள் அனைத்தும் நீங்கி,

தெய்வத் திரு தம்பதிகளைப் போலவே மனம் ஒன்றி,

மகிழ்ச்சியாக இருப்போம்.

அப்படி இருக்க அவன் பாதங்களே சரணம்.

Wednesday, February 24, 2010

திருமிகு வெங்கடேஸ்வரா பக்தி சானல்

இந்தப் புகைப்படங்கள் அனைத்தும் ஸ்ரீ வெங்கடேஸ்வர பக்தி கானளிளிருந்து எடுக்கப் பட்டவை.
நல்லதொரு சேவை செய்து வரும் திருமலா திருப்பதி தேவஸ்தானத்திற்கு மிகவும் நன்றி.


அதுவும் கோவிந்தனை நேருக்கு நேர் காலை வேளைகளில் காணக் கிடைக்கும் பாக்கியத்திற்கு எவ்வளவு கடமைப் பட்டிருக்கிறேன் என்று பிரமிப்பாக இருக்கிறது.

வீதியூ காட்சிகள் திருமலையை வளம் வந்து அங்கேயே இருக்கும் ஒரு புனித உணர்வை ஏற்படுத்துகின்றது.
இன்றும் பத்ராச்சலத்திளிருந்து ஸ்ரீராமநவமி உற்சவத்தை நேரடியாக ஒளி பரப்பப் போகிறார்கள்.
கலியுகவரதன் பாதங்களுக்கு நமஸ்காரம்.

Friday, September 12, 2008

திரு அருள்மிகு அகிலாண்டேஸ்வரி தாயார்.

பதிவர் நண்பர் யு.எஸ். தமிழன் வேண்டுகோள்படி திருச்சி,திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி
அம்பாள், இங்கே வந்திருக்கிறாள்.

எனக்கும் சக்திமிகுந்த இந்தத் தாயை நினைக்க துதிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது.

Thursday, September 07, 2006

சின்ன கிருஷ்னனும் சின்ன ராமனும்

நம்மில் சில பேர், சாமிக்கு ஏன் ஏதாவது படைக்க வேண்டும்?

நாம் சாப்பிடும் பொருட்களை அவர் சாப்பிடப் போகிறாரா.
ராத்திரி வேளையில் அவருக்கு எதற்கு ஏகாந்த சேவையும்
நாதஸ்வரமும்

நீலாம்பரி இசையும் /அவர் தூங்கப்போகிறாரா/?
டெல் மி ஒய் என்று முன்னால் சிறுவர் சிறுமியருக்கு ஒரு
செலக்ஷன் of குட் க்வெஸ்டியன்ஸ் அண்ட் ஆன்சர்ஸ்
வரும்.
ஆனால் அதில் நம்ம சாமியைப் பற்றி ஒண்ணும் கிடைக்காது.
நமக்கு இவ்வளவு முன்னோடிகள் இருக்கும்பொதே சில கேள்விகளுக்கு பதில் தெரிவதில்லை.
வரப்போகும் தலைமுறை கேட்கும் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வது?
ஏனெனில் நமக்குத் தெரிந்ததும் கொஞ்சம் தான்.
அப்போதுதான் இன்று காலை இந்தப் பாடலைக்
கேட்க நேர்ந்தது.

வடமொழியில் இருந்தாலும் புரிந்தது.
எனக்குத் தெரிந்தவரை அதன் பொருளைக் கொடுத்து இருக்கிறேன்.

யார் சொல்வது ராமன் சாப்பிடவில்லை என்று.?
நீங்களும் சபரியின் அன்போடு கொடுத்தால்
அவன் ஏற்றுக்கொள்ளுவான்.

யார் சொல்வது கிருஷ்ணன் தூங்குவதில்லை என்று.
நீங்களும் யசோதா போல் அவனுக்குத் தாலாட்டுப் பாடினால் அவன் தூங்குவான்.

யார் சொலவது அவன் பாடி ஆடிக் களிக்க
மாட்டான் என்று,
நீங்களும் கோபிகளுடன் சேர்ந்தால்
பக்தியில் அவன் பாடி ஆடுவான்.
அவர்களைப் போலப் பாடிப் பழகுங்கள்.
இதே போல் போகிறது.

இனிமையான பாடல்.
சில கேள்விகளுக்குப் பதில் இப்படித்தான் கிடைக்கும்.
இதை நம்பினால் போதும் என்று எனக்குத்
தோன்றுகிறது.

Tuesday, September 05, 2006

வலைப் பயன்


வலையில் நண்பர்கள் கிடைப்பது

நடப்பதுதான்.



எனக்குக் கிடைத்த நண்பர்கள் எல்லோருக்கும் நண்பர்கள்.

அதிலேயும் ஸ்பெஷலாக நமது குழந்தைகளின் நண்பர்களாக இருந்துவிட்டால் அதை விட சந்தோஷம் வேறு ஏது?

அப்படியும் சில நண்பர்கள் நண்பிகள் கிடைத்துள்ளனர்.

உண்மையான, நம்மை முழுவதும் புரிந்து கொண்ட

தோழமை கிடைத்ததற்கு வலைக்கும் தமிழ்மணத்திற்கும்,

தேன்கூட்டிற்கும் நன்றி.

Monday, September 04, 2006

பொன்னோணம் வாழ்த்துக்கள்











பதிவர்களுக்கும் எல்லோருக்கும் திருவோண நல் வாழ்த்துக்கள்.

Wednesday, August 30, 2006

ஒரே வழிசல்




வழிவது என்ற சொல் எப்படி வந்து இருக்கும்.?




பாத்திரம், பண்டம் நிறைந்து விட்டால் வழிந்து ஓடும்

அதே மாதிரி அணைக்கட்டு, பால் பொங்கி வழிவது எல்லாமே நமக்குத் தெரிந்த விஷயங்கள்தான்.
இப்பொது நான் சொல்ல வந்தது அந்த வழிவது இல்லை. பழங்கால வழிசல்.

எப்போதெல்லாம் இந்த அனிச்சை செயலை நாம்,இல்லாவிட்டால் மற்றவர்கள் செய்கிரார்கள் என்று பார்த்தால்,

முதல் காரணம் நம் புத்திசாலித்தனத்தின் மேல் நமக்கு இருக்கும் அபார நம்பிக்கை தான்.

ஒரு உற்சாக வேளையில்,

( எங்களுக்கெல்லாம் புடவைகள், சினிமா, சாப்பாடு (சர்க்கரை ரத்ததில் இருந்தால் )அதை பற்றியே பேசத்தோணுமாம்) பற்றிப்பேசும்போது தனியாக ஒரு உற்சாகம் பிடித்துக்கொள்ளும்).

என் தோழி தான் வாங்கின கைத்தறி புடவையை சிலாகித்துப் பேசி எல்லாரையும் அசத்தினாள். அந்த ஊரில் நெசவாளிகள் கஷ்டப்படுவதையும் தான் எல்லோருக்கும் அங்கிருந்து தறி விலைக்கே தருவித்துக் கொடுப்பதாகவும் உணர்ச்சி பொங்கக் கூறும் போது தான் மாட்டிக்கொண்டாள். {ஓ ஈ என்று இப்பத்திப் பசங்க சொல்றது}


இதோ அவள்,"" இந்த மாதிரி நீங்க பார்த்தெ இருக்க முடியாது.நீலத்திலெ ப்ளூ ஸ்பாட்ஸ்,ப்லாக்கிலே கருப்பு பொட்டு,சிவப்பிலே ரெட் பார்டெர் ""

என்று அடுக்கிக் கொண்டே போனாள்.எங்களுக்கு அவள் பேச்சின் தீவிரம் உரைத்ததே ஒழிய அதிலிருந்த காமெடி,முரண் புரியவில்லை.


"உண்மையாகவா?


எல்லாம் புதுப் புது அமைப்பாக இருக்கிரதே. நீலத்திலே ப்ளூ!!. ரேர் காம்பினஷன்"!!!

நம்ம எல்லோரும் சேர்ந்து வாங்கினால் அந்த தறிக் குடும்பத்துக்கு உதவி. செய்த மாதிரி இருக்கும்.

,என்று ஆளுக்கு 2 கருப்பிலே ப்லாக் புட்டா,

ரெட்டிலே சிகாப்பு பார்டர் என்று அவரவர் கற்பனையில் மூழ்கின போதுதான்,அடச்சே என்று விழித்துக்கொண்டோம்.

அவள் சொன்னதைதிருப்பிச் சொல்லும்போது நாங்கள் செய்த வண்ணக் கனவு புடவைகள் சாயம் இழந்தன.

ஓ, இந்த வெய்யில் என்னை குழப்பி விட்டது. உங்களுக்குப் பிடித்த எப்போதும் உடுத்தும் துணிமணிகளே வாங்கலாம் என்று அவசர அவசரமாக நடையைக் காட்டினாள்.
நினைத்து நினைத்து சிரித்தோம்
அதிலிருந்து நாங்கள் அவளை " அ ரேர் காம்பொ " என்றுதான் அழைக்கிறோம்.
// posted by manu (வல்லி சிம்ஹன்)@ 8:41 PM
Comments:

Tuesday, August 29, 2006

ஆஜி


ஆஜிப் பாட்டி இருந்து இருந்தால் இந்தக் கார்த்திகைக்கு 111

வயது ஆகி இருக்கும்.

அதென்ன ஆஜி? என்று எல்லோரும் கேட்பார்கள்.

இந்தப் பெயரோடு நான் இது வரை யாரையும் பார்த்தது இல்லை.

நற்குணங்களோடு ஒரு பெரிய குடும்பத்தை

நிர்வாகம் செய்தவர், அதுவும் 6 தலைமுறைகளோடு ஒற்றுமையாகப் பழகி எல்லோருக்கும்
நல்ல வழி காட்டியவர்.
எட்டு வயதில் ஒரு பெரிய கூட்டுக் குடும்பத்துக்கு
மருமகளாகி,
பதின்மூன்று வயதில் முதல் மகனைப் பெற்றவர்.
கும்பகோணம் பக்கத்தில் கடம்பங்குடி என்ற ஊரில்
சாதாரணமான ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்
ஆஜியின் தந்தை.
சிறு வயதில் பல ஆங்கிலேய மாவட்ட (1860)ஆட்சியாளர்களைப் பார்த்து எப்படியாவது வாழ்க்கையில்
முன்னேற வேண்டும் என்று தெளிவாகச் சிந்தித்து
அந்தக் கால வழக்கப்படி துண்டை உதறித் தோளில் போட்டு, கையில் வெறும் ஐந்து ரூபாயுடன்,
தீராதக் கல்வி தாகத்தோடு வந்தவர்.
அப்போது ரயிலுக்கு செலவழிக்கக் கூட அவரிடம் பணம் கிடையாது என்று பாட்டி சொல்லிக்
கேள்வி.
சென்னை வந்தவர் தன் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெரிய
கிரிமினல் வழக்கறிஞரிடம் சேர்ந்தார்.
அந்தச் சிறு பையனின் அறிவும் தீர்க்கமும் பெரியவரை
ஈர்த்து விட்டன. மேலே படிக்க விருப்பமா என்று அவனைக் கேட்டபோது அவனும் தயங்கவில்லை.
எப்படியும் கடமையைச் செய்ய வேண்டும் என்று
உதவியை ஏற்றுக்கொண்டான்.
பெரியவரின் ஊகம் மோசம் போகவில்லை.
வழக்கறிஞராக வந்து நின்ற இளைஞனுக்குத்
தன் பெண்ணையேத் திருமணம் செய்து வைத்தார்.
மயிலைக் குளத்து அருகில் அப்போது வீடுகளும்
கோவில்களுமே இருந்தன.
அதில் ஒரு வீட்டில் குடியமர்த்தப்பட்டனர் இந்தத் தம்பதிகள்.
குடும்பம் பெருகியது. வருமானமும் பெருகியது.
நல்லபடியாக ஆளத்தெரிந்த அரசிபோல வளைய வந்த தன்
அம்மாவை ஆஜி எப்போதும் மறந்ததில்லை.
இதிலென்ன அதிசயம் என்று கேட்கிறீர்களா?
அந்த நூற்றாண்டில் பெண்கள் செல்லம் கொடுத்து வளர்க்கப் படவில்லை.புத்தி சொல்லி, சமையல் கற்றுக்கொடுத்து,
இன்னோரு வீட்டில் அடங்கி,நளபாகம் வேலை செய்து
வந்தவர்களை உபசரித்து,
குழந்தைகளைப் பெற்று,
அவர்களைத் தன் பிம்பமாக வளர்த்து................
வயதாகி அடங்க வேண்டியதுதான்.
இந்த அச்சில் வார்க்கப் பட்ட பொம்மையாக
இருக்க ஆஜி மறுத்ததுதான் அதிசயம்.
திருமணம் செய்ய வரனைத் தேர்ந்து எடுத்தது
என்னவோ தன் தந்தையாக இருந்தாலும்(திருமணத்திற்கு
அப்புறம்)
தன் வாழ்வை நிர்ணயிக்கும் மன உறுதி அவரிடம்
இருந்தது. அதை நினைத்துதான் எங்களுக்கெல்லாம்
ஆச்சர்யமாக இருக்கும்.
ஆஜிப் பாட்டி வாழ்க்கைப்பட்டது பெரிய மிராஸ்தார் குடும்பத்தில்.
ஆறு மைத்துனர்கள், இரண்டு நாத்தனார்கள்.
திருமணத்துக்கு முன்னாலேயெ இறைவன் திருவடி சேர்ந்ததால்,
திருமணம் செய்து வரும் குழந்தை மருமகளுக்கு அறிவுரை
சொல்லி, நடத்திச் செல்ல யாருமில்லை.
வீட்டு ஆண்களோ விவசாயத்தையும், வைதிகத்தையும்,
வேதாந்தத்தையும் விடாமல் பின்பற்றுபவர்கள்.
இந்த ஆஜிப் பாட்டிக்கு முன்னாலேயெ வந்து விட்ட முதல் மருமகள் அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவராக இருந்ததால் கொஞ்சம் நெளிவு சுளிவு தெரிந்து
நடப்பாராம்.
மச்சு என்னும் மாடியில் பெண்கள் இருக்க, கீழே
கும்பல் கும்பலாக சாப்பாட்டுப் பந்தி நடக்கும் என்றும்,
சாப்பாட்டு மணம் வரும்போது பசி பொறுக்காமல் அந்த மச்சிலேயெ குமித்து வைத்து இருக்கும் உப்பு புளி, வெல்லம் எல்லாம் கலந்து அரிசி யோடு சாப்பிடப் பழகியதாகவும் சிரித்துக் கொண்டே சொல்லுவார்.
இவர்கள் சமையல் செய்யப் போகாத காரணம்,
அந்த சமயத்தில் ஆஜிப் பாட்டியின் மாமனார்
ஒரு மடாதிபதியாகப் பொறுப்பேற்றதுதான்.
பெண்களுக்கு சமையல் அறை பக்கம் போக முடியாது.
அதனால் மடத்தில் குருவைப் பார்க்க வருபவர்கள் நேரே
வீட்டுக்கு சாப்பிட வந்து விடுவார்கள்.
அந்தப் போஜனம் எல்லாம் முடிந்த பிறகுதான்
வீட்டுப் பெண்கள் சாப்பிட முடியும்.!
தினம் தினம் இந்தக் கதைதான்.
ஒருவழியாகத் தாத்தாவின் பள்ளிப் படிப்பு, கல்லூரிப் படிப்பும் முடியும் போது
சென்னைக்கு இருவரும் அனுப்பி வைக்கப் பட்டார்கள்
தாத்தா சட்டம் படித்து , குழந்தைகள் பிறந்தது அப்போதுதான்.
தாத்தாவுக்கு நிலபுலன்களைப் பார்த்துக் கொள்ளும் வேலையும் சேர்ந்து கொண்டதால்
பாதி நேரம் கும்பகோணம் போக வேண்டிய நிலைமை.
எத்தனை நாள் தந்தையின் வீட்டில் இருப்பது?
அதனால் ஆஜிப் பாட்டி தனக்கென்று ஒரு இடம்
வேண்டும் என்று தன் தந்தையின் ஆசியோடு 1930(என்று நினைக்கிறேன்)ல் இப்போது இருக்கும் சாலைக்கு
வீடும், தோட்டமும் மாடு கன்றுகளோடு வந்தார்கள்.
இதற்குள் ஆஜிப் பாட்டியின் குடும்பத்தில்
இரண்டு புதல்விகள், நான்கு புத்திரர்கள்.
எல்லோருக்கும் நல்ல கல்வி ஏற்பாடு
செய்து கொடுத்தார் ஆஜி..
கோமள
வல்லியாக இருந்த அம்மா , ஆஜி ஆனது அப்போதுதான்.
பெண்ணைத் திருமணம் செய்து கொடுத்தது பங்களூரில்.
அந்தப் பெண்ணுக்குப் பிறந்த குழந்தைகள் , அந்த ஊர் வழக்கப் படி அஜ்ஜி(கன்னடத்தில் பாட்டி)
ஆஜி என்று கூப்பிட ஆரம்பித்ததும்
எல்லோருக்கும் ஆஜியாகி விட்டார்.
அவருக்கு மாற்றுப் பெண்களும் மாப்பிள்ளைகளும் வந்த
பிறகும் ஆஜி ஓய்வெடுத்து நான் பார்த்ததில்லை.
நிலத்திலிருந்து விளைந்து வரும் பொருட்களைத் தனியாக சீர்செய்து வைப்பது.,
அத்தனை பெரிய வீட்டுக்கு ஒரே ஒரு ஆளை வைத்து
சுத்தம் செய்வது, கடைக்குப் போவது,(மாட்டு வண்டியில் தான்) , பேத்திகள் படிக்கும் பள்ளிக்கூடத்திற்குப் போய்,
விவரங்கள் அறிவது,
மாடுகளுக்குத் தீவனம் வைத்து,பால் கறக்கும் ஆட்களைத் தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது,
சமையல் அறையில் நின்று தன் பெரிய சம்சாரத்துக்கு அளவாக அரிசி, பருப்பு, காய்கறி செலவு செய்து
வேளைக்கு சாப்பாடு செய்து போடுவது..
எப்போதும் சேமிப்புக்கு மாதந்தோறும்
பேரன்கள், பேத்திகள் கணக்கில் பணம் போடுவது.
மகன்களின் வருமானத்துக்கு மீறி செலவு இல்லாமல்
அவர்களைக் கட்டிக் காத்த குடும்பம் நடத்தும் பாங்கு
சொல்லிக் கொடுத்து,
தவறு செய்தால் திருத்திக் கொள்ள வழி சொல்லி,
நேர்மையிலிருந்து ஒரு துளி கூட விலகாமல்,
எல்லாப் பேரன் பேத்திகளுக்கும் கல்லூரி வரைப் படிக்க வைத்தவர்.
படிப்பின் அருமை தெரிந்தவர்.
4 வகுப்பு வரைதான் படித்தவர்.
ஆங்கிலத்தில் கையெழுத்துப் போடத்தெரியும்.
நான் என் லெண்டிங் லைபிரரிக்குப் போகும்போது,
கௌந்ட் ஆஃப் மாந்தி க்ரிஸ்டோ, ஷெர்லக் ஹோம்ஸ் நாவல்கள் தமிழாக்கப் பட்டவை, வை.மு.கோதைனாயகி அம்மாள் கதைகள் எல்லாம் எடுத்து வரசொல்லுவார்.
கூர்மையான புத்தி.
எதிராளியின் முகத்தை வைத்தே சொல்வது பொய்ய உண்மையா என்று எடை போடுவார்,.
எல்லாரிடமும் இருக்கும் பலம் பலவீனம் தெரியும்.
நேர்மையாக இருப்பவர்களைப்பார்த்தால் தனி அன்பு காட்டுவார்.
இறக்கும் தருணத்தில் அவர் தன் சொத்து என்று வைத்து இருந்தது இரண்டே இரண்டு நூல் புடவைகள்தான்.
மற்ற எல்லாவற்றையும் நாலு தலைமுறைகும் சமமாகப் பிரித்துக் கொடுத்து விட்டு,
வங்கியில் தன் ஈமச் சடங்குக்கு என்று எட்டு ஆயிரமும் வைத்துதான் இறந்தார்.
கீழே விழுந்ததால் தான் அந்த 88 வயதில் இறக்க நேர்ந்தது.
அதுவும் எப்படி?
தன் உயிர் சினேகிதியின் பேரன் அமெரிக்காவுக்கு
எடுத்துப் போக , காலை 4 மணிக்கு, சமையல் அறையில்
புளிக்காய்ச்சல் தயாரிக்கப் போனவர், எண்ணை சிந்தி இருப்பதை பார்க்காமல் வழுக்கி விழுந்து விட்டார்.
ஒரு நல்ல முற்போக்கு எண்ணங்கள் கொண்ட
அறிவாளி நிறை வாழ்வு வாழ்ந்து
இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொன்னார்.
இத்தனை தனித் தன்மை பொருந்திய பெண் எனக்குப் புகுந்த வீட்டுப் பாட்டியானது என் அதிர்ஷ்டம் தான்.

Monday, August 28, 2006

வாழ்த்துக்கள்

தேன்கூடு போட்டியில் வெற்றி
பெற்ற
கொங்கு ராசா,
ஜி.கௌதம்,
ராசுக்குட்டி
இளா
எல்லோருக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அருமையாக எழுதும்போது தேர்ந்து எடுப்பதும் சிரமம் தானே.

இன்னும் நிறைய வெற்றிகள் இவர்களை நோக்கிவரவேண்டும்.

ரேவதிநரசிம்ஹன்(யேழிசை--பொருனைக்கரையிலெ)

Sunday, August 27, 2006

Wednesday, May 10, 2006
நானும் ,ரசமும், நண்பர் பில்லி வாக்கரும்






இது ஒரு மலரும் நினைவு(!).ரஸ வாசனையொடு வருகிறது

எங்கள் மகளின் முதல் பிரசவத்துக்குப் போன்போது விமான நிலயத்தில் இறங்கினதிலிருந்தே உதவிக்கு வந்த மாமியாரைப் பார்த்துக்கொள்வது எங்க மாப்பிள்ளைக்கு (பெரிய) கவனித்து செய்ய வேண்டிய விஷயமாகி விட்டது.பெட்டியை இறக்கி,ஆவக்காய் வாசனையை சமாளித்து,ஜெட் லாகினால் தூங்கி வழியும் என்னை இன்னுமொரு கனெக்டிங்க் விமானத்தில் ஏற்றியதும் தான் அவருக்கு நிம்மதி. அப்பவே அவருக்கு தோன்றி இருக்கணும்

,இது உதவிக்கு வந்து இருக்கா உபத்திரவத்துக்கு வந்து இருக்கா என்று.பாவம் ஜெண்டில்மேன். ஒண்ணும் கண்டுக்கவில்லை.அடுத்த தளத்தில் இறங்கி வீடு வந்து பெண்ணைப்பார்த்துகளித்து, விசாரப்பட்டு(எல்லா அம்மாக்களும் செய்வது தானெ)சூட்கேசைப் பிரித்தால்... ஆவக்காய் ஏன் அவ்வளவு சுகந்தம் பரப்பியது என்று தெரிந்தது.

மூடி நெகிழ்ந்து சாறு சிந்தி ஒரே மணம் தான். இரண்டரக்கலந்து விட்டது ஆவக்காய் நான் சீமந்ததுக்காக வாங்கி வந்த பொருட்களோடு.எங்கள் மகளும் மகா பொறுமை சாலி. போனா போறதும்மா. இங்கெ கூட வாங்கிக்கலாம் என்று சொல்லி விட்டாள்.

வீட்டை சுத்தி பாரும்மா ,இதுதான் உன் ரூம் என்று காண்பித்து அவள் வெளியெ போவத்ற்கு முன்னாலேயெ நான் தூங்கியாச்சு.அவர்கள் இருவரும் என்னை எழுப்பி சாப்பிட வைக்க செய்த முயற்சி வீண்.சென்னை கஸ்டம், போர்டிங், ஜெர்மன் நிலய வெய்ட்டிங்க்எல்லாம் படுக்கையில் விழுந்ததும் தூக்கமாக என்னை கும்பகர்ணியாக்கி விட்டன.



அதே போல் அவர்களுடைய இரவு 1 மணிக்கு என் இடும்பை கூர் வயிறும் விழித்துக்கொண்டது. இருக்கும் இடம் ஏவல், பொருள் புரிய கொஞச நேரம் பிடித்தது.கூடவே அமெரிக்கா வந்தோமே. அட, ஒரு இடம் பார்க்காமல் தூஙகி விட்டேனே என்று ஒரு சிறு எண்ணம், அத்தோடு பயங்கரப் பசி.சரி, முதலில் கிச்சன் கண்டுபிடிக்கலாம், பிறகு கவலைப் படலாம் என்று

தட்டு தடுமாறி வ ழி தேடி சமையல் அறை அடைந்தேன். ச்விட்ச் தேடும் படலம்,ஃப்ரிஜ் தேடும் படலம் எல்லாம் தனி அத்தியாயம்.:-)அதிர்ஷ்டவசமாக என் பெண் சொன்னது நினைவில் இருந்தது. ரசம் சுட வைத்தால் வாசனை போய் அவர்களை எழுப்பி விடும் என்று சில் ரசம் சில் சாதம் சில் கூட்டு எல்லாம் ஒரு கதம்பம் செய்து, பசிக்கு சமைத்து வைத்த மகளை வாழ்த்தி, சாப்பிட்டுவிட்டு, சின்க்கில் எல்லாவற்றையும் சேர்த்து குழாயைத் திறந்தேன்.......இங்குதான் கதை ஆரம்பம்.

நான் நிரம்ப அமைதியாக வேலை செய்ததாக நினைக்க,அது எப்படி யானையும் வெங்கலமும் சத்தம் செய்யாமல் இருக்கும் என்பதை நிரூபிக்க என் மகளும் மாப்பிள்ளையும் அம்மா என்று கூப்பிட , நான் என்னவோ ஏதோ என்று அவர்கள் உறங்கும் அறைக்கு போக,அவர்கள் ' அம்மா நீங்கள் படுத்துக்கொள்ளலாம்.நாளை மத்த விஷயம் பார்க்கலாம்னு சொல்ல,"

நான் சாதுவாக மீண்டும் படுக்கப் போக,காலை5 மணிக்கு " maintenance, please open the door' என்று ஒரு அதிகாரக் குரல்.நான் என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் தயங்கித் தயங்கி மாப்பிள்ளை பெண்ணை எழுப்ப,என்னவோ ஆகிவிட்டது என்று அவர்கள் கீழெ இற்ங்க,எனக்கு மூச்சே நின்றது ஒரு நிமிடத்துக்கு.தமிழ் சினிமா அம்மாக்கள் மாதிரி 'ஆ ஆ தந்தியா அய்யொ படிடா யாருக்கு என்ன ஆச்சோ, 'என்று சக தெய்வஙகளைக் கூப்பிடா விட்டாலும் பதைப்பாகத்தான் இருந்தது.அவர்கள் கீழே இறங்கினதும், என் காதுகள் தண்ணீர் ஓடும் சத்தம் கேட்டு ஹேய் ராம் {அப்போது கமல் படம் வரவில்லை] என்று சமயலறைக்குப் போனால்....

அந்தக் கோலாகலத்தை என்ன சொல்ல.நான் மூட மறந்த சின்க் குழாய் வெள்ளம் பெருக்கெடுத்துரசம், ஏற்கனவே அதிலெ இருந்த சாம்பார்,கூட்டு,சட்னி எல்லாம் ஒன்று சேர்ந்து சமயல் அறை பூராவும் தளும்பிக் கொண்டு இருந்தது.உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு(அதை எப்படி உயிரைக் கையில் பிடிக்க முடியும்? கேட்காதீர்கள். எனக்குத் தெரியாது) மெள்ள நீந்திக் குழாயை அடைத்து விட்டு நிமிர்ந்தேன்.பார்த்தால் (நாண்டுக்கிட்டு என்ற வார்த்தை நினைவில் வருகிரதா?)

கீழெ குடியிருக்கும் பில் என்பவர், அந்த ஃபார்மிங்டன் ஹில் ஹௌஸ் மெயிந்டினன்ஸ்ஆளு எல்லாரும் ஒரு 6,7 அடி உயரத்தில் இருந்து என்னை ஒரு எலியைப் பார்ப்பது போல் பார்க்கிரார்கள். இங்கே உங்களுக்கு பிடித்த பிடிக்காத எந்த இன்ஸெக்ட் டும் போடலாம்.என்ன ஆகீயிருக்கிறது தெரியுமா?குழாய்த் தண்ணீர் நிரம்பி வழிந்து தரையை ஊடுருவி(அப்படிக்கூட போகுமா) கீழ் வீட்டுக்கு சீலிங்கில் ஐக்கியமாகி , ஊறி, சொட்டு சொட்டு சொட்டுது பாரு இங்கே!! என்று மஞ்சள் கலரில் அவர்களை எழுப்பி, அழைக்கஅவர்கள் மஞசள் மகிமை அறியாதவர்கள் அல்லவா?பயந்து விட்டார்கள்.நல்ல வேளை .... என்னோட முன்னோர்கள் செய்த புண்ணியம் ,,911 கூப்பிடலை. நான் பிழைத்தேன்.

என் முகம் இந்த astrix comic character மாதிரி கலர் மாறிக் கொண்டே இருந்திருக்கனும்.I was mortified!!அவஙக என்ன சொன்னாஙக தெரியுமா/ OH?! Momm? அப்படின்னு சிரிச்சுட்டு போனார்கள்.அதிலெருந்து கீழெ எங்க வண்டியை எடுக்கும்போது அவர் பார்க்க நேர்ந்தால் கொஞசம் தள்ளியெ நின்று புன்னகை செய்து விட்டு போய் விடுவார்.இது தான் இந்த மசாலா மாமின் கதை.


பழைய பின்னூடங்கள்:;

பரவாயில்லை மனு, துளசி உங்க ப்ளாகிற்கு ரெகுலர் விசிட்டர் ஆகிட்டாங்க போல் இருக்கு(காதிலே இருந்து புகை, தெரியுதா?).காமெடியிலே பிச்சு உதறுவீங்க போல இருக்கே, நல்லாவே காமெடி வருது. கொஞ்சம் என்னையும் நினைவிலே வச்சுக்கோங்க. என் மெயில் 2-ம் வந்ததா?
>ஹெல்லொ கீதா, இப்போ காமெடி மாதிரி தெரியரது. அப்பொ அப்படி இல்லை. திருப்பி ஊருக்கே போய்விடலாம் சாமினு நினைச்சேன். என்னப்பா, காது புகை. thulasi is very caring. and I do not leave her alone. mail pottu romba thontharavu thaan.seyven. niinga enna kuraicஹ்alaa/ evvalavu ezuthiyaachu? நன்றி கீதா.
<