Sunday, July 11, 2010

உலகின் மிக வயதான மரங்கள்





மரங்களே அழகு.


பசுமைக்கும்

நிழலுக்கும்

உறுதிக்கும்

நிலைத்து நிற்பதற்கும் ஒரு சான்றாக இயற்கையின் படைப்பு.

உலகின் பல்வேறு பாகங்களின் மரங்கள்,நூற்றாண்டு காலங்களாக நிற்கும் மரங்களைத் தேடினேன்.

தெடியதி கிடைத்தது ஒரு ஆலிவ் மரம்.

இரு இடி வாங்கிய சியெர்ரா நவாடா என்கிற இடத்தில் இருக்கும் இன்னோரு மரம்.

மெக்ஸிகோவில் இருக்கும் இன்னோரு மரம்.

பறைவைகளொடு மனிதர்களும் அடைக்கலம் கொண்டிருக்கும் இன்னோரு மரம்.



இவைகள் பாதுகாக்கப்பட்டு வரும் மரங்கள்.

நம் ஊரிலும் சில மரங்களைப் பார்த்தேன்.



குறித்துவைத்த மரங்களைப் படம் எடுக்கப் போன போது,

அவை பல வேறூ காரணங்களுக்காக,

மின்கம்பிகளுக்காக,

தொலைபேசிக் கம்பங்களுக்காக,

எல்லாவற்றுக்கும் மேலாக தொலைக்காட்சி தனியார் கேபிள் லைன்களில் சிலமரங்கள் தூக்குப் போட்டுக் கொண்ட காட்சியையும் பார்த்தேன்.

படங்களுக்ககவும் ஒரு பதிவு வேண்டுமே.

Sunday, June 20, 2010

வில்லிபுத்தூர் ஸ்ரீ.: செடோனா படங்கள். 2007

வில்லிபுத்தூர் ஸ்ரீ.: செடோனா படங்கள். 2007

பகவானின் சரணாரவிந்தங்களில் இந்தப் பதிவு வலைப்பூவாக இருக்கட்டும்,.

செடோனா படங்கள். 2007





பகவானின் சரணாரவிந்தங்களில் இந்தப் பதிவு வலைப்பூவாக இருக்கட்டும்,.

''லேட்  ஃபார்  ட்ரெயின் கஃபே ''
இப்படி  ஒரு  ஹொட்டெல் செடோனா  ஊரில். எல்லாமெ  விதமான கலாசாரங்களின் பிரதிபலிப்பு.


முதல் ,ஆதிமுதல் காலத்திலிருந்து அங்கே வாழ்ந்து வந்த சிவப்பு இந்தியர்கள்,
அவர்களின்  உண்மை  முகங்களை தொலைத்தாலும்,


சில  வழிகளில் இன்னும் தங்களின்  பாரம்பரியத்தைக் காப்பாற்றி   வருகிறார்கள்.
அங்கே  படத்தயாரிப்பாளர்களும்   ஏகப்பட்ட   தடயங்களை விட்டுச் சென்றிருக்கிறார்கள். அதில் மேலே  இருக்கும் படமும் ஒன்று.
 
உண்மையாகவே  மயக்கக் கூடிய  இடம்.


Friday, June 18, 2010

2007 ஆம் ஆண்டின் சில படங்கள்.

க்ராண்ட்   கான்யான். அங்கே எடுத்த படங்கள் சில இங்கே.




பகவானின் சரணாரவிந்தங்களில் இந்தப் பதிவு வலைப்பூவாக இருக்கட்டும்,.
Posted by Picasa

Wednesday, April 21, 2010

பொழுது போனதோ?

cல் இன்ஸ்டிட்யுட்.
மூன்று மாடிகளும் பார்த்து, ஒரு கூடை, ஒரு பிள்ளயார், ஒரு சிப்பி(எல்லாம் சேர்ந்து 30ரூபாயில் அடங்கி விடும்.)

அடுத்த படையெடுப்பு ஸ்பென்சர் கட்டிடம். அங்கே போய் இருக்கும் கடைகளைப்
பார்த்துவிட்டு ஒன்றும் வாங்காமல்---எல்லாம் பட்ஜெட்டுக்கு மேல் இருக்கும்.
அடுத்து நடந்து ஹிக்கின்பாதம்ஸ் வருவோம்.
நடுவில் கொறிக்க ஏதாவது உண்டு.
ஹிக்கின்ஸில் குழந்தைகள் பக்கம் இப்போது போலவே நல்ல புத்தகங்கள் இருக்கும்.
ஒன்றொன்றாகப் படித்து விட்டு கடைசியில் ஒரு மனதாக
லேடிபேர்ட் புஸ்தகம் ஓன்றும் (5ரூ) டின்டின் புஸ்தகம்(18ரூ) ஒன்றும் வாங்கி வருவோம்.
ஸ்பெஷல் டிரீட் ஆட்டொவில் வீடு வருவதுதான்.
பிறகு வீடே கலகலப்பாகி விடும். முதலில் பெரிய பாட்டியிடம் வாங்கி வந்த பொருட்களைக் காண்பிக்க வேண்டும்.
பிறகு சின்னப் பாட்டியிடம்(ஆங்கிலம் படித்த பாட்டி) சொல்ல வேண்டும். அவர்கள்
இருவரும் அவசியமான கேள்விகளைக் கேட்டு
இவர்கள் மூவரும் பதில் சொன்ன பிறகுதான் படிக்கும் படலம்.
இதுபோல் சேர்ந்த புத்தகங்கள் பொக்கிஷங்கள்.
இவைகளைத் தவிர லெண்டிங் லைபிரரிப் புத்தகங்கள் திருப்பிக் கொடுக்கும் நாளுக்கு முன்னால்
காணாமல் போகும்.
டியூ டேட் முடிந்து பள்ளிக்ககூடம் திறந்த பிறகு, நான்தானே
இருப்பதை திருப்பி கொடுக்கப் போக வேண்டும்!

எங்க வீட்டு மூன்று தலை முறைக்கும் நான்தான் லைபிரரி உமன்.

பெரிய பாட்டியோட வடுவூர் துரைசாமி,

மாமியாருடைய லக்ஷ்மி,தேவன், கல்கி புத்தகங்கள்,
என்னுடைய சிவசங்கரி,சுஜாதா, பி வி ஆர், சாவி ,
வாசந்தி
இதற்குப்பிறகு பசங்களோட புக்ஸ்.
இப்பவும் சொல்லுவார் அந்த லைபிரரிசொந்தக்காரர்
105 ருபா புஸ்தகம் வரவே இல்லைம்மா என்று.
நான் என்ன சொல்லுவேன்?

புத்தகங்கள் பைண்டு செய்து ஸமத்தாக அலமாரியில் இருக்கிறது என்றா?
அதற்குப் பிறகு அவர் கடைக்கே நிறைய புத்தகங்களை
சும்மாவாகவே கொடுத்து சரி பண்ணி விட்டேன்.
அதுவும் இந்த புத்தகங்கள்,
லியான் யுரிஸ், அலிஸ்டர் மாக்லீன்
ஹாட்லி சேஸ்,
ஹரால்ட்ராபின்ஸ்,
மரியோ பூசோ,
இர்விங் வாலஸ்,
ஆர்தர் ஹெய்லி,
இயன் ஃப்ளெமிங்,
பீட்டர் பென்சிலி
மேலும் சிலருடைய புத்தகங்களை
இடம் பற்றாக் குறையால் கிலொ கணக்கில் கொடுக்க வேண்டி வந்தது!!. அறிவு தானம் நல்லதுதானே1
அதனாலே பரவாயில்லை என்று நாங்களே சமாதானப்படுத்திக் கொண்டோம்.
இன்னும் சேர்த்துப் பிரிந்த பழைய ஒலி
நாடாக்கள். ஹ்ம்ம்.

Tuesday, April 20, 2010

திருவாடிப்பூரத்து ஜகத்துதித்தாள் வாழியே.
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே.
ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயியின் துணவி, ஸ்ரீரங்கனை மணந்தவள் அவள் ஓரடி முன்வந்து வாழ்த்திய முனி, எதிராஜன்,நமது உடையவர், ஸ்ரீ ராமானுஜர் அவதரித்த சித்திரைத் திருநாள், திருவாதிரை நட்சத்திரம் இன்று.

இராம லக்க்ஷ்மணர்களில் லக்ஷ்மணரின் அவதாரம் தான் ஸ்ரீ ராமானுஜர்.மஹாவிஷ்ணுவின் , நின்றால் குடையாம், இருந்தால் சிங்காசனமாம் கிடந்தால் புல்கும் அணையாம் ஆதிசேஷனே லக்ஷ்மணன். சேவா நாயகன்.
அவனே ஸ்ரீராமானுஜராக வந்து மக்கள் உய்ய வந்த மாமுனி.
இந்த அவதார புருஷனின் தோற்ற முக்கியத்துவமே அனைவரையும் பகவான் வழிப்படுத்துதலே.
கடவுள் இருக்கிறார் அவரை அணுக எல்லோருக்கும் உரிமை உண்டு. சில நபர்களுக்கு மட்டும் சொந்தம் இல்லை அவன் நமம் என்பதைத் திருக்கோஷ்டியூர் கோபுரம் மேல் நின்று உரக்க அறிவித்தவர்.

ஜாதி பேதம் பகவானுக்கு இல்லை என்பதைத் தன் வாழ்நாள் முழுவதும் தானே அவ்வழியில் நடந்து நிரூபித்தவர்.
மேலும் சொல்ல எத்தனையோ உண்டு.
அதைச கற்றறிந்த   பெரியோர் சொல்லியும் இருக்கிறார்கள்.
இந்த நாளைப் பதிவு செய்யவே இந்த எழுத்து.
வாழி உடையவர் நாமம்.
நாராயணனையே வாராய் என் செல்லப் பிள்ளாய் என்றழைத்த பெருமான் .அவரை என்றும் மறவாமல் இருக்கும் மனதைக்  கொடுக்க அந்த ஸ்ரீமன் நாரயணனையே துதிக்கிறேன்.

Tuesday, March 30, 2010

பங்குனி உத்திரம்,பவுர்ணமியும் தெய்வத்திருமணங்களும்

திரு முருகன் வள்ளி தெய்வானை
ஸ்ரீ  கற்பகாம்பாள் கபாலீஸ்வரர்
SRIRANGAM DHIVYA THAMBATHIYAR
அறுபத்துமூவர் பூர்த்தியான அடுத்த நாள் கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் அம்மா கையைப் பிடித்துப் பௌர்ணமி நிலவு ஒளிவீசத் திருமணம் செய்கிறார்.ஸ்ரீ ரங்கராஜன் ஸ்ரீரங்கத்தில் தாயார் ரங்கநாயகியுடன் சேர்த்தி கண்டருள் புரிகிறான்.




திரு முருகனோ தெய்வயானையின் கரம் பிடித்து ,சுற்றம் சூழத் திருமணக் கோலத்தில் காட்சி தருகிறான்.



இந்தத் திருமணங்களைக் காண முழுநிலவோ தன் பூர்ணபொலிவுடன் விரைந்து வந்து

அத்தனை திருமணங்களுக்கும் சாட்சியாக நிற்கிறான்.



இந்த நல்ல நாளில் அனைவரும் மன சஞ்சலங்கள் அனைத்தும் நீங்கி,

தெய்வத் திரு தம்பதிகளைப் போலவே மனம் ஒன்றி,

மகிழ்ச்சியாக இருப்போம்.

அப்படி இருக்க அவன் பாதங்களே சரணம்.

Wednesday, February 24, 2010

திருமிகு வெங்கடேஸ்வரா பக்தி சானல்

இந்தப் புகைப்படங்கள் அனைத்தும் ஸ்ரீ வெங்கடேஸ்வர பக்தி கானளிளிருந்து எடுக்கப் பட்டவை.
நல்லதொரு சேவை செய்து வரும் திருமலா திருப்பதி தேவஸ்தானத்திற்கு மிகவும் நன்றி.


அதுவும் கோவிந்தனை நேருக்கு நேர் காலை வேளைகளில் காணக் கிடைக்கும் பாக்கியத்திற்கு எவ்வளவு கடமைப் பட்டிருக்கிறேன் என்று பிரமிப்பாக இருக்கிறது.

வீதியூ காட்சிகள் திருமலையை வளம் வந்து அங்கேயே இருக்கும் ஒரு புனித உணர்வை ஏற்படுத்துகின்றது.
இன்றும் பத்ராச்சலத்திளிருந்து ஸ்ரீராமநவமி உற்சவத்தை நேரடியாக ஒளி பரப்பப் போகிறார்கள்.
கலியுகவரதன் பாதங்களுக்கு நமஸ்காரம்.

Friday, September 12, 2008

திரு அருள்மிகு அகிலாண்டேஸ்வரி தாயார்.

பதிவர் நண்பர் யு.எஸ். தமிழன் வேண்டுகோள்படி திருச்சி,திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி
அம்பாள், இங்கே வந்திருக்கிறாள்.

எனக்கும் சக்திமிகுந்த இந்தத் தாயை நினைக்க துதிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது.

Thursday, September 07, 2006

சின்ன கிருஷ்னனும் சின்ன ராமனும்

நம்மில் சில பேர், சாமிக்கு ஏன் ஏதாவது படைக்க வேண்டும்?

நாம் சாப்பிடும் பொருட்களை அவர் சாப்பிடப் போகிறாரா.
ராத்திரி வேளையில் அவருக்கு எதற்கு ஏகாந்த சேவையும்
நாதஸ்வரமும்

நீலாம்பரி இசையும் /அவர் தூங்கப்போகிறாரா/?
டெல் மி ஒய் என்று முன்னால் சிறுவர் சிறுமியருக்கு ஒரு
செலக்ஷன் of குட் க்வெஸ்டியன்ஸ் அண்ட் ஆன்சர்ஸ்
வரும்.
ஆனால் அதில் நம்ம சாமியைப் பற்றி ஒண்ணும் கிடைக்காது.
நமக்கு இவ்வளவு முன்னோடிகள் இருக்கும்பொதே சில கேள்விகளுக்கு பதில் தெரிவதில்லை.
வரப்போகும் தலைமுறை கேட்கும் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வது?
ஏனெனில் நமக்குத் தெரிந்ததும் கொஞ்சம் தான்.
அப்போதுதான் இன்று காலை இந்தப் பாடலைக்
கேட்க நேர்ந்தது.

வடமொழியில் இருந்தாலும் புரிந்தது.
எனக்குத் தெரிந்தவரை அதன் பொருளைக் கொடுத்து இருக்கிறேன்.

யார் சொல்வது ராமன் சாப்பிடவில்லை என்று.?
நீங்களும் சபரியின் அன்போடு கொடுத்தால்
அவன் ஏற்றுக்கொள்ளுவான்.

யார் சொல்வது கிருஷ்ணன் தூங்குவதில்லை என்று.
நீங்களும் யசோதா போல் அவனுக்குத் தாலாட்டுப் பாடினால் அவன் தூங்குவான்.

யார் சொலவது அவன் பாடி ஆடிக் களிக்க
மாட்டான் என்று,
நீங்களும் கோபிகளுடன் சேர்ந்தால்
பக்தியில் அவன் பாடி ஆடுவான்.
அவர்களைப் போலப் பாடிப் பழகுங்கள்.
இதே போல் போகிறது.

இனிமையான பாடல்.
சில கேள்விகளுக்குப் பதில் இப்படித்தான் கிடைக்கும்.
இதை நம்பினால் போதும் என்று எனக்குத்
தோன்றுகிறது.

Tuesday, September 05, 2006

வலைப் பயன்


வலையில் நண்பர்கள் கிடைப்பது

நடப்பதுதான்.



எனக்குக் கிடைத்த நண்பர்கள் எல்லோருக்கும் நண்பர்கள்.

அதிலேயும் ஸ்பெஷலாக நமது குழந்தைகளின் நண்பர்களாக இருந்துவிட்டால் அதை விட சந்தோஷம் வேறு ஏது?

அப்படியும் சில நண்பர்கள் நண்பிகள் கிடைத்துள்ளனர்.

உண்மையான, நம்மை முழுவதும் புரிந்து கொண்ட

தோழமை கிடைத்ததற்கு வலைக்கும் தமிழ்மணத்திற்கும்,

தேன்கூட்டிற்கும் நன்றி.

Monday, September 04, 2006

பொன்னோணம் வாழ்த்துக்கள்











பதிவர்களுக்கும் எல்லோருக்கும் திருவோண நல் வாழ்த்துக்கள்.